BMW i8 சைபர் பதிப்பு படங்கள் வெளியிடப்பட்டது

published on டிசம்பர் 18, 2015 04:11 pm by manish for பிஎன்டபில்யூ ஐ8

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

BMW i8 Cyber Edition

இதுவரை BMW i8 அவ்வளவாக பிரபலமடையவில்லையே என்று அதை குறித்து அரிதாக ஒரு சிலர் நினைப்பது போல நீங்களும் கருதுவதானால், இதோ உங்களுக்கான ஒரு நல்ல செய்தி. எனர்ஜி மோட்டார் ஸ்போர்ட்டிற்கான இந்த ஹைபிரிடு ஸ்போர்ட்ஸ் காரை சந்தையில் வெளியிட்ட பிறகு, அதற்குரிய பாடிகிட்ஸ் மற்றும் பாகங்களை, இந்த ஜப்பானை அடிப்படையாக கொண்ட நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதிக கவர்ச்சிகரமாக தெரியும் மறுவடிவமைப்பை பெற்ற முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர், டவுன்ஃபோர்ஷை அதிகரிக்கும் வகையிலான ஒரு பின்பக்க விங், மேம்படுத்தப்பட்ட முன்பக்க மற்றும் பின்பக்க பெண்டர்கள், பக்கவாட்டு ரேர்-வ்யூ மிரர்களுக்கான புதிய உறைகள் உள்ளிட்ட பல்வேறு அழகியல் அம்சங்கள் மற்றும் செயல்பாட்டு மேம்பாடுகளை கொண்ட மேம்படுத்தப்பட்ட i8-யை, இந்நிறுவனம் காட்சிக்கு வைத்துள்ளது.

BMW i8 Cyber Edition Rear

இந்த காரில் ஒரு முழு பாடி சில்வர் கிரோம் உறையை கொண்டுள்ளது. இந்த உறையை பார்த்தால், 21 இன்ச் அலாய்களின் மீது ஜாக்கிரதையாக ஓடும் இந்த கார், அதை அதிக செயல்திறன் கொண்ட பிரில்லி P-ஜீரோ டயர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. அதில் அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கும் போது, காரின் மேம்பாடுகள் முடிவுக்கு வந்து விடுகின்றன. ஏனெனில் இந்த காரிலும் ஏற்கனவே இருந்த பிளெக்-இன் பெட்ரோல் ஹைபிரிடு ஆற்றலகத்தையே தொடர்ந்து பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஆற்றலகம் மூலம் 362bhp ஆற்றலை வெளியிட்டு, 2.1 லிட்டர்களுக்கு 100 கி.மீ. என்ற ஒரு கவர்ச்சிகரமான எரிபொருள் சிக்கன புள்ளிவிபரத்தை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சிறப்பம்சங்களை கொண்ட ஒரு BMW i8-யை, 2016 டோக்கியோ ஆட்டோ ஷாலோனில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. இந்த ஹை-டெக் i8-யை கருத்தில் கொண்டு ஏற்கனவே அதை மேம்படுத்த வேண்டும் என்று BMW, இது போன்ற ஒரு முயற்சியில் ஈடுபட்டு, ஒரு ஹைட்ரஜன் ஃப்யூயல்-செல் மூலம் இயக்கப்படும் i8 முன்மாதிரி வாகனத்தை காட்சிக்கு வைப்பதற்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்பே பணிகளை தொடங்கியது. இந்த காரில் மற்ற அழகியல் மேம்படுத்தல்களுக்கு இடையே ஒரு மெட்டில் பிளாக் நிறத்திட்டத்தையும் (அல்லது அது இல்லாமலும் இருக்கலாம்) பெறலாம் என்று தெரிகிறது.

BMW i8 Cyber Edition

இதையும் படியுங்கள்

ஒப்பீடு: ரேஞ்ச் ரோவர் இவோக் vs வோல்வோ XC60 vs BMW X3

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது பிஎன்டபில்யூ ஐ8

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஹைபிரிட் சார்ஸ்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience