ஆடி RS6 மற்றும் RS7 கார்கள், செயல்திறன் மிகுந்த பதிப்புகளை பெறுகிறது
manish ஆல் அக்டோபர் 26, 2015 03:41 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
ஆடி RS6 அவன்த் மற்றும் RS7 ஆகிய கார்களில், 650bhp ஆற்றலையும், 750Nm முடுக்குவிசையையும் அளிக்கும் ட்வின்-டர்போசார்ஜ்டு 4.0 லிட்டர் V8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின், 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டு கிடைக்கிறது. மேற்கூறிய மேம்பாடுகள் அனைத்தும், செயல்திறன் மிகுந்த பதிப்புகளின் பேக்கேஜ்களில் உட்படுத்தப்பட்டுள்ளதால், தரமான RS6 மற்றும் RS7 ஆகியவற்றோடு ஒப்பிடும் போது, 45bhp அதிக ஆற்றலையும், 50Nm கூடுதல் முடுக்குவிசையும் பெற முடிகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட அக்சிலரேஷனின் உதவியோடு, இந்த கார் 0 வில் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை எட்டி சேர 3.7 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. இதன்மூலம் தரமான கார் பதிப்புகளை விட, 0.2 வினாடிகள் வேகமாக செயல்படுகிறது. அதேபோல செயல்திறன் மிகுந்த பதிப்புகளின் மேம்பாடு காரணமாக, அதிகபட்ச வேகம் கூட கூட்டப்பட்டுள்ளது. அதன்படி RS6 காரின் அதிகபட்ச வேகமாக மணிக்கு 280 கி.மீ. மற்றும் RS7 காரில் அதிகபட்சமாக மணிக்கு 305 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.
அழகியல் மேம்பாடுகளை பொறுத்த வரை, இந்த கார்கள் இப்போது 21 இன்ச் புதிய அலாய் வீல்களில் பயணிக்கிறது. வெளிபுறத்தில் அஸ்காரி மெட்டாலிக் ப்ளூ பெயிண்ட்டால் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. RS6-ல் காணப்படும் அலாய் வீல்களை 285/30 R21 டயர்களும், RS7-ல் 275/30 R21 டயர்களும் சூழ்ந்து காணப்படுகிறது. இவ்விரு கார்களிலும் டைனாமிக் ரைடு கன்ட்ரோல் மற்றும் ஸ்டீயரிங் விகிதத்தில் டைனாமிக் ஸ்டீயரிங் வேறுபாடு ஆகியவற்றை கொண்டு, அவை புதிய ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஸன் உடன் இணைக்கப்பட்டு, உகந்த கையாளும் திறன்களை வெளிப்படுத்துகிறது. உட்புறத்தில், மாட் டைட்டானியம் ஃபினிஷ் மற்றும் ஆடியின் சின்னமான குவாட்ரோ லோகோ ஆகியவற்றை ஏர் டக்ட்ஸின் அருகே அமைக்கப்பட்டுள்ளது. RS6-யின் விலையாக 132,442 அமெரிக்க டாலரும் (ரூ.85,90,850), RS7-க்கு விலையாக 141,066 அமெரிக்க டாலரும் (ரூ.91,54,541) நிர்ணயிக்கப்பட்டு நமக்கு கிடைக்கிறது.
இதையும் படியுங்கள்: