மஹிந்த்ரா, ‘இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ என்ற திட்டம் மற்றும் இந்திய இராணுவம் போன்றவற்றிக்கு BAE நிறுவ னம் ஊக்கம் அளிக்கிறது
published on பிப்ரவரி 18, 2016 03:34 pm by sumit
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
தற்காப்பு, விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறைகளில், சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் BAE சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம், மஹிந்த்ரா குழுமத்துடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக் கொண்டுள்ளது. M777 அல்ட்ரா லைட் வெயிட் ஹௌயிட்ஸர் என்னும் பீரங்கியை உள்நாட்டிலேயே அசெம்பில் செய்து, ஒருங்கிணைத்து, சோதனை (AIT) செய்வதற்குத் தேவையான வசதிகளைச் செய்ய, இந்த பிரிட்டிஷ் நிறுவனம் இந்திய நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது நமக்குப் பெருமையான செய்தியாகும். பல்வேறு நாடுகளில், M777 ஹௌயிட்ஸர் என்னும் இந்த பீரங்கி, பெரும்பாலும் தரைப்படையில் உபயோகப்படுத்தப்படுகின்றது. தற்போது, இது அமெரிக்க மற்றும் கனடா நாடுகளில் இருந்து மற்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
“மஹிந்த்ராவைத் தேர்ந்தெடுத்த பிறகு, எங்களது தேவைகளை இந்நிறுவனத்தின் திறன் நிறைவேற்றுமா என்பதையும், M777 இந்தியா திட்டத்திற்கு இந்நிறுவனத்தின் திறன் சிறந்த மதிப்பை வழங்கும் விதத்தில் உள்ளதா என்பதையும் விரிவாக மதிப்பீடு செய்வோம். எதிர்காலத்தில், இந்தியாவில் BAE சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மூலோபாய பங்காளியாக (ஸ்ட்ராஜிக் பார்ட்னர்) மஹிந்த்ரா நிறுவனம் உயர முடியும்,” என்று BAE நிறுவனம் ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்தது.
BAE சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் வெப்பன் சிஸ்டம்ஸ் பிரிவின் வைஸ் பிரெஸிடெண்டான டாக்டர். ஜோ சென்பில், இந்த ஒப்பந்தத்தைப் பற்றி பேசும் போது, “M777 பீரங்கியை அசெம்பில் செய்து, இண்டெக்ரேஷன் செய்து, டெஸ்ட் செய்யும் வசதிகளை இந்தியாவில் ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பை மஹிந்த்ரா நிறுவனத்திற்கு அளிப்பதில், இந்தியாவில் தற்காப்பு ஆயுத தயாரிப்பில் ஸ்தாபக பங்காளி (ஃபவுண்டிங் பார்ட்னர்) என்ற முறையில் BAE சிஸ்டம் நிறுவனம் பெருமகிழ்ச்சி அடைகிறது. மஹிந்த்ரா ஏற்படுத்தித் தரப்போகும் இந்த வசதி, M777 தயாரிப்பில் ஒரு அடிப்படையான பகுதியாகும். உள்நாட்டிலேயே M777 பீரங்கியின் அசெம்ப்ளி, இண்டெக்ரேஷன் மற்றும் டெஸ்ட் போன்றவை செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதால், இந்திய இராணுவத்திற்கு M777 பீரங்கிக்கான பராமரிப்பு, உதிரி பாகங்கள் மற்றும் சப்போர்ட் போன்றவை உள்நாட்டிலேயே எளிதாகக் கிடைக்கும். இந்த ஒப்பந்த உடன்பாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல, நாங்கள் இரண்டு அரசாங்கங்களையும் தொடர்ந்து ஆதரிப்போம். ‘மேக் இன் இந்தியா’ உற்பத்தி செய்யுங்கள்’ என்ற கொள்கையை ஏற்று, M777 பீரங்கியின் உற்பத்தியை இங்கேயே தொடங்கவுள்ளோம்,” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
‘மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்திற்கு இந்த ஒப்பந்தம் உறுதுணையாக இருக்கும், ஏனெனில், இந்நிறுவனம் 700 மில்லியன் அமெரிக்க டாலர்களை நம் நாட்டில் முதலீடு செய்யத் தயாராகவுள்ளது. ஆயுத உற்பத்தியைப் பொறுத்த வரை, இந்தியா எப்போதுமே தடுமாறிக் கொண்டே இருக்கிறது. எப்போதும், இஸ்ரேல் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்தே நாம் ஆயுதங்களை இறக்குமதி செய்கிறோம். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை இந்தியப்படைத் தளவாடங்கள் உபயோகப்படுத்துவதற்கு, இந்த ஒப்பந்தம் உறுதுணையாக இருக்கும்.
‘இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும்’ திட்டத்தில் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய மஹிந்த்ரா பாதுகாப்பு மற்றும் வான்வெளி பிரிவின் குழுத் தலைவரான திரு. SP ஷுக்லா, “‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மீது, மஹிந்த்ரா மற்றும் BAE சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்களின் கண்ணோட்டம் மற்றும் மதிப்பு ஒரே மாதிரியாக இருக்கிறது. BAE சிஸ்டம்ஸ், உலகளவில் உள்ள மிகப் பெரிய ஆயுத தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். எனவே, இதைவிட சிறந்த பங்குதாரர் எங்களுக்குக் கிடைக்க முடியாது,” என்று கூறினார்.
மேலும் வாசிக்க : டெல்லியில் மஹிந்திரா XUV500 மற்றும் ஸ்கார்பியோ ஆகியவை 1.9L mஹாக் என்ஜின்களை பெறுகின்றன
0 out of 0 found this helpful