• English
  • Login / Register

2020 டாடா நெக்ஸான் பிஎஸ்6 ஃபேஸ்லிஃப்ட் ஜனவரி 22 அன்று அறிமுகப்படுத்தப்படுகிறது

published on ஜனவரி 22, 2020 10:57 am by rohit for டாடா நிக்சன் 2020-2023

  • 45 Views
  • ஒரு கருத்தை எழுதுக

நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பிஎஸ்6 அமைப்பாக இருப்பினும், டாடா அதனை அதே பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கும் 

2020 Tata Nexon BS6 Facelift Launch On January 22

  • நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாற்றியமைக்கப்பட்ட முன் மற்றும் பின்புற பட்டியைப் பெறுகிறது.

  • முன்னர் இருந்தது போலவே அதே 6-வேக எம்டி மற்றும் 6-வேக ஏஎம்டி விருப்பத் தேர்வுகளுடன் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.

  • எதிர்பார்க்கப்படும் அம்ச புதுப்பிப்புகளில் சூரிய ஒளி திறப்பு மேற்கூரை மற்றும் இணைய அணுகல் கார் தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும்.

  • இது ஹூண்டாய் வெனியூ மற்றும் வரவிருக்கின்ற ரெனால்ட் எச்பிசி போன்றவைகளுக்குத் தொடர்ந்து போட்டியாக இருக்கும். 

டாடா மோட்டார்ஸ் கடந்த வருடம் டிசம்பர் 19 ஆம் தேதி நெக்ஸான் இவியை அறிமுகப்படுத்தியது, இது நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டின் முன் காட்சியை எங்களுக்கு வழங்கியது. பிஎஸ்6 இயக்க நுட்பங்களுடன் முகப்பு மாற்றப்பட்ட சப்-4 எம் எஸ்யுவி ஜனவரி 22 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்பதை இப்போது உறுதியாகக் கூறலாம். மேலும் என்னவெனில், டாடா தனது அனைத்து-புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் ஆல்ட்ரோஸ்‌ உடன் அதே நாளில் டியாகோ மற்றும் டைகர் ஃபேஸ்லிஃப்ட்களையும் அறிமுகப்படுத்த இருக்கின்றது.

 முகப்பு மாற்றப்பட்ட நெக்ஸான் பிஎஸ்6-இணக்கமான 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இயந்திரங்களின் மாதிரிகளுடன் வரும். இரண்டு இயந்திரங்களும் தற்போது 6-வேகக் கைமுறை அல்லது 6-வேக ஏஎம்டி விருப்பத் தேர்வு மூலம் கிடைக்கின்றன. இந்த வகைகளின் மின் வெளியீட்டு அளவு முறையே 110பி‌எஸ் / 170என்‌எம் மற்றும் 110பி‌எஸ் / 260என்‌எம் ஆக உள்ளன. எனினும், பிஎஸ்6 மேம்படுத்தல் காரணமாக இவை மாறக்கூடும்.

Tata Nexon EV

நெக்ஸான் ஃபேஸ்லிஃப்டின் அதிகாரப்பூர்வமான படத்திலிருந்து, அதன் மின்சார வகை மிகவும் பொதுவானது என்பது தெளிவாகிறது. இது ஒரு புதுப்பிக்கப்பட்ட முன் மோதுகைத் தாங்கி, மாறுபட்ட செருகல்களுடன் பிரகாசமான விளக்குகளுக்கான புதிய முகப்புகள், புதிய பாதுகாப்பு சட்டகம், புதுப்பிக்கப்பட்ட முகப்பு விளக்குகள், மாறுபட்ட செருகல்களுடன் புதிய பட்டி அமைப்பு மற்றும் உலோக சக்கரங்களின் புதிய வடிவமைப்பு ஆகியவற்றைப் பெறுகிறது. முகப்பு மாற்றப்பட்ட நெக்ஸானின் பின்பகுதியை பார்க்க வில்லை என்றாலும், இது பிற புதுப்பிப்புகளுடன் புதுப்பிக்கப்பட்ட பின்புற விளக்குகள் மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட பின்புற மோதுகைத் தாங்கி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

இதனுடைய அம்சங்களைப் பொறுத்தவரை, நெக்ஸான் இவியை பார்த்ததை போலவே சூரிய ஒளி திறப்பு மேற்கூரை, அரை-டிஜிட்டல் கருவி தொகுப்பு மற்றும் ஒரு பெரிய தொடுதிரை ஒளிபரப்பு முகப்பு போன்றவற்றில் இணைய அணுகல் கார் தொழில்நுட்பம் போன்ற கூடுதலான அம்சங்களுடன் ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸானை டாடா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Nexon

(தற்போதைய டாடா நெக்ஸான் விற்பனைக்கு உள்ளது)

நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டுக்கான முன்பதிவுகளை டாடா ஏற்கனவே ஏற்றுக்கொண்டிருக்கிறது. தற்போது இருக்கின்ற மாதிரியைக் காட்டிலும் இது குறைந்த அளவு உயர் மதிப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் விலையானது ரூபாய் 6.73 லட்சம் முதல் ரூபாய் 114 லட்சம் வரை இருக்கும் (தற்போதைய-டெல்லி விற்பனை கடை). அறிமுகப்படுத்தப்பட்டவுடன், மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி 300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் வரவிருக்கும் ரெனால்ட் எச்பிசி மற்றும் கியா க்யூஒய்ஐ ஆகியவற்றுடன் அதன் போட்டியை மீண்டும் ஆரம்பிக்கும்.

மேலும் படிக்க: நெக்ஸான் ஏஎம்டி

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Tata நிக்சன் 2020-2023

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience