சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

BMW 3 – சீரிஸ், 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

published on ஜனவரி 21, 2016 11:30 am by manish for பிஎன்டபில்யூ 3 series 2014-2019

வார இறுதியில் தங்களது காரை எடுத்துக் கொண்டு பறக்கும் பழக்கமுள்ளவர்களிடம் உங்கள் உள்ளம் கவர்ந்த கார் எது என்று கேட்டால் BMW 3 - சீரிஸ் கார்களை தான் சொல்லுவார்கள் . அந்த அளவுக்கு உலக புகழ் வாய்ந்த தனது 3 - சீரிஸ் கார்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு ஒன்றை வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை கிரேடர் நொய்டாவில் நடைபெற உள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2016 ல் காட்சிப்படுத்த ஜெர்மானிய கார் தயாரிப்பாளர்களான BMW நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த 2016 IAE ல் , 3 -சீரிஸ் கார்களைத் தவிர தனது 7 - சீரிஸ் மற்றும் X1 வாகனங்களையும் BMW நிறுவனம் காட்சிக்கு வைக்க உள்ளது.

இந்த கார், ஏற்கனவே உள்ள 3 - சீரிஸ் கார்களின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் (பேஸ்லிப்ட்) என்பதால் சிறிய அளவிலான மாற்றங்களே செய்யப்பட்டுள்ளது முகப்பு விளக்குகள் , டெயில் விளக்கு க்ளஸ்டர் மற்றும் முன்புற பம்பர்கள் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.

உட்புறத்தை பொறுத்தவரை , AC வென்ட் , மத்திய கன்சோல் மற்றும் AC கண்ட்ரோல் பகுதிகள் மீது குரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. ப்ளோர் கன்சோலில் உள்ள கப் ஹோல்டருக்கு ஸ்லைடிங் லிட் (மூடி) கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதய 3 - சீரிஸ் மாடலில் பயன்படுத்தப்பட்டு வரும் நான்கு - சிலிண்டர் , 2.0 லிட்டர் ட்வின்பவர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் தான் இந்த மேம்படுத்தப்பட்ட வெர்ஷனிலும் பொருத்தப்பட்டுள்ளது. 184Bhp அளவு சக்தி மற்றும் 380 Nm அளவு டார்கை உற்பத்தி செய்யும் அதிக ஆற்றல் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த BMW - 3 சீரிஸ் கார்கள் , தனது முக்கிய போட்டி கார்களான பென்ஸ் C - க்ளாஸ் மற்றும் ஆடி Q4 ஆகிய கார்களின் என்ஜின் ஆற்றலுடன் ஒப்பிடுகையில் அதிக ஆற்றலை வெளிப்படுத்தி அவைகளை பின்னுக்கு தள்ளி விடுகிறது. அதே போல் ட்ரான்ஸ்மிஷன் வசதியும் தற்போதய 3 - சீரிஸ் கார்களில் உள்ள அதே 8- வேக ZF ட்ரேன்ஸ்மிஷன் வசதி தான் இந்த மேம்படுத்தப்பட்ட மாடலிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது . விரைவில் அறிமுகமாக உள்ள BMW 1 -சீரிஸ் செடான் கார்களைப் போலவே இந்த 3 – சீரிஸ் பேஸ்லிப்ட் செடான் கார்களும் இந்நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையிலேயே 50% பாகங்களுக்கு மேல் தயாரிக்க பட உள்ளன.

மேலும் வாசிக்க

m
வெளியிட்டவர்

manish

  • 13 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது பிஎன்டபில்யூ 3 Series 2014-2019

Read Full News

trendingசேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்
Rs.2.03 - 2.50 சிஆர்*
எலக்ட்ரிக்
Rs.41 - 53 லட்சம்*
Rs.11.53 - 19.13 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை