• English
  • Login / Register

ரூ 1.14 கோடி தொடக்க விலையில் Audi Q8 e-tron இந்தியாவில் அறிமுகமானது

published on ஆகஸ்ட் 18, 2023 07:22 pm by shreyash for ஆடி க்யூ8 இ-ட்ரான்

  • 51 Views
  • ஒரு கருத்தை எழுதுக

அப்டேட்டட் சொகுசு எலக்ட்ரிக் எஸ்யூவி இரண்டு பாடி டைப்களுடன் பெரிய பேட்டரி பேக்குகளிலும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இது 600 கிமீ வரை வரை செல்லும் என்று ஆடி நிறுவனம் உறுதியளிக்கிறது.

Audi Q8 e-tron

  • மின்சார எஸ்யூவிக்கான முன்பதிவு 5 லட்ச ரூபாய்க்கு தொடங்கியுள்ளது.

  • இப்போது இரண்டு பெரிய பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன்  வருகிறது: 89 kWh மற்றும் 114kWh, 600km வரை ரேஞ்சை வழங்குகிறது.

  • அப்டேட்டட் எலக்ட்ரிக் எஸ்யூவி இப்போது அதன் பேஸ்-ஸ்பெக் இ-ட்ரான் 50 வேரியன்ட்டுடன் அதிக ஆற்றலை வழங்குகிறது.

  • எஸ்யூவி மற்றும் ஸ்போர்ட்பேக் (எஸ்யூவி-கூபே) ஆகிய இரண்டு வேரியன்ட்களுடன் இரண்டு பாடி ஸ்டைலுடன் கிடைக்கிறது.

  • இப்போது அதன் முன்னோடியை விட ரூ.12 லட்சத்தில் கூடுதலான விலையுடன் தொடங்குகிறது.

ஆடி Q8 இ-ட்ரான் ஃபேஸ்லிஃப்ட் ரூ.1.14 கோடி (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) ஆரம்ப விலையில் சந்தையில் நுழைந்துள்ளது. "Q8" என்ற பெயர் சேர்ப்புடன், மின்சார எஸ்யூவி இப்போது ஆடி எஸ்யூவி -களின் முதன்மை வரிசையில் அதன் இடத்தைப் பிடித்துள்ளது. டோக்கன் தொகையான ரூ.5 லட்சத்துக்கு ஆடி ஏற்கனவே முன்பதிவுகளை திறந்துள்ளது.

முன்பு போலவே, Q8 e-tron இரண்டு வேரியன்ட்களில் வழங்கப்படும்: Q8 e-tron 50 மற்றும் Q8 e-tron 55, மற்றும் எஸ்யூவி மற்றும் ஸ்போர்ட்பேக் (எஸ்யூவி-கூபே) ஆகிய இரண்டு பாடி ஸ்டைல்களில் கிடைக்கிறது: அவற்றின் விலை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

விலை அட்டவணை

வேரியன்ட்

விலை

Q8 e-tron 50

ரூ. 1.14 கோடி

Q8 e-tron 55

ரூ. 1.18 கோடி

Q8 e-tron 50 ஸ்போர்ட்பேக்

ரூ. 1.26 கோடி

Q8 e-tron 55 ஸ்போர்ட்பேக்

ரூ. 1.31 கோடி

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா விலை

நேர்த்தியான தோற்றம்

Audi Q8 e-tron

Q8 e-tron மின்சார எஸ்யூவி இன்னும் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது, ஆனால் ஃபேஸ்லிஃப்ட் மூலமாக  இது முன்பை விட இப்போது நேர்த்தியாக தெரிகிறது. முன்புறம் புதுப்பிக்கப்பட்ட ஆடி லோகோவைக் கொண்ட புதிய கிரில் வடிவமைப்புடன் கொடுக்கப்பட்டுள்ளது, கிரில்லின் மேற்புறத்தில் டிஆர்எல் ஸ்டிரிப், இரண்டு ஹெட்லைட்டுகளுக்கும் இடையில் உள்ளது. இது இன்னும் பக்கவாட்டிலும் பின்புறத்திலும் முந்தைய இ-ட்ரானை போலவே இருக்கிறது. அதற்கு பதிலாக இப்போது புதிய அலாய் வீல்கள் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்களை பெறுகிறது.

மேலும் படிக்க: 2023 Mercedes-Benz GLC vs Audi Q5, BMW X3, Volvo XC60: விலை ஒப்பீடு

இன்டீரியர் & வசதிகள்

2023 Audi Q8 e-tron

உள்ளே, டாஷ்போர்டு லேஅவுட் என்பது அதன் முன்னோடியுடன் ஒப்பிடும் போது ஒரளவுக்கு ஒத்துபோகிறது, ஆனால் கேபின் இப்போது இன்னும் அழகாக இருக்கிறது. எஸ்யூவி மூன்று உட்புற வண்ணத் தேர்வுகளுடன் வருகிறது: ஒகாபி பிரவுன், பேர்ல் பீஜ் மற்றும் பிளாக். இது 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மற்றும் பல்வேறு கிளைமேட் கன்ட்ரோல்களுக்கான பிரதான இன்ஃபோடெயின்மென்ட் திரைக்கு சற்று கீழே இருக்கும் 8.6-இன்ச் டச்ஸ்கிரீன் உள்ளிட்ட மூன்று-ஸ்கிரீன் செட்டப்பை கொண்டுள்ளது.

Q8 e-tron மேலும் ஃபோர்-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், மசாஜ் செயல்பாடுகளுடன் கூடிய பவர்-அட்ஜஸ்டபிள் மற்றும் வென்டிலேட்டட் சீட்கள், 16-ஸ்பீக்கர் பேங் மற்றும் Olufsen 3-D ஒலி சிஸ்டம், 705W அவுட்புட் உடன் இருக்கிறது, ஆம்பியன்ட் லைட்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல், பார்க் அசிஸ்ட் மற்றும் ஒரு பனோரமிக் சன்ரூஃப் ரூஃப் ஆகியவை உள்ளன. பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது 8 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் 

(ADAS), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் ISOFIX குழந்தை இருக்கை ஆங்கர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பேட்டரி, எலக்ட்ரிக் மோட்டார் & ரேஞ்ச்

Audi Q8 e-tron

Audi Q8 e-tron பெரிய பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது, மேலும் அவற்றின் ரேஞ்ச் மற்றும் செயல்திறன் கீழே உள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ளது.

விவரம்

Q8 e-tron 50

Q8 e-tron 55

பேட்டரி பேக்

89kWh

114kWh

பவர்/டார்க்

340PS / 664Nm

408PS / 664Nm

எலக்ட்ரிக் மோட்டார்

டூயல்-மோட்டார், ஆல்-வீல் டிரைவ்

டூயல்-மோட்டார், ஆல்-வீல் டிரைவ்

கிளைம்டு ரேஞ்ச்

419km/ 505km (ஸ்போர்ட்பேக்)

582km/ 600km (ஸ்போர்ட்பேக்)

இரண்டு பேட்டரி பேக்குகளும் பெரிதாக கொடுக்கப்பட்டுள்ளன, அவை அதிக வரம்பை வழங்கும் அதே வேளையில் எலக்ட்ரிக் மோட்டார்களும் அதிக செயல்திறனைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. Q8 e-tron இப்போது பெரிய 114 kWh பேட்டரி பேக்குடன் 600 கிமீ வரை WLTP ரேஞ்சை  வழங்குகிறது. முன்னதாக, e-tron 71kWh மற்றும் 95kWh பேட்டரி பேக்குகளுடன் வழங்கப்பட்டது, இது 484km வரை ரேஞ்சை வழங்கும்.

சார்ஜிங் விவரங்கள்

மின்சார எஸ்யூவி 170kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22kW வரை AC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. முந்தைய ஃபாஸ்ட் சார்ஜிங் மோடை பயன்படுத்தி, பேட்டரியை 31 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும், அதே நேரத்தில் 20 முதல் 80 சதவீதம் வரை ரீசார்ஜ் செய்ய 26 நிமிடங்கள் ஆகும். இருப்பினும், பேட்டரி வெப்பநிலை மற்றும் நிலைமைகளை பொறுத்து சார்ஜிங் நேரங்கள் மாறுபடலாம்.

போட்டியாளர்கள்

ஆடி க்யூ8 இ-ட்ரான் இந்தியாவின் ஆடம்பர மின்சார எஸ்யூவி -யின் இடத்தில் பிஎம்டபிள்யூ iX மற்றும் ஜாகுவார் ஐ-பேஸ் ஆகியவற்றுடன் அதன் போட்டியை தொடர்கிறது.

மேலும் படிக்க: Q8 e-tron ஆட்டோமெட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Audi Q8 இ-ட்ரான்

Read Full News

explore மேலும் on ஆடி க்யூ8 இ-ட்ரான்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • ஜீப் அவென்ஞ்ஜர்
    ஜீப் அவென்ஞ்ஜர்
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • மாருதி இவிஎக்ஸ்
    மாருதி இவிஎக்ஸ்
    Rs.22 - 25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • க்யா ev6 2025
    க்யா ev6 2025
    Rs.63 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • ஹூண்டாய் கிரெட்டா ev
    ஹூண்டாய் கிரெட்டா ev
    Rs.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
×
We need your சிட்டி to customize your experience