ஆட்டோ எக்ஸ்போவில் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்த ஹுண்டாய் அரங்கம்
published on பிப்ரவரி 15, 2016 04:47 pm by nabeel
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், மிகவும் மாறுபட்ட விதத்தில் உருவாக்கப்பட்டிருந்த பல்வேறு அரங்கங்களில் ஒன்றாக ஹுண்டாய் நிறுவனத்தின் அரங்கமும் இருந்தது. ஏனெனில், ஹுண்டாய் நிறுவனத்தின் கார்கள் தவிர அந்த அரங்கத்தில், கான்செப்ட் கார்கள், ஜெனிசிஸ் பிராண்ட் விபத்து சோதனை வாகனம் மற்றும் பார்வையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் மிதக்கவைக்கும் விதத்தில் மைண்ட் ரேசிங் மற்றும் ரேசிங் மோஷன் சிமுலேட்டர் போன்ற விளையாட்டுக்களும், நிகழ்ச்சிகளும் இடம்பிடித்திருந்தன. ஹுண்டாய் நிறுவனத்தின் அரங்கம் மற்றும் ‘எக்ஸ்பீரியன்ஸ் ஹுண்டாய்’ ஆகிய பகுதிகளுக்கு, மொத்தம் 5,00,000 பார்வையாளர்கள் வந்ததாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஹுண்டாய் அரங்கத்தில் டக்சன், HND -14 (CARLINO) என்ற சப்-காம்பாக்ட் SUV கான்செப்ட், ஹுண்டாய் N 2025 விஷன் கிரான் டூரிஸ்மோ, கிரேட்டா, எலைட் i20 மற்றும் கிராண்ட் i10 போன்ற கார்கள் உட்பட 17 கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஹுண்டாய் பெவிலியன் பகுதியில் வருகை தந்த பார்வையாளர்களை பற்றி, HMIL, சேல்ஸ் & மார்கெட்டிங் பிரிவில் சீனியர் VP, திரு. ராகேஷ் ஸ்ரீவஸ்தவா, “ஆட்டோ எக்ஸ்போவில் ஹுண்டாய் பெவிலியன் பகுதிக்கு வருகை தந்த 5,00,000 -க்கும் அதிகமான பார்வையாளர்கள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பலதரப்பட்ட வாகனங்கள் மற்றும் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டிருந்த கேளிக்கைகளில் பங்கேற்றதைக் காணும் போது மிகவும் சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருந்தது. வடிவமைப்பு & பாதுகாப்பு, எதிர்கால தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டலைசேஷன் போன்ற 3 விதமான தீம்களைக் கொண்டு ஹுண்டாயின் அரங்கம் உருவாக்கப்பட்டிருந்தது. இதன் மூலம், ஹுண்டாய் பிராண்டின் தனித்தன்மை மற்றும் ஹுண்டாய் நிறுவனத்தின் தத்துவம் ஆகியவற்றை பார்வையாளர்கள் அனைவரும் புரிந்துகொள்ளலாம்,” என்று கூறினார்.
கார்கள் தவிர, பார்வையாளர்கள் ரேசிங் சிமுலேட்டர்கள், டைம் ஃப்ரீஸ் செல்ஃபி மற்றும் மைண்ட் ரேஸ் போன்றவற்றை தங்களது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கண்டுகளித்தனர். மேலும், ஹுண்டாயின் CSR இனிஷியேட்டிவ் – ‘சேஃப் மூவ்’ அடிப்படையில் உருவான சாலை போக்குவரத்து பாதுகாப்பு முறைகளை கற்று உணர்ந்த 10,000 –க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்நிறுவனம் சான்றிதழ்கள் அளித்தது. மைண்ட் ரேசிங் என்பது விளையாட்டு வீரர்கள் மனதை ஒருமுகப்படுத்தி விளையாடும் ஒரு மல்டி ப்ளேயர் டிஜிட்டல் விளையாட்டு, இதில் பல்வேறு லெவல்கள் இருந்தன. இதில் ப்ரெய்ன்வேவ் ஹெட்செட் உபயோகப்படுத்தி, உண்மையான ஸ்கோர்போர்டு உருவாக்கப்பட்டிருந்தது. ரேசிங் மோஷன் சிமுலேட்டர் என்னும் விளையாட்டு மூலம், பார்வையாளர்கள் ஹுண்டாய் நிறுவனத்தின் பந்தய காரில் அமர்ந்து, ரேஸ் டிராக்கில் செல்லும் அனுபவத்தைப் பெற்றனர். டைம் ஃப்ரீஸ் செல்ஃபி மூலம், ஹுண்டாய் அரங்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹுண்டாய் N 2025 விஷன் கிரான் டூரிஸ்மோவுடன் பார்வையாளர்கள் விதவிதமாக உற்சாகத்துடன் வீடியோ எடுத்துக் கொண்டனர்.
HMIL நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் மார்கெட்டிங் துறையின் சீனியர் VP –யான திரு. ராகேஷ் ஸ்ரீவஸ்தவா, ஹுண்டாய் அரங்கத்தில் இடம்பெற்றிருந்த டிஜிட்டல் நிகழ்ச்சிகளைப் பற்றி பேசும் போது, “ஆட்டோ எக்ஸ்போவில் ஹுண்டாய் அரங்கத்திற்குக் கிடைத்த அதீதமான வரவேற்பைப் பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். எங்கள் நிறுவனம், டிஜிட்டல் நிகழ்சிகளில் ‘எக்ஸ்பீரியன்ஸ் ஹுண்டாய்’ என்னும் தீம் மூலம், தனித்துவமான, இன்டராக்டிவ் மற்றும் இண்ட்யூடிவ் முறையில் பார்வையாளர்களை வசீகரப்படுத்தியது. வடிவமைப்பு & பாதுகாப்பு, எதிர்கால தொழில்நுட்பம் மற்றும் டிஜிடலைசேஷன் போன்ற 3 விதமான தீம்களைக் கொண்டு ஹுண்டாயின் அரங்கம் உருவாக்கப்பட்டிருந்தது. இதன் மூலம், பார்வையாளர்கள் அனைவரும் ஹுண்டாய் பிராண்டின் தனித்தன்மை மற்றும் ஹுண்டாய் நிறுவனத்தின் தத்துவம் ஆகியவற்றை புரிந்துகொள்ளலாம்,” என்று கூறினார்.
மேலும் வாசிக்க : போட்டி நிலவரம் : ரெனால்ட் டஸ்டர் பேஸ்லிப்ட் vs ஹோண்டா BR – V vs ஹயுண்டாய் க்ரேடா vs மாருதி எஸ் - க்ராஸ்
0 out of 0 found this helpful