இந்தியாவில் வெளியிடப்பட்டது BMW iX xDrive50: விலை ரூ 1.4 கோடியில் இருந்து தொடங்குகிறது
published on மார்ச் 22, 2024 06:08 pm by anonymous for பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்
- 44 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரேஞ்ச்-டாப்பிங் வேரியன்ட் பெரிய 111.5 kWh பேட்டரி பேக் மற்றும் 635 கிமீ WLTP-கிளைம்டு ரேஞ்ச் உடன் வருகின்றது.
-
BMW iX ஆனது புதிய ரேஞ்ச்-டாப்பிங் 'xDrive50' வேரியன்ட்டைபெறுகிறது.
-
இது என்ட்ரி லெவல் xDrive40 வேரியன்ட்டை விட விலை ரூ.19 லட்சம் கூடுதலாக உள்ளது.
-
WLTP-கிளைம்டு 635 கி.மீ ரேஞ்ச் உடன் கூடிய பெரிய 111.5 kWh பேட்டரி பேக் இந்த காரில் உள்ளது.
-
டூயல் மோட்டார் செட்டப் உடன் 523 PS மற்றும் 765 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.
-
பெரிய 22-இன்ச் அலாய் வீல்களை மட்டுமே புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.வேறு எந்த வசதிகளும் மாற்றப்படவில்லை.
BMW iX 1.4 கோடி (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) விலையில் 'xDrive50' என்ற புதிய டாப்-ஸ்பெக் வேரியன்ட்டை பெற்றுள்ளது. ஏற்கனவே உள்ள என்ட்ரி லெவல் xDrive40 வேரியன்ட்டின் விலையை விட இதன் விலை 19 லட்சம் ரூபாய் கூடுதலாக இருக்கின்றது. டாப்-எண்ட் xDrive50 ஆனது ஒரு பெரிய பேட்டரி பேக் மற்றும் அதிக சக்தி வாய்ந்த மோட்டாரை கொண்டுள்ளது. இதன் மூலம் செயல்திறன் மற்றும் கிளைம்டு ரேஞ்ச் ஆகியவை மேம்பட்டுள்ளன.
வடிவமைப்பு மற்றும் வசதிகள்
புதிய வேரியன்ட்டின் வடிவமைப்பு ஏற்கனவே இருக்கும் xDrive40 வேரியன்ட் உடன் ஒப்பிடும் போது பெரிய அளவில் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருக்கின்றது. இருப்பினும் டாப்-எண்ட் xDrive50 ஆனது 22-இன்ச் அலாய் வீல்களை ஸ்டாண்டர்டாக பெறுகிறது.
இதில் 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 14.9-இன்ச் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் 18 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜிங் மற்றும் பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகியவற்றுடன் வருகின்றது.
மேலும் படிக்க: BYD சீல் வெளியிடப்பட்டதில் இருந்து 500 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது
பாதுகாப்புக்காக அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) களின் தொகுப்பைக் கொண்டுள்ளது.
செயல்திறன்
பிஎம்டபிள்யூ iX xDrive50 ஆனது ஒரு பெரிய 111.5 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது WLTP-கிளைம்டு 635 கிமீ ரேஞ்சை வழங்குகிறது. இது இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்களுடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் முன் மற்றும் பின் ஆக்ஸில்களில் இணைக்கப்பட்டு AWD செட்டப்பை உருவாக்கும். இது 523 PS மற்றும் 765 Nm ஐ அவுட்புட்டை கொடுக்கும். இது 0-100 கிமீ/மணி வேகத்தை 4.6 வினாடிகளில் எட்டுவதை சாத்தியமாக்குகிறது.
சார்ஜிங் விவரங்கள்
iX xDrive50 ஆனது 195 kW வரை ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றது.
சார்ஜிங் நேரங்கள் இங்கே:
195 kW DC சார்ஜர் – 10% - 80% 35 நிமிடங்களில்
50 kW DC சார்ஜர் – 10% - 80% 97 நிமிடங்களில்
22 kW ஏசி சார்ஜர் - சுமார் 5.5 மணி நேரத்தில் 100%
11 கிலோவாட் ஏசி சார்ஜர் - சுமார் 11 மணி நேரத்தில் 100%
மேலும் படிக்க: ஃபோக்ஸ்வேகன் ID.4 இந்தியா வெளியீட்டு காலவரிசை வெளியிடப்பட்டது. இது Hyundai Ioniq 5 க்கு போட்டியாக இருக்கும்
BMW iX xDrive50 ஆனது மெர்சிடிஸ் EQE எஸ்யூவி, ஜாகுவார் ஐ-பேஸ் மற்றும் ஆடி Q8 இ-ட்ரான் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மேலும் படிக்க: BMW iX ஆட்டோமெட்டிக்