ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்ல காரும் உண்டு , இந்தியாவில் SU7 எலக்ட்ரிக் காரை காட்சிப்படுத்திய ஷியோமி நிறுவனம்
இந்த எலக்ட்ரிக் செடான் ஏற்கனவே அதன் சொந்த நாடான சீனாவில் விற்பனையில் உள்ளது.
-
SU7 சர்வதேச அளவில் 73.6 kWh, 94.3 kWh மற்றும் 101 kWh என மூன்று பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறுகிறது.
-
ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆகிய இரண்டிலும் கிடைக்கும்.
-
பேட்டரி பேக் ஆப்ஷன்களை பொறுத்து இது 830 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்ச் ரேஞ்சை வழங்கும்.
-
16.1-இன்ச் டச் ஸ்கிரீன், 56-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் ADAS ஆகிய வசதிகள் இந்த காரில் உள்ளன.
ஆட்டோமொபைல் துறையானது எலக்ட்ரிக் கார்கள் மற்றும் அது தொடர்பான புதிய தொழில்நுட்பங்களை நோக்கி குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் ஷியோமி போன்ற எதிர்பாராத தொழில்நுட்ப பிராண்டுகள் உட்பட EV சந்தையில் பல்வேறு புதிய கார்களின் அறிமுகத்தை பார்க்க முடிகிறது. ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரையில் ஷியோமி நிறுவனம் பிரபலமாக உள்ளது. மொபைல் மட்டுமல்ல பல்வேறு நுகர்வோர் எலக்ட்ரிக் சாதனங்களில் நிபுணத்துவம் பெற்ற ஷியோமி நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் செடானான SU7 -யை இந்தியாவில் காட்சிப்படுத்தியுள்ளது.
கார் எப்படி இருக்கிறது?
ஷியோமி SU7 4-டோர் எலக்ட்ரிக் செடான் முதல் பார்வையில் அதன் குறைந்த ஸ்லாங் வடிவமைப்பு காரணமாக போர்ஷே டெய்கானை நினைவூட்டுகிறது. இது முன்பக்கத்தில் டியர்டிராப் வடிவ LED ஹெட்லைட்ஸ், பக்கவாட்டில் 21-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் பின்புறத்தில் கனெக்டட் LED டெயில் லைட்ஸ், பின்புறத்தில் ஆக்டிவ் ஸ்பாய்லர் ஆகியவை உள்ளன. இதன் சிறப்பான ஏரோடைனமிக் வடிவமைப்பால் SU7 கார் ஏர் டிராக்ஷன் கோ எபிசியன்ட் 0.195 ஆக உள்ளது.
மேலும் பார்க்க: எக்ஸ்க்ளூசிவ்: BYD அட்டோ 3 இரண்டு புதிய லோயர்-எண்ட் வேரியன்ட்களின் விவரங்கள் ஜூலை 10 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும்
இன்ட்டீரியர் மற்றும் வசதிகள்
3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் பெரிய 16.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்ட ஒரு மினிமலிஸ்டிக் இன்ட்டீரியர் ஷியோமி SU7 காரில் உள்ளது. ஸ்டீயரிங் வீலில் போர்ஸ் மாடல்களை நினைவூட்டும் இரண்டு பட்டன்கள் உள்ளன: ஒன்று அட்டானமஸ் டிரைவிங்கை செயல்படுத்துவதற்காக மற்றொன்று பூஸ்ட் மோடுக்காக.
SU7 -ல் உள்ள மற்ற வசதிகளில் 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 56-இன்ச் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், பனோரமிக் கிளாஸ் ரூஃப், ஆக்டிவ் ஆக உள்ள சைடு சப்போர்ட் உடன் இயங்கும் முன் இருக்கைகள் மற்றும் 25-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன. 7 ஏர்பேக்குகள், ABS உடன் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டெண்ட் சிஸ்டம் (ADAS) லிடார் தொழில்நுட்பத்துடன் ஆட்டோமெட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் ஹை பீம் உள்ளிட்ட வசதிகளுடன் இது வருகிறது.
பேட்டரி பேக் ரேஞ்ச்
சர்வதேச அளவில் ஷியோமி SU7 காரை 3 பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்குகிறது. மேலும் அவற்றின் விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:
விவரங்கள் |
ஷியோமி SU7 |
ஷியோமி SU7 புரோ |
ஷியோமி SU7 மேக்ஸ் |
பேட்டரி பேக் |
73.6 kWh |
94.3 kWh |
101 kWh |
பவர் |
299 PS |
299 PS |
673 PS |
டார்க் |
400 Nm |
400 Nm |
838 Nm |
ரேஞ்ச் (CLTC கிளைம் செய்யப்பட்ட ரேஞ்ச் ரேஞ்ச்) |
700 கி.மீ |
830 கி.மீ |
800 கி.மீ |
டிரைவ் டைப் |
RWD (ரியர்-வீல் டிரைவ்) |
RWD (ரியர்-வீல் டிரைவ்) |
டூயல் மோட்டார் AWD (ஆல்-வீல்-டிரைவ்) |
ஆக்ஸலரேஷன் (0-100 கிமீ/மணி) |
5.28 வினாடிகள் |
5.7 வினாடிகள் |
2.78 வினாடிகள் |
சார்ஜிங் விவரங்கள்
SU7 எலக்ட்ரிக் செடானுக்கான சார்ஜிங் நேரங்கள் பின்வருமாறு:
பேட்டரி பேக் |
73.6 kWh |
94.3 kWh |
101 kWh |
ஃபாஸ்ட் சார்ஜிங் நேரம் (10-80 சதவீதம்) |
25 நிமிடங்கள் |
30 நிமிடம் |
19 நிமிடங்கள் |
இந்திய வெளியீடு மற்றும் போட்டியாளர்கள்
இந்தியாவில் SU7 அறிமுகப்படுத்தப்படுமா என்பதை ஷியோமி இன்னும் உறுதிப்படுத்தவில்லை. சீனாவில் தற்போது இதன் விலை ¥ 215,900 மற்றும் ¥ 299,900 (ரூ. 24.78 லட்சம் முதல் ரூ. 34.43 லட்சம்) வரை உள்ளது. இந்தியாவில் ஒரு வேளை இது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டால் இது BYD சீல் மற்றும் ஹூண்டாய் அயோனிக் 5 ஆகியவற்றுடன் போட்டியிடும். மேலும் இது BMW i4 காருக்கு விலை குறைவான மாற்றாகவும் இருக்கும்.
ரெகுலர் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை பின்தொடரவும்