• English
  • Login / Register

M4 GTS-யின் 700 யூனிட்களை மட்டுமே BMW உருவாக்குகிறது

published on டிசம்பர் 30, 2015 02:00 pm by akshit

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதுடெல்லி:

BMW M4 GTS

M4-ன் சிறந்த தயாரிப்பான M4 GTS கூபேயின் தயாரிப்பை, நாள் ஒன்றிற்கு 5 மட்டுமே என்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, ஒரு சமீபகால ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

இதன்மூலம் அடுத்தாண்டின் மார்ச் முதல் டிசம்பர் வரையிலான இடைப்பட்ட காலத்தில், மொத்தம் 700 மாதிரிகள் மட்டுமே உருவாக்கப்படும். இதில் அமெரிக்காவிற்கு 300, கனடாவிற்கு 50, இங்கிலாந்திற்கு 30 என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை உலகின் மற்ற பகுதிகளுக்கும் அளிக்கப்பட உள்ளன. M6 GT3 மற்றும் M135i போன்ற கப் ரேஸ் கார்கள் தயாரிக்கப்பட்ட இதே இடத்தில், மேற்கண்ட இந்த லிமிடேட்-பதிப்பு மாடலின் தயாரிப்பும் நடைபெற உள்ளது.

BMW M4 GTS

இதில் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், வழக்கமான 4-சீரிஸ் கூபேயை போலவே, M4 GTS-ன் தயாரிப்பு பயணமும் துவங்குகிறது. அதன்பிறகு BMW-ன் M பிரிவிற்குள் நுழைந்து, வாட்டர் இன்செக்ஷன் சிஸ்டம், கார்பன் சிராமிக் பிரேக்குகள், அட்ஜஸ்டபிள் M காயிலோவர் சஸ்பென்ஸன், டைட்டானியம் எக்சிஸ்ட் சிஸ்டம் மற்றும் மிச்செலின் பைலட் ஸ்போர்ட் கப் 2 டையர்களை அணிந்த புகழ்பெற்ற M லைட்-அலாய் வீல்கள் உள்ளிட்ட அனைத்து சிறப்பு மேம்பாடுகளையும் பெறுகிறது.

அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கும் போது, ஒரு பைடர்போ நேரடி-6 3.0-லிட்டர் என்ஜின் மூலம் கொந்தளிக்கும் வகையிலான 493 குதிரை சக்தி ஆற்றலை வெளியிடுகிறது. இதன்மூலம் 3.7 வினாடிகளில் 0 வில் இருந்து மணிக்கு 100 கி.மீ வேகத்தை எட்டி சேரவும், மின்னோட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட மணிக்கு 305 கி.மீ என்ற அதிகபட்ச வேகத்தையும் பெறுவது எளிதாகிறது. இந்த ஹார்டுகோர் GTS பதிப்பு, ஏறக்குறைய 7 நிமிடங்கள் 28 வினாடிகளில் நூர்பர்க்ரிங் ஓடுதளத்தை கடந்துள்ளதன் மூலம் இன்று வரை உள்ள M3/M4 வரிசையில் உள்ள அதிவேகமான தயாரிப்பாக மட்டும் மாறவில்லை. மாறாக, ஏறக்குறைய 14 மைல் சுற்று வட்டத்தை கொண்ட இந்த ஓடுதளத்தில் ஓடிய பிம்மரின் (BMW) தயாரிப்புகளிலேயே வேகமானதாக திகழ்கிறது.

இதையும் படியுங்கள்

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience