சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2025 Skoda Kodiaq Sportline வேரியன்ட் 10 படங்களில் விளக்கப்பட்டுள்ளது

dipan ஆல் ஏப்ரல் 14, 2025 07:55 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
12 Views

ஸ்கோடா கோடியாக் ஏப்ரல் 17 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும்: ஸ்போர்ட்லைன் மற்றும் செலக்ஷன் எல்கே (லாரின் மற்றும் க்ளெமென்ட்).

ஸ்கோடா கோடியாக் ஸ்போர்ட்லைன் மற்றும் செலக்ஷன் எல்கே (லாரின் மற்றும் கிளெமென்ட்) ஆகிய இரண்டு வேரியன்ட்களில் முழு அளவிலான எஸ்யூவி கிடைக்கும் என்று செக் கார் தயாரிப்பாளரால் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. என்ட்ரி-லெவல் ஸ்போர்ட்லைன் வேரியன்ட்டின் சில படங்களை நாங்கள் பெற்றுள்ளோம், மேலும் நிஜ வாழ்க்கைப் படங்களின் உதவியுடன் அது பெறும் அனைத்தையும் பார்ப்போம்.

முன்பக்கம்

முன்பக்கம் ஒரு நேர்த்தியான ஹெட்லைட் வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் கிடைமட்டமாக அடுக்கப்பட்ட LED எலமென்ட்கள் மற்றும் கீழே வைக்கப்பட்டுள்ள ஃபாக் லைட்ஸ் ஆகியவை உள்ளன. சின்னமான ஸ்கோடா பட்டர்ஃபிளை கிரில் கிளாஸி பிளாக் கலரில் முடிக்கப்பட்டுள்ளது. எல்கே வேரியன்ட்டை போலல்லாமல் இது எந்த குரோம் எலமென்ட்களையும் பெறாது.

பம்பரில் தேன்கூடு மெஷ் பேட்டர்ன் எலமென்ட்கள் மற்றும் சி வடிவ முனைகள் கொண்ட பிளாக்-அவுட் ஏர் இன்டேக் சேனல்கள் உள்ளன.

பக்கவாட்டு தோற்றம்

18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்களை மேட் பிளாக் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்ட சக்கர வளைவுகளில் பாடி கிளாடிங் உள்ளது. வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள் (ORVMs) மற்றும் ரூஃப் ரெயில்ஸ் ஆகியவை உள்ளன. ரூஃப் -க்கு ஃபுளோட்டிங் விளைவைக் கொடுப்பதற்காக சி-பில்லரில் சில்வர் டிரிம் உள்ளது.

எல்கே டிரிமில் இருந்து வேரியன்ட்டை எளிதாக வேறுபடுத்திக் காட்ட, முன் ஃபெண்டர்களில் ஸ்போர்ட்லைன் பேட்ஜ்களைப் பெறுகிறது.

பின்புறம்

முன் ஃபெண்டர்களை போலவே, டெயில் கேட் இணைக்கப்பட்ட சி-வடிவ எல்இடி டெயில் விளக்குகளுக்கு மேல் தடித்த ‘ஸ்கோடா' எழுத்துகள் மற்றும் டெயில் கேட்டின் இருபுறமும் பிளாக் ‘கோடியாக்' மற்றும் ‘4x4' பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

இது பின்புற பம்பரில் ஒரு பிளாக் பகுதி மற்றும் கூடுதல் வேரியன்ட்டிற்காக ஒரு குரோம் பீஸ் உள்ளது. இது கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் பின்புற வைப்பர் ஆகியவற்றைப் பெறுகிறது.

இன்ட்டீரியர்

ஆல் பிளாக் கேபின் மற்றும் ஸ்கோடா எழுத்துகளுடன் கூடிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீலைக் கொண்ட அடுக்கு டேஷ்போர்டு கிடைக்கும். டாப்-எண்ட் செலக்ஷன் எல்கே வேரியன்ட்டை நீங்கள் தேர்வுசெய்தால், கேபின் பிளாக்/பெய்ஜ் கலர் ஸ்கீம் உடன் வரும்.

டாஷ்போர்டின் நடுப் பகுதியில் வொயிட் கலர் ஸ்டிச் மற்றும் ஏசி வென்ட்கள் சில்வர் உச்சரிப்புகளுடன் கூடிய லெதரெட் சாஃப்ட்-டச் மெட்டீரியல் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்தகைய சில்வர் ஃபினிஷ் உடன் கைப்பிடிகள் ஸ்மார்ட் டயல்கள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை ஏசி மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற பல்வேறு செயல்பாடுகளை இயக்க பயன்படுத்தலாம்.

கதவு பட்டைகள் டாஷ்போர்டை போன்ற ஒத்த லெதரெட் அப்ஹோல்ஸ்டரியையும் கொண்டுள்ளது மற்றும் சிக்கலான வடிவமைப்பு எலமென்ட்களுடன் கூடிய கிளாஸி சில்வர் ஷேப்டு டிரிம் உள்ளது.

இருக்கைகளில் கறுப்பு நிற லெதரெட் அப்ஹோல்ஸ்டரி உள்ளது, பின் இருக்கை பயணிகளுக்கு சென்டர் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் ஏசி வென்ட்கள் வெப்பநிலை மற்றும் ஃபேன் ஸ்பீடு கட்டுப்பாடுகள் உள்ளன.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

ஸ்கோடா 10.25 இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 12.9 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 13-ஸ்பீக்கர் கேன்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற ஏராளமான வசதிகளுடன் கோடியாக்கின் ஸ்போர்ட்லைன் வேரியன்ட்டை கொடுக்கும். இது 3-ஜோன் ஆட்டோ ஏசி, ஒரு பனோரமிக் சன்ரூஃப், டூயல் வயர்லெஸ் போன் சார்ஜர்கள், வென்டிலேஷன் மற்றும் பவர்டு முன் இருக்கைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

பாதுகாப்புக்காக 9 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், ஹில் ஸ்டார்ட் மற்றும் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (TPMS) ஆகியவை உள்ளன. ஸ்கோடா கோடியாக் எந்த வித அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களுடனும் (ADAS) வரவில்லை.

டாப்-எண்ட் செலக்ஷன் எல்கே வேரியன்ட்டை நீங்கள் தேர்வுசெய்தால், அது 360 டிகிரி கேமரா, டிரைவ் மோடுகள் மற்றும் மசாஜ் மற்றும் வென்டிலேஷன் செயல்பாடு கொண்ட முன் இருக்கைகள் போன்ற இன்னும் கொஞ்சம் அம்சங்களுடன் வருகிறது.

மேலும் படிக்க: 2025 கியா கேரன்ஸ் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் இப்போது சில டீலர்ஷிப்களில் தொடங்குவதற்கு முன்னதாக திறக்கப்பட்டுள்ளன

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

வரவிருக்கும் கோடியாக் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும் என்று ஸ்கோடா உறுதிப்படுத்தியுள்ளது, அதன் விவரங்கள் பின்வருமாறு:

இயந்திரம்

2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

பவர்

204 PS

டார்க்

320 Nm

டிரான்ஸ்மிஷன்

7-வேக DCT

கிளைம்டு மைலேஜ்

14.86 கி.மீ

டிரைவ்டிரெய்ன்

ஆல்-வீல் டிரைவ் (AWD)

பழைய கோடியாக் -ன் அதே இன்ஜின் ஆனால் செக் கார் தயாரிப்பாளர் 14 PS கூடுதல் பவரை கொடுக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ள்ளது, டார்க் அவுட்புட் முன்பு போலவே உள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

ஸ்கோடா கோடியாக் விலை ரூ. 45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) என எதிர்பார்க்கப்படுகிறது. உடன் போட்டியிடும் டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர், ஜீப் மெரிடியன் மற்றும் வரவிருக்கும் எம்ஜி மேஜர்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Skoda கொடிக் 2025

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.10 - 19.52 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.17.49 - 22.24 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.8.32 - 14.10 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை