சீன நிறுவனமான லீகோவுடன் (LeEco) இணைந்து ஆஸ்டன் மார்டின் மின்சார காரைத் தயாரிக்கிறது
பிரிட்டிஷ் வாகன தயாரிப்பாளரான ஆஸ்டன் மார்டின், சீன கன்ஸ்யூமர் எலக்டிரானிக்ஸ் நிறுவனமான லீகோவுடன் (முன்னர் Letv என்று அழைப்பட்டது) இணைந்து தனது முதல் எலக்ட்ரிக் வாகனத்தை தயாரிக்க, ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கடந்த புதன்கிழமை அறிவித்தது. ஆஸ்டன் மார்டின், லீகோ மற்றும் பாரடே ஃப்யூச்சர் நிறுவனங்களின் ஏனைய மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கு முன்பு, ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் ராப்பிட் E எலக்ட்ரிக் வாகன கான்செப்ட்டைத் தயாரிப்பதுதான் இந்த கூட்டுமுயற்சியின் முதல் திட்டமாகும்.
“ராப்பிட் E கான்செப்ட்டை முழுமையான தயாரிப்பாக மாற்றுவதற்கு, லீகோ நிறுவனம் காட்டும் வேகம் மற்றும் அவர்களின் தொழில்நுட்ப நுணுக்கம் ஆகியவற்றால் நாங்கள் உற்சாகம் அடைந்துள்ளோம்,” என்று ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் CEO திரு. ஆண்டி பால்மர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். “ராப்பிட் E வாகனத்தை 2018 –ஆம் வருடத்திற்குள் சந்தையில் அறிமுகப்படுத்துவது என்பது, இரண்டு நிறுவனங்களுக்கும் முக்கிய மைல்கல்லாக இருக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.
சீன நிறுவனமான லீகோ, ராப்பிட் E தயாரிக்கத் தேவையான இஞ்ஜின் மற்றும் பேட்டரி பேக்குகளை வழங்க உத்தேசித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள கேடன் என்னும் ஊரில் உள்ள ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் ஆலையில் ராப்பிட் E தயாரிக்கப்பட்டு, 2018 –ஆம் வருடம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. “இந்த வாகன கான்செப்ட் உருவான தினத்தில் இருந்து, ஆஸ்டன் மார்டின் மற்றும் லீகோ என்ற இரண்டு நிறுவனங்களும் இதைத் தயாரிக்கத் தேவையான பேட்டரி அமைப்புகள் மற்றும் இஞ்ஜின் ஆகியவற்றிற்கான சரியான தொழில்நுட்ப தீர்வுகளை கண்டுபிடிப்பது உட்பட அனைத்து வேலைகளையும் ஆரம்பித்து விட்டன,” என்று இந்த நிறுவனங்கள் கடந்த புதன்கிழமை பிராங்க்ஃபர்ட்டில் குறிப்பிட்டுள்ளன.
மின்சார வாகனம் தயாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த கூட்டு முயற்சியானது, ஏற்கனவே இந்த இரு நிறுவனங்களுக்கும் உள்ள கூட்டுணர்வை பலப்படுத்துவதாக அமையும். ஏனெனில், ஆஸ்டன் மார்டின் மற்றும் லீகோ நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் முதல் முறையாக உருவான, ஆஸ்டன் மார்டின் ராப்பிட் S வாகனத்தில் பொருத்துவதற்கு, லீகோ நிறுவனம் உருவாக்கிய நவீன இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம், 2016 CES கண்காட்சியில் வெளியிடப்பட்டது.
இரண்டு நிறுவனங்களும் இணைந்து, குறைவான அளவில் புகை வெளியிடும் மின்சார வாகனங்களை இந்த தசாப்தத்தின் இரண்டாவது பாதியில் தயாரிக்கும் திட்டத்தைப் பற்றி அறிவித்தன. “இந்த கூட்டு முயற்சியின் இரண்டாவது கட்டமாக, குறைவான புகை வெளியிடும் வாகன தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்கும் வேலை துரிதமாக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், இந்த தசாப்தத்தின் இரண்டாவது பாதியில், புதிய வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கு, இரண்டு நிறுவனங்களும் தத்தம் திட்டங்களை தீட்டியுள்ளன,” என்று இந்த இரு நிறுவனங்களும் குறிப்பிட்டுள்ளன.
முழுவதும் மின்சாரத்தில் ஓடும் ஆல்-எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் செடான் காரை உருவாக்க வேண்டும் என்பதும் ஆஸ்டன் நிறுவனத்தின் முயற்சிகளில் ஒரு பகுதியாகும். இதன் மூலம், தற்போதைய வருடாந்திர விற்பனையை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது, அதாவது 2015 –ஆம் ஆண்டில் 3,500 கார்களை விற்பனை செய்த இந்நிறுவனம், அதிகபட்சமாக 7,500 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும் வாசிக்க