இந்தியாவில் 2025 Volvo XC90 -கார் வெளியிடப்பட்டுள்ளது
ஒரே ஒரு 'அல்ட்ரா' வேரியன்ட்டில் மட்டுமே இது கிடைக்கும். ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருந்த அதே மைல்டு-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன் உடன் வருகிறது.
-
புதிய ஹெட்லைட் வடிவமைப்பு, நவீன தோற்றம் கொண்ட LED DRL -கள் மற்றும் புதிய 21-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும்.
-
11.2-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 7 சீட்கள் உள்ளன.
-
12.3-இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பின்புற வென்ட்களுடன் கூடிய 4-ஜோன் ஆட்டோ ஏசி மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவையும் உள்ளன.
-
பாதுகாப்புக்காக இது மல்டிபிள் ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல்-2 ADAS ஆகியவற்றை கொண்டிருக்கும்.
இந்தியாவில் 2025 வோல்வோ XC90 கார் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 1.03 கோடியா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). வடிவமைப்பில் உள்ள மாற்றங்கள் குறைவானவை என்றாலும் கூட புதுப்பிக்கப்பட்ட XC90 முன்பு இருந்த அதே இன்ஜின்-ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன் உடன் இது கிடைக்கும். இது ஒரே ஒரு ஃபுல்லி லோடட் 'அல்ட்ரா' வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும்.
புதிய XC90 -ல் உள்ள அனைத்து விஷயங்களும் இங்கே:
வெளிப்புறம்
தோரின் சுத்தியல் (அவென்ஜர்ஸ் காமிக்ஸ் கதாபாத்திரம்) போன்ற வடிவம் கொண்ட LED DRL -கள் முன்பக்கம் உள்ளன. மேலும் ஸ்லீக்கரான எல்இடி ஹெட்லைட்களும் உள்ளன. கிரில் குரோம் ஃபினிஷ் கொண்ட புதிய சாய்ந்த லைன் டிஸைன் எலமென்ட்கள் உள்ளன. முன்பக்க பம்பரின் வடிவமைப்பும் இந்த காருக்கு மிரட்டலான மற்றும் ஆக்ரோஷமாக தோற்றத்தை கொடுப்பதற்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டில் பார்க்கும் போது XC90 ஃபேஸ்லிஃப்ட் டூயல்-டோன் 21-இன்ச் அலாய் வீல்கள், டோர்களில் சில்வர் கிளாடிங் மற்றும் ஜன்னல்களில் குரோம் பெசல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சில்வர் ரூஃப் ரெயில்களும் உள்ளன.
இந்த எஸ்யூவி -யானது புதிய வடிவிலான டெயில் லைட் டிஸைன், ரூஃப்-மவுண்டட் ஸ்பாய்லர் மற்றும் டெயில்கேட்டில் வால்வோ எழுத்துகளுடன் வருகிறது.
இது ஓனிக்ஸ் பிளாக், கிரிஸ்டல் ஒயிட், டெனிம் ப்ளூ, வேப்பர் கிரே, பிரைட் டஸ்க் மற்றும் புதிய மல்பெரி ரெட் கலர் உள்ளிட்ட 6 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
இன்ட்டீரியர்
இன்ட்டீரியரில் பெரிதாக எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. மேலும் 2025 XC90 -யில் இப்போது ஒரு பெரிய ஃப்ரீ-ஸ்டாண்டிங் டச் ஸ்கிரீன் மற்றும் அதன் பக்கங்கள் நீளமான ஏசி வென்ட்கள் உள்ளன. ஸ்டியரிங் வீலும் குறைந்த ஸ்போக் உடன் புதிய கிளாஸி-பிளாக் எலமென்ட் உடன் அதன் வடிவமைப்பு சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டின் மேல் ஒரு ஸ்பீக்கரும் உள்ளது. ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலை போன்ற இருக்கைகளுடன் 7-சீட்டர் அமைப்பும் அப்படியே தொடர்கிறது.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
வோல்வோ XC90 ஆனது ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலை போலவே 11.2-இன்ச் ஃப்ரீ ஸ்டாண்டிங் டச் ஸ்கிரீன், 12.3-இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 19-ஸ்பீக்கர் போவர்ஸ் வில்கின்ஸ் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட பல விஷயங்களை கொண்டுள்ளது. இது ஒரு பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வென்டிலேஷன் மற்றும் மசாஜ் ஃபங்ஷன்களுடன் பவர்டு சீட்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஒரு கலர் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD) மற்றும் 2 -வது மற்றும் 3 -வது வரிசை பயணிகளுக்கு ஏசி வென்ட்கள் கொண்ட 4-ஜோன் ஆட்டோ ஏசி ஆகியவையும் உள்ளன.
பாதுகாப்புக்காக இதில் மல்டி ஏர்பேக்குகள், ஹில் ஸ்டார்ட் மற்றும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றைப் கொண்டுள்ளது. இது 360 டிகிரி கேமரா, முன், பக்க மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோ பார்க் அசிஸ்ட் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளுடன் சில லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொகுப்பு ஆகியவற்றையும் இது கொண்டுள்ளது.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
2025 வோல்வோ XC90 ஆனது பிரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருந்த அதே மைல்ட்-ஹைப்ரிட் இன்ஜினுடன் வருகிறது. அதன் விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
48V மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
250 PS |
டார்க் |
360 Nm |
டிரான்ஸ்மிஷன் |
8-ஸ்பீடு AT |
டிரைவ்டிரெய்ன் |
AWD* |
*AWD = ஆல் வீல் டிரைவ்
போட்டியாளர்கள்
2025 வோல்வோ XC90 ஆனது மெர்சிடிஸ்-பென்ஸ் GLE, BMW X5, ஆடி Q7 மற்றும் லெக்ஸஸ் ஆர்எக்ஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.