• English
  • Login / Register

பிஎம்டபிள்யூ, X3 -க்கு புதிய டீசல் கார் வேரியன்ட்களை சேர்க்கிறது

modified on மார்ச் 31, 2023 06:56 pm by ansh for பிஎன்டபில்யூ எக்ஸ்3

  • 41 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த சொகுசு SUV புதிய என்ட்ரி லெவல் x லைன் காரைப் பெறுகிறது

BMW X3

  • இதன் டீசல் இன்ஜின் 190PS மற்றும் 400Nm ஆற்றலை வெளிப்படுத்தும்.

  • இந்த யூனிட் எட்டு வேக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • இரண்டுமே ஆல்-வீல் டிரைவ் கொண்ட xடிரைவ் வகைகளாகும்.

  • இதன் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை, சில அழகியல் கூறுகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.

  • X3 - இப்போது  ரூ. 67.50 லட்சம் முதல் ரூ. 69.90 லட்சம் வரை (எக்ஸ் ஷோரூம்)  விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் SUVயின் பெட்ரோல் கார்களை நிறுத்திய பிறகு, BMW X3 இன் கார் வரிசையை மறுசீரமைத்துள்ளது கார் தயாரிப்பாளர் இப்போது அதை இரண்டு டீசலில் இயங்கும் வகைகளில் வழங்குகிறது, அவற்றில் ஒன்று X3 சொகுசு பதிப்பை மாற்றியுள்ளது.

விலைகள்


வேரியன்ட்ஸ்


விலைகள் (எக்ஸ்-ஷோரூம்)


X டிரைவ் 20d xலைன்


ரூ. 67.50 லட்சம்


X டிரைவ் 20d  M ஸ்போர்ட்


ரூ. 69.90 லட்சம்

X3 xலைன் வேரியன்ட், தற்போதுள்ள ஆடம்பர எடிஷனை  இடம் மாற்றியுள்ளது மற்றும் அதற்கு மேல் 20,000 ரூபாய் பிரீமியமாக கிடைக்கிறது. இந்த இரண்டு வேரியன்ட்களும் டீசலில் இயங்குகின்றன மற்றும் பெட்ரோல் பவர்டிரெய்ன் இதற்கு இல்லை.

என்ன வித்தியாசம்?

BMW X3
இதன் வடிவமைப்பின் அடிப்படையில், xலைன் காரில் எதுவும் மாறவில்லை. LED லைட்டிங் கூறுகள் மற்றும் 19-அங்குல அலாய் வீல்கள் போன்ற தரமான உபகரணங்களுடன் எஸ்யுவி வருகிறது. இதன் கேபினில் 12.3-அங்குல டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, திரீ ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஒரு பனோரமிக் கிளாக் ரூஃப், ஹர்மன் கார்டன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ரியர் வியூ கேமரா ஆகியவை இதில் பொருத்தப்பட்டுள்ளன.


M ஸ்போர்ட் கார் வெளிப்புறத்தில் சில ஸ்போர்டியர் ஸ்டைலிங்குடன் வருகிறது. ஏர் இன்லெட் மற்றும் இன்செர்ட்கள் பளபளப்பான கறுப்பு நிறத்தில் உள்ளன. கிட்னி கிரில், ரூஃப் ரெயில்கள் மற்றும் விண்டோ கிராபிக்ஸ் ஆகியவை பளபளப்பான கருப்பு நிறத்தில் கிடைக்கின்றன. M ஸ்போர்ட் காரில் ஸ்போர்ட் இருக்கைகள், M லெதர் இருக்கைகள், M இன்டீரியர் டிரிம், டைனமிக் டேம்பர் கண்ட்ரோல், சரவுண்ட் வியூ கேமரா மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவையும் உள்ளன.
மேலும் படிக்க: புதிய தலைமுறை BMW X1 முன்பிருந்த SUV ஐவிட மேம்பட்டது, இப்போது இந்தியாவில் ரூ 45.9 லட்சத்தில் இருந்து விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
பாதுகாப்பைப் பொறுத்தவரை, கார்களுக்கு இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆறு ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக் அசிஸ்ட், டைனமிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஐசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்கள், கார்னரிங் பிரேக் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றைப் இந்த கார் பெறுகிறது.

பவர்டிரெயின்

X3 இப்போது 2-லிட்டர், நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜினுடன் வருகிறது, இது 190PS மற்றும் 400Nm ஐ வெளிப்படுத்தும். இந்த டீசல் இயந்திரம் எட்டு வேக ஆட்டோமேட்டிக் ஸ்டெப்ட்ரானிக் ஸ்போர்ட் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது, மேலும் எஸ்யூவி ஆனது BMW xடிரைவ் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தைப் பெறுகிறது. SUV ஆனது 7.9 வினாடிகளில் 100 kmphஐ வேகத்தை எட்டும் மற்றும் 213kmph வேகத்தில் செல்லும்.
மேலும் படிக்க: BMW இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட X7 ஐ அறிமுகப்படுத்துகிறது

252PS, 2-லிட்டர், டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 2022 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபேஸ்லிப்டட்  X3 இனிமேல் கிடைக்காது.

போட்டியாளர்கள்

ஆடி Q5, வோல்வோ XC60 மற்றும் வரவிருக்கும் மெர்சிடீஸ்-பென்ஸ் GLC போன்றவற்றுக்கு பிஎம்டபிள்யூ X3 போட்டியாக உள்ளது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on BMW எக்ஸ்3

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience