2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட 5 வேகமான கார்கள்
published on பிப்ரவரி 17, 2016 02:28 pm by nabeel
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
கார் பிரியர்களுக்கு, நடந்து முடிந்த இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ ஒரு பண்டிகை என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் என்ன? இந்த பண்டிகை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தான் வரும். பல பிரிவுகளில் ஏராளமான கார்கள் இந்த கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஆரம்ப -நிலை சிறிய ஹேட்ச் கார்கள் , செடான்கள் , சொகுசு செடான்கள் , SUV வகை கார்கள் , ப்லேக்க்ஷிப் செடான்கள், கான்செப்ட் கார்கள் மற்றும் எல்லோர் கனவிலும் நடனமாடும் அதிவேக செயல்திறன் கொண்ட பெர்பார்மன்ஸ் கார்கள் . இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்த 5 அதிவேக பெர்பார்மன்ஸ் கார்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
5. ஆடி RS7 பெர்பார்மன்ஸ் (305 Kmph )
இந்த பட்டியலில் இரண்டாவது ஆடி காரான இந்த RS7 கார்கள் உலகம் முழுமையிலும் ஓட்டுபவரின் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி , பரவச அனுபவத்தை அள்ளி தரும் சிறப்பு கொண்டது. 0 – 100 கி.மீ வேகத்தை இந்த பாயும் புலி வெறும் 3.9 வினாடிகளில் தொட்டு விடுகிறது. இந்த கார் BMW M4 மற்றும் M6 க்ரேன் கூப் கார்களை பின்னுக்கு தள்ளி நம் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. .
என்ஜின் - 4.0 லிட்டர் V8 TFSI
சக்தி - 596bhp
4. மெர்சிடீஸ் -பென்ஸ் AMG GT S (310kmph)
ரூ. 2.4 கோடிக்கு (எக்ஸ் -ஷோரூம் ,டெல்லி ) கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட மெர்சிடீஸ் -பென்ஸ் நிறுவனத்தின் அதிவேக கார்களில் ஒன்றான இந்த AMG GT S கார்கள் மணிக்கு 100 கி.மீ வேகத்தை வெறும் 3 .7 நொடிகளில் தொட்டு நம்மை பிரமிக்க வைக்கிறது. போர்ஷ் 911 டர்போ S, ஆடி R8 V10 மற்றும் ஜாகுவார் F - டைப் R ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
என்ஜின் - 4.0 லிட்டர் ட்வின் டர்போ V8
சக்தி - 503 bhp
3.கார்வெட் ஸ்டிங்ரே (313kmph)
இந்த அமெரிக்க கார் உண்மையிலேயே தனது அசுரத்தனமான வேகத்தால் நம்மை அச்சுறுத்துகிறது என்று சொல்லலாம். அதிகபட்சமாக 313 kmph வேகத்தில் பாய்ந்து செல்லும் இந்த கார் 3.7 நொடிகளில் 100கி.மீ வேகத்தை தொட்டு விடுகிறது. மணிக்கு 249கி.மீ வேகத்தில் செல்லும் கமேரோ SS கார்களுடன் இணைந்து இந்த ஸ்டிங்ரே ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது . அமெரிக்க வாகன உலகில் இந்த இரண்டு கார்களுக்கும் எப்போதும் மங்காத நற்பெயர் உண்டு.
என்ஜின் - 6.2 லிட்டர் LT1V8
சக்தி - 450bhp
2.நிஸ்ஸான் GT – R (315kmph )
வேகத்தை பற்றி மட்டும் சொல்வதை விட , அந்த வேகத்தை எவ்வளவு விரைவில் அடைகிறது என்பதைப் பார்க்கையில் தான் இந்த காரின் சிறப்பு நமக்கு விளங்குகிறது. 3 நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் இந்த கார் நின்ற நிலையில் இருந்து 100 கி.மீ. வேகத்தை அடைந்து விடுகிறது என்றால் இந்த காரின் வேகத்தை நன்கு புரிந்துக் கொள்ளலாம். மிகச் சிறந்த ஏரோடைனமிக் வடிவமைப்பு கொண்ட கார் என்று இதைச் சொல்லலாம். ட்ரேக் கோஎபீசியன்ட் வெறும் 0.26 என்பது குறிப்பிட தக்கது. இந்த வருடம் இந்தியாவில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த புயல் வேக கார் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகமான ஆடி R8 கார்களுடன் போட்டியிடும் .
என்ஜின் - 3.8- லிட்டர் ட்வின் டர்போ V6
சக்தி - 554bhp
1.ஆடி R8V10 (330 kmph)
இந்த அழகிய சூறாவளி இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் ரூ. 2.47 கோடிக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. கண்காட்சியில் ஆடி நிறுவனத்தின் அரங்கத்தில் இந்த R8 கார்கள் தான் எல்லோரையும் சுண்டி இழுத்த வண்ணம் இருந்தது. நமது பட்டியலில் இந்த கார் முதல் இடத்தைப் பிடித்துள்ளதற்கு காரணம் , 100 கி,மீ. வேகத்தை 3.2 நொடிகளில் தொட்டுவிடுவது மட்டுமின்றி அதிகபட்சமாக 330 கி. மீ. வேகத்தில் சீறிப் பாய்கிறது என்பதால் தான். விராட் கோலி மற்றும் ஆலியா பட் ஆகிய இரு பிரபலங்களால் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் காட்சிக்கு வழங்கப்பட்டது. நட்சத்திர அந்தஸ்து தரப்பட வேண்டுய கார் இது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்கவே முடியாது.
என்ஜின் - 5.2 லிட்டர் V10
சக்தி - 610bhp
மேலும் வாசிக்க : ஆட்டோ எக்ஸ்போவில் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்த ஹுண்டாய் அரங்கம்