• English
  • Login / Register

கியா செல்டோசை விட கூடுதலான 6 அம்சங்களை 2020 ஹூண்டாய் கிரேட்டா வழங்குகிறது

published on மார்ச் 12, 2020 12:34 pm by sonny for ஹூண்டாய் கிரெட்டா 2020-2024

  • 31 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய-தலைமுறை கிரெட்டா அதன் பாதுகாப்பான வரம்பு வரை சில பிரீமியத் தந்திரங்களை வழங்குகிறது, இது காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் தன்னுடைய சிம்மாசனத்தை மீண்டும் பெற முயற்சிப்பது போல் தெரிகிறது

6 Features Hyundai Creta 2020 Offers Over Kia Seltos

மார்ச் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ள இரண்டாவது தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா, இதன் முந்திய மாதிரியை விடக் கூடுதலாக பிரீமிய சிறப்பம்ச புதுப்பிப்புகளைக் கொண்டுள்ளது. கியா செல்டோஸ் இந்தியாவில் பிரீமியம் காம்பாக்ட் எஸ்யூவிகளுக்கான தற்போதைய தரத்தை நிர்ணயித்துள்ள நிலையில், புதிய கிரெட்டா அதன் கியா தயாரிப்பு வரிசையில் சில சிறப்பம்சங்களை வழங்குகிறது. ஹூண்டாயுடன் ஒப்பிடும்போது கியாவில் இல்லாத முதல் ஆறு அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

6 Features Hyundai Creta 2020 Offers Over Kia Seltos

இயற்கை காட்சிகளை காணக்கூடிய சூரியஒளி திறப்பு மேற்கூரை 

செல்டோஸை விட புதிய கிரெட்டாவின் கண்களுக்குப் புலப்படும் சிறப்பம்சங்களானது பெரிய, பரந்த சூரிய ஒளி திறப்பு மேற்கூரை ஆகும். இது சராசரி சூரிய ஒளி திறப்பு மேற்கூரையை விடக் கூடுதல் விலை கொண்டதாகத் தோன்றுகிறது, மேலும் இந்த எஸ்யூவி விலைக் கூடுதலானது மற்றும் பணக்கார வாடிக்கையாளர்களின் விருப்பமாக இருக்கிறது. இதன் முகப்பு பக்கம் கூடுதல் காற்றோட்டத்தையும் உணர வைக்கிறது. கியா நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச சந்தைகளில் செல்டோஸில் இயற்கை காட்சிகளைக் காணும் சூரியஓளி திறப்பு மேற்கூரையை வழங்குகிறது என்றாலும் அதன் இந்திய மாதிரியில் இந்த அம்சம் கிடையாது.

6 Features Hyundai Creta 2020 Offers Over Kia Seltos

டர்போ-பெட்ரோல் வகையில் இருக்கும் திசைதிருப்பிகள் 

ஹூண்டாய் நிறுவனம் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரத்தைக் கொண்டுள்ள கியா செல்டோஸின் அதே பிஎஸ்6 இயந்திர விருப்பங்களுடன் 2020 கிரெட்டாவை வழங்குகிறது. கிரெட்டாவில், இது 7-வேக டிசிடி தானியங்கி மூலம் மட்டுமே கிடைக்கிறது, அதே நேரத்தில் செல்டோஸ் 6-வேக கைமுறை விருப்பத்தையும் பெறுகிறது. இருப்பினும், ஹூண்டாய் எஸ்யூவி இரட்டை உரசிணைப்பி செலுத்தும் அமைப்புக்கான திசைதிருப்பிகளைப் பெறுகிறது, இந்த அம்சங்கள் செல்டோஸில் கிடையாது. இரட்டை உரசிணைப்பி செலுத்தும் அமைப்புகளில் பற்சக்கரங்களைக்  கைமுறையாக மாற்றும் போது திசைதிருப்பிகள் சிறிதளவு விளையாட்டு கார்களின் தன்மையைச் சேர்க்கின்றன.

Here’s How BlueLink Connected Car Tech Will Work In The 2020 Hyundai Creta

குரல் கட்டளைகளுடன் மேம்பட்ட ப்ளூலிங்க்

புதிய கிரெட்டாவில் ஈசிம் இயக்கப்பட்ட ஒலிபரப்பு அமைப்புக்கான  ஹூண்டாயின் இணைக்கப்பட்ட கார் அம்சங்களின் சமீபத்திய பதிப்பைக் கொண்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட ப்ளூலிங்க் தொழில்நுட்பம் “ஹலோ ப்ளூ லிங்க்” என்ற செயல்படுத்தும் வாக்கியத்தைப் பயன்படுத்தி சூரிய ஒளி மேற்கூரை மற்றும் காலநிலை கட்டுப்பாடு போன்ற செயல்பாடுகளுக்கான குரல் கட்டளைகளுடன் செயல்படுகிறது. இந்த செயல்பாடுகளுக்கு செல்டோஸின் யுவிஓ இணைப்பு குரல் கட்டளைகளை வழங்காது.

இதையும் படியுங்கள்: 2020 ஹூண்டாய் கிரெட்டாவில் ப்ளூலிங்க் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படும் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது  

கைமுறை வகைகளில் புளூலிங்கைப் பயன்படுத்தப்பட்ட  தொலைதூர இயக்கி இயந்திரம் மூலம் தொடங்குதல் 

கிரெட்டாவின் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் செல்டோஸில் வழங்கப்படுவதைக் காட்டிலும் ஒரு படி கூடுதலாக உள்ளது, ப்ளூலிங்கில் உள்ள கைமுறை பரிமாற்ற வகைகளில் தொலைதூர இயக்கி இயந்திர தொடக்கமும் இருக்கிறது. கியாவில், தானியங்கி வகைகளில் மட்டுமே தொலைதூர இயக்கி தொடக்க விருப்பத்தைப் பெறுகின்றன. மின்னணு தடை கருவியைக் கொண்ட கிரெட்டா வகைகள் மட்டுமே தொலைதூர இயக்கி இயந்திர கைமுறை  பரிமாற்றத்துடன் தொடங்குகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தொலைதூர இயக்கி இயந்திர தொடக்கமானது முன்புற முகப்பு பக்கத்திற்கும் குளிரூட்டும் அம்சத்தை வழங்குகிறது.

டிஜிட்டல் ஸ்பீடோமீட்டருடன் பாதி டிஜிட்டல் கருவி தொகுப்பு 

 2020 கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டும் கருவி தொகுப்பில் 7 அங்குல முழு வண்ண திரையைக் கொண்டுள்ளன. இருப்பினும், கிரெட்டாவின் கிளஸ்டர் தளவமைப்பு சிறிய அனலாக் டயல்களால் சூழப்பட்டிருப்பதால் கூடுதல் விலை கொண்ட கருவி தொகுப்பு  தோற்றத்தை வழங்குகிறது, மேலும் காரின் வேகத்தைக் காட்டும் கருவி தற்போது டிஜிட்டல் முறையில் மற்ற வாகன தகவல்களுடன் காட்டப்படுகிறது. செல்டோஸின் கருவித் தொகுப்பு கூடுதலாக இரண்டு வழக்கமான அளவிலான அனலாக் டயல்களைக்

6 Features Hyundai Creta 2020 Offers Over Kia Seltos

தானியங்கி காற்று சுத்திகரிப்புக்கான தொடு கட்டுப்பாடுகள்

2020 ஹூண்டாய் கிரெட்டாவில் செல்டோஸில் வழங்கப்படும் காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை ஒத்த ஒரு உள்ளமைக்கப்பட்ட தானியங்கி காற்று சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டிலும் டிஜிட்டல் திரை இருக்கிறது, அது செயல்படக்கூடிய பல்வேறு முறைகளையும் வடிகட்டும் காற்றின் தரத்தையும் காட்டுகிறது. இருப்பினும், கிரெட்டாவின் காற்று சுத்திகரிப்பு திரையானது அதை இயக்க / அணைக்க, முறைகளுக்கு இடையில் மாறுதல் மற்றும் வடிகட்டியைச் சரிபார்க்க தொடு கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க: கிரெட்டா டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Hyundai கிரெட்டா 2020-2024

Read Full News

explore மேலும் on ஹூண்டாய் கிரெட்டா 2020-2024

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience