அடுத்த தலைமுறைக்கான எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பில், ஆஸ்டன் மார்டின் – லெட்வ் கூட்டணி ஈடுபடுகிறது
bala subramaniam ஆல் அக்டோபர் 08, 2015 11:02 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 22 Views
- ஒரு கருத்தை எழுதுக
சென்னை:
அடுத்த தலைமுறைக்கான எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவதில், பீஜிங்கை சேர்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனமான லெட்வ் உடன், ஆஸ்டன் மார்டின் நிறுவனம் கைகோர்த்துள்ளது. சீனாவை சேர்ந்த இந்த நிறுவனம், தனது எலக்ட்ரிக் கார் தயாரிப்பை குறித்து, கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பின் போது, லெட்வ் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க உள்ளது; இந்த செயல்திட்டம் SEE (சூப்பர் எலக்ட்ரிக் ஈகோ-சிஸ்டம்) என்று அழைக்கப்படும் என இந்நிறுவனத்தின் நிறுவுனரான திரு.ஜியாயூவிடிங் தெரிவித்தார். லெட்வ் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் வாகனத்தின் உருவாக்கத்திற்காக, ஆஸ்டின் மார்டின் மற்றும் BAIC மோட்டார் கார்ப்ரேஷன் ஆகியவற்றுடன் இணைந்து செயலாற்றி வருகிறது. ஆட்டோ சீனா 2016-ல் இந்த வாகனம் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.
இது குறித்து திரு.ஜியா-வின் மைக்ரோபிளாக்கில் கூறியிருப்பதாவது, “லெட்வ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்து திரட்டிய ஈகோசிஸ்டத்தின் முழு தன்மையின் பிரதிபலிப்பாக SEE செயல்திட்டம் காணப்படும். மேலும் ஆட்டோமொபைல் தொழில்துறையையே இது மறுவரையறை செய்வதாகவும் அமையும். சிறந்த இன்டர்நெட் மற்றும் ஸ்மார்ட் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு, ஒரு இன்டர்நெட் அடிப்படையிலான வாகன ஈகோ சிஸ்டத்தை வடிவமைக்க உள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான சில தகவல்களின் அடிப்படையில், இந்நிறுவனத்தின் முதல் மாடல் ஒரு ரேசிங் காரின் தோற்றத்தை கொண்டிருந்து, 3.465m/1.625m/1.530m என்ற நீள, அகல, உயரத்தை முறையே பெற்று, 2.345m நீளமான வீல் பேஸை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த மாடலில் அதிகமான மற்றும் குறைவான ஆற்றல் வேறுபாடுகளை கொண்ட இரு வகைகள் காணப்படும்.
இந்த வாகனத்தில் லெட்வ் நிறுவனத்தின் திறமை வாய்ந்த இன்டர்நெட் அடிப்படையிலான LeUI அமைப்பு உடன் ஒரு 9-இன்ச் டச் ஸ்கிரீன் ஆகிய உபகரணங்களைக் கொண்டு, லெட்வ் நிறுவனத்தின் மற்ற ஸ்மார்ட் முனையத்துடன் தொடர்பு கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, லெட்வ் ஸ்மார்ட்போன்களின் மூலம் இந்த வாகனத்தை கட்டுப்படுத்தலாம். மேலும் இந்த வாகனத்திற்கு, மற்ற லெட்வ் நிறுவன ஈகோ-தயாரிப்புகளுடன் இசைவான தொடர்பு காணப்படும்.