Tata Punch EV -யுடன் ஒப்பிடும் போது Hyundai Inster காரில் கிடைக்கும் 5 வசதிகள் எ ன்னவென்று தெரியுமா ?
published on ஜூலை 02, 2024 05:47 pm by shreyash for ஹூண்டாய் inster
- 27 Views
- ஒரு கருத்தை எழுதுக
வெளிநாடுகளில் விற்கப்படும் காஸ்பர் மைக்ரோ எஸ்யூவி -யின் ஆல்-எலக்ட்ரிக் பதிப்பான ஹூண்டாய் இன்ஸ்டர் பன்ச் EV -யை விட அதிகமான தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருப்பதோடு, பெரிய பேட்டரி பேக்கையும் பெறுகிறது.
ஹூண்டாய் இன்ஸ்டர் சர்வதேச சந்தைகளில் விற்கப்படும் ஹூண்டாய் காஸ்பரின் அனைத்து-எலக்ட்ரிக் பதிப்பாக மைக்ரோ எலக்ட்ரிக் எஸ்யூவி சமீபத்தில் வெளியிடப்பட்டது. இன்ஸ்டர் முதலில் தென் கொரியாவில் விற்பனைக்கு வரும். அதைத் தொடர்ந்து மற்ற சந்தைகளில் விற்பனைக்கு வரும். மேலும் இது வரும் ஆண்டுகளில் இந்தியாவிற்கும் கொண்டு வரப்படலாம்.. அப்படி நடந்தால் இன்ஸ்டர் காரானது டாடா பன்ச் EV உடன் நேரடியாக போட்டியிடும். இது பன்ச் EV -க்கு நேரடி போட்டியாளராக இருப்பதால் இதில் என்ன வசதிகள் கூடுதலாக இருக்கின்றன என்பதைப் பார்க்க முடிவு செய்தோம். இங்கே அதைப்பற்றிய ஒரு பார்வை:
ஹீட்டட் ஸ்டீயரிங் வீல்
ஹூண்டாய் இன்ஸ்டர் காரில் ஒரு ஹீட்டட் ஸ்டீயரிங் பொருத்தப்பட்டிருக்கிறது. இது இந்தியாவில் வெகுஜன சந்தை கார்களில் பொதுவாக பார்க்க முடிவதில்லை. குளிர் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள வசதியாகும், ஏனெனில் இது மிகவும் குளிரான நிலையில் வாகனம் ஓட்டும்போது உங்கள் கைகளை சூடாக வைத்திருக்க உதவுகிறது. இன்ஸ்டர் EV ஆனது ஹீட்டட் முன் இருக்கைகளுடன் வருகிறது. மாறாக டாடா பன்ச் EV ஆனது வென்டிலேட்டட் முன் சீட்களை பெறுகிறது. இது பெரும்பாலான இந்திய வானிலை நிலைக்கு கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலைக்கு ஏற்றதாகும்.
V2L (வெஹிகிள்-டூ-வெஹிகிள்) வசதி
ஹூண்டாய் இன்ஸ்டரில் உள்ள மற்றொரு வசதி பன்ச் EV -யில் இல்லாத V2L (வெஹிகிள் டூ வெஹிகிள்) வசதி ஆகும். இந்த வசதி EV -யின் பேட்டரியில் ஸ்டோர் செய்யப்பட்ட பவரை பயன்படுத்தி உங்கள் வெளிப்புற எலக்ட்ரிக் சாதனங்களை இயக்க அனுமதிக்கிறது. இந்தியாவில் இந்த வசதி டாடா நெக்ஸான், ஹூண்டாய் அயோனிக் 5 மற்றும் கியா EV6 போன்ற EV -களில் கிடைக்கிறது.
பெரிய அலாய் வீல்கள்
ஹூண்டாய் இன்ஸ்டர் EVயை 17-இன்ச் அலாய் வீல்களுடன் வழங்குகிறது. அதே நேரத்தில் டாடா பன்ச் EV அதன் மிட்-ஸ்பெக் எம்பவர்டு வேரியன்ட்டில் இருந்து 16-இன்ச் அலாய் வீல்களை பெறுகிறது. இன்ஸ்டரின் மிட்-ஸ்பெக் டிரிம்கள் சிறிய 15-இன்ச் வீல்களை கொண்டுள்ளன என்பதை நினைவில் வைக்கவும்.
ADAS
சில நாடுகளில் உள்ள பாதுகாப்பு விதிமுறைகளின்படி கார்களின் அளவு மற்றும் விலையை பொருட்படுத்தாமல் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளை கொண்டிருக்கலாம். முதலில் கொரியாவிலும் பின்னர் சில ஐரோப்பிய சந்தைகளிலும் விற்பனை செய்யப்படவுள்ள இன்ஸ்டர் கார் இந்த வசதிகளுடன் வருகிறது. அவை லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங் ஆகியவற்றை உள்ளடக்கியது.
பொறுப்பு துறப்பு: இந்தியா-ஸ்பெக் ஹூண்டாய் இன்ஸ்டருக்கு ADAS கிடைக்காமல் போகலாம்.
பெரிய பேட்டரி பேக் ஆப்ஷன்கள்
டாடா பன்ச் EV உடன் ஒப்பிடும்போது ஹூண்டாய் இன்ஸ்டர் பெரிய பேட்டரி பேக்குகளை பெறுகிறது. எடுத்துக்காட்டுக்காக அவற்றின் எலக்ட்ரிக் பவர்டிரெய்ன்களின் விரிவான ஒப்பீடு இங்கே:
விவரங்கள் |
ஹூண்டாய் இன்ஸ்டர் |
டாடா பன்ச் EV |
||
மீடியம் ரேஞ்ச் |
லாங் ரேஞ்ச் |
மீடியம் ரேஞ்ச் |
லாங் தூர |
|
பேட்டரி பேக் |
42 kWh |
49 kWh |
25 kWh |
35 kWh |
பவர் |
97 PS |
115 PS |
82 PS |
122 PS |
டார்க் |
147 Nm |
147 Nm |
114 Nm |
190 Nm |
கிளைம்டு ரேஞ்ச் |
300 கி.மீக்கு மேல் (WLTP) |
355 கி.மீ வரை (WLTP) (15 இன்ச் வீல்களுடன்) |
315 கி.மீ (MIDC) |
421 கி.மீ (MIDC) |
குறிப்பு: ஹூண்டாய் இன்ஸ்டரின் பேட்டரி பேக், ரேஞ்ச் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் ஆகியவை இந்தியா-ஸ்பெக் மாடலுக்கு ஏற்ப மாறுபடலாம்.
டாடா பன்ச் EV -யை விட ஹூண்டாய் இன்ஸ்டர் வழங்கும் விஷயங்கள் இவை. இந்த வசதிகளில் எது பன்ச் EV காரில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், அதற்கான காரணம் என்ன ? கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ரெகுலர் அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்
மேலும் படிக்க: டாடா பன்ச் AMT
0 out of 0 found this helpful