உதிரிப் பாகங்களுடன் கூடிய BR-V-யின் அதிகாரபூர்வமான டீஸரை ஹோண்டா இந்தியா வெள ியிட்டது
published on பிப்ரவரி 03, 2016 11:23 am by manish for ஹோண்டா பிஆர்-வி
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் ஊடகத் துறையினருக்கான நாட்கள், நாளை முதல் துவங்க உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த பெரிய கண்காட்சி துவங்கும் முன், தனது அடுத்து வரவுள்ளதும், அதிக கவர்ச்சிகரமானதுமான கச்சிதமான SUV-யின் ஒரு டீஸர் படத்தை, தனது அதிகாரபூர்வமான சமூக ஊடகச் சேனல்களில் ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வேவுப் பார்க்கப்பட்ட படத்தின் மூலம் ஒரு உதிரிப் பாகங்களுடன் கூடிய பயன்பாட்டு வாகனமான ஹோண்டா BR-V பதிப்பை, இந்த ஜப்பானிய வாகனத் தயாரிப்பாளர் மூலம் எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படலாம் என்பது தெளிவாக தெரிகிறது. இதன் உதிரிப் பாகங்களை குறித்து பார்க்கும் போது, இந்த டீஸர் படத்தில் காட்டியுள்ள வாகனத்தில் உள்ள நீட்டிக்கப்பட்ட பம்பரை, யாராலும் எளிதாக கண்டறிய முடிகிறது. ஹோண்டாவின் கச்சிதமான SUV-யை, ஒரு 5 சீட் வாகனம் மற்றும் ஒரு 7-சீட் வாகனம் உள்ளிட்ட இரு லேஅவுட்களில் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெனால்ட் டஸ்டர், மாருதி S-கிராஸ், நிசான் டெரானோ மற்றும் முக்கிய போட்டியாளரான ஹூண்டாய் க்ரேடா ஆகியவை உடன் இந்த கார் போட்டியிட உள்ளது. இந்த SUV-க்கான உழைப்பு சிறப்பானது என்பதை உறுதி செய்யும் வகையில், வாகனத்தின் முகப் பகுதியை இந்த ஜப்பானிய வாகனத் தயாரிப்பாளர் முழுமையாக மாற்றி அமைத்துள்ளதால், இப்போது இது எந்த வகையிலும் மொபிலியோ MPV-யை போல இல்லாமல், BR-V-க்கென ஒரு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட கச்சிதமான SUV-யில், டையமண்டு கட் அலாய்கள் மற்றும் பிராஜெக்டர் ஹெட்லெம்ப்களை கொண்டுள்ள ஒரு ஹெட்லெம்ப் கிளெஸ்டரால் மூடப்பட்ட DRL-கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதேபோல BR-V-யின் உட்புற அமைப்பிலும், சிட்டி சேடன் மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக்கான ஜாஸ் ஆகியவற்றில் காணக் கிடைக்கும் அதே டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. மற்றபடி இந்த காரில் ஒரு ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், மடிக்கக் கூடிய 3வது வரிசை சீட்கள் (பிரத்யேகமாக 7-சீட்கள் கொண்ட வகையில்), பின்பக்க AC திறப்பிகள், எலக்ட்ரிக்கலி கன்ட்ரோல்டு விங் மிரர்கள் மற்றும் பின்பக்க பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பயணத்திற்கு இனிமை சேர்க்கும் அம்சங்களை கொண்டுள்ளது.
அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கும் போது, இந்த பிரிமியம் கச்சிதமான சேடனில் ஒரு 1.5-லிட்டர் i-VTEC பெட்ரோல் ஆற்றலகத்தை கொண்டு, 120PS ஆற்றல் வெளியீடையும், 145Nm அதிகபட்ச முடுக்குவிசையையும் அளிக்கிறது. டீசல் வகைகளை பொறுத்த வரை, BR-V-க்கு மீண்டும் மாற்றம் செய்யப்பட்ட பதிப்பான 1.5-லிட்டர் i-DTEC யூனிட்டை ஹோண்டா நிறுவனம் வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆற்றலகம், வாகனத் தயாரிப்பாளரின் கச்சிதமான சேடனான அமேஸ் மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக்கான ஜாஸ் உள்ளிட்ட மற்ற மாடல்களில் 100PS ஆற்றலை வெளியிடுகிறது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful