- + 9நிறங்கள்
- + 32படங்கள்
- shorts
- வீடியோஸ்
க்யா சோனெட்
க்யா சோனெட் இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 998 சிசி - 1493 சிசி |
பவர் | 81.8 - 118 பிஹச்பி |
டார்சன் பீம் | 115 Nm - 250 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
டிரைவ் டைப் | ஃபிரன்ட் வீல் டிரைவ் |
மைலேஜ் | 18.4 க்கு 24.1 கேஎம்பிஎல் |
- பின்புற ஏசி செல்வழிகள்
- பார்க்கிங் சென்ஸர்கள்
- advanced internet பிட்டுறேஸ்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- சன்ரூப்
- wireless charger
- க்ரூஸ் கன்ட்ரோல்
- வென்டிலேட்டட் சீட்ஸ்
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- டிரைவ் மோட்ஸ்
- powered முன்புறம் இருக்கைகள்
- ஏர் ஃபியூரிபையர்
- 360 degree camera
- adas
- முக்கிய விவரக்குறிப்புகள்
- டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்
சோனெட் சமீபகால மேம்பாடு
சோனெட் விலை எவ்வளவு?
பேஸ் HTE பெட்ரோல்-மேனுவல் வேரியன்ட்டின் விலை ரூ.8 லட்சத்தில் இருந்து தொடங்கி டாப்-ஸ்பெக் எக்ஸ்-லைன் டீசல்-AT வேரியன்ட் விலை ரூ.15.77 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது.
சோனெட் -ல் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?
கியா சோனெட் 10 வேரியன்ட்களில் கிடைக்கும்: HTE, HTE (O), HTK, HTK (O), HTK+, HTX, HTX+, GTX, GTX+ மற்றும் X-லைன்.
பணத்திற்கான மிகவும் மதிப்பு வாய்ந்த வேரியன்ட் எது?
HTK+ வேரியன்ட் கொடுக்கும் பணத்துக்கான மதிப்பை கொண்டுள்ளது. இது நிறைய இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் வருகிறது. மேலும் இது 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப், கீலெஸ் என்ட்ரி, ரியர் டிஃபோகர், 6 ஸ்பீக்கர்கள் மற்றும் பல போன்ற அனைத்து அடிப்படையான வசதிகளையும் கொண்டுள்ளது.
சோனெட்டில் உள்ள வசதிகள் என்ன ?
சோனெட் -ன் ஹையர் வேரியன்ட்களில் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 7-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், கனெக்டட் கார் டெக்னாலஜி, சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், புஷ்-பட்டன் ஸ்டார் ஸ்டாப் மற்றும் கீலெஸ் என்ட்ரி போன்ற வசதிகள் உள்ளன.
பாதுகாப்பைப் பொறுத்தவரையில் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, EBD யுடன் கூடிய ABS, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் லெவல் 1 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ் (ADAS) ஆகியவை உள்ளன.
எவ்வளவு விசாலமானது?
கியா சோனெட் சிறிய குடும்பங்களுக்கு போதுமான விசாலமானதாக உள்ளது. ஆனால் அதே விலையில் (டாடா நெக்ஸான் அல்லது மஹிந்திரா XUV 3XO போன்றவை) மாற்று கார்களும் உள்ளன. அவை சிறந்த பின் இருக்கை இடத்தை வழங்குகின்றன. சோனெட் 385 லிட்டர் பூட் ஸ்பேஸை வழங்குகிறது. பூட்டில் ஒரு முழு அளவிலான சூட்கேஸ், நடுத்தர அளவிலான சூட்கேஸ் மற்றும் டிராலி பேக் அல்லது சில சிறிய பைகள் ஆகியவற்றை எளிதாக வைக்க முடியும். பின் இருக்கை 60:40 என ஸ்பிளிட் செய்யலாம். சோனெட்டின் இடம் மற்றும் நடைமுறை பற்றிய சிறந்த யோசனையைப் பெற எங்கள் விமர்சனத்தை படித்து பாருங்கள்.
என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன?
2024 கியா சோனெட் 3 இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது:
-
1.2-லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் - 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன்
அவுட்புட்- 83 PS மற்றும் 115 Nm
-
1-லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் - 6-ஸ்பீடு கிளட்ச்-பெடல் லெஸ் மேனுவல் (iMT) அல்லது 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக்
அவுட்புட்- 120 PS மற்றும் 172 Nm
-
1.5-லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் - 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு கிளட்ச்(பெடல்)-லெஸ் மேனுவல் (ஐஎம்டி) அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக்
அவுட்புட்- 115 PS மற்றும் 250 Nm
சோனெட்டின் மைலேஜ் எவ்வளவு ?
கிளைம்டு மைலேஜ் திறன் நீங்கள் தேர்வு செய்யும் வேரியன்ட் மற்றும் பவர்டிரெய்னைப் பொறுத்தது. வேரியன்ட் வாரியான கிளைம்டு மைலேஜை இங்கே பார்க்கலாம்:
-
1.2-லிட்டர் NA பெட்ரோல் MT - 18.83 கி.மீ/லி
-
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் iMT - 18.7 கி.மீ/லி
-
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் DCT - 19.2 கி.மீ/லி
-
1.5 லிட்டர் டீசல் MT - 22.3 கி.மீ/லி
-
1.5 லிட்டர் டீசல் AT - 18.6 கி.மீ/லி
சோனெட் எவ்வளவு பாதுகாப்பானது?
சோனெட்டின் பாதுகாப்பு கருவியில் லேன்-கீப் அசிஸ்ட், ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன், 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், மற்றும் ஒரு டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) உள்ளிட்ட லெவல் 1 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.
சோனெட்டின் கிராஷ் டெஸ்ட் சோதனை இன்னும் நடத்தப்படவில்லை.
எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன?
இம்பீரியல் ப்ளூ, பியூட்டர் ஆலிவ், கிளேசியர் ஒயிட் பேர்ல், ஸ்பார்க்லிங் சில்வர், இன்டென்ஸ் ரெட், அரோரா பிளாக் பெர்ல், கிராவிட்டி கிரே மற்றும் மேட் கிராஃபைட் உள்ளிட்ட 8 மோனோடோன் வண்ணங்களில் சோனெட் கிடைக்கிறது. இன்டென்ஸ் ரெட் வித் கலர் வித் அரோரா பிளாக் ரூஃப் மற்றும் கிளேஸியர் வொயிட் பேர்ல் கலர் வித் அன் அரோரா பிளாக் பேர்ல் ரூஃப். மற்றும் எக்ஸ்-லைன் வேரியன்ட் அரோரா பிளாக் பேர்ல் மற்றும் எக்ஸ்க்ளூஸிவ் மேட் கிராஃபிட் நிறத்தில் கிடைக்கும்.
நீங்கள் சோனெட் வாங்க வேண்டுமா?
தாராளமாக, நீங்கள் பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் மற்றும் பல வசதிகளுடன் வரும் சப்காம்பாக்ட் எஸ்யூவி ஆகும். நீங்கள் இந்த சந்தையில் ஒரு காரை தேடிக் கொண்டிருந்தால் சோனெட் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். மேலே உள்ள சில எஸ்யூவி களை விட சிறந்த கேபின் தரத்தை வழங்குவதன் மூலம் இது மிகவும் பிரீமியமாக உணர வைக்கும்.
இதற்கான மாற்று கார்கள் என்ன ?
பல ஆப்ஷன்கள் நிரம்பியுள்ள ஒரு பிரிவில் கியா சோனெட் உள்ளது. இங்கே சப்-4 மீட்டர் எஸ்யூவிகளான ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV 3XO, டாடா நெக்ஸான், மாருதி ஃபிரான்க்ஸ், டொயோட்டா டெய்சர் மற்றும் மாருதி பிரெஸ்ஸா ஆகிய கார்கள் தேர்வுக்காக உள்ளன.
சோனெட் ஹெச்டிஇ(பேஸ் மாடல்)1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹8 லட்சம்* | ||
சோனெட் ஹெச்டிஇ (ஓ)1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹8.44 லட்சம்* | ||
சோனெட் ஹெச்டிகே1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹9.24 லட்சம்* | ||
சோனெட் ஹெச்டிகே (ஓ)1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹9.60 லட்சம்* | ||
சோனெட் ஹெச்டிகே டர்போ ஐஎம்டி998 சிசி, மேனுவல், பெட்ரே ால், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹9.66 லட்சம்* | ||
சோனெட் ஹெச்டிகே (o) டர்போ imt998 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹10 லட்சம்* | ||
சோனெட் ஹெச்டிஇ (ஓ) டீசல்1493 சிசி, மேனுவல், டீசல், 24.1 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹10 லட்சம்* | ||
மேல் விற்பனை சோனெட் ஹெச்டிகே பிளஸ் (o)1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹10.54 லட்சம்* | ||
சோனெட் ஹெச்டிகே பிளஸ் (o) டர்போ imt998 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹11 லட்சம்* | ||
சோனெட் ஹெச்டிகே (ஓ) டீசல்1493 சிசி, மேனுவல், டீசல், 24.1 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹11.05 லட்சம்* | ||
சோனெட் ஹெச்டீஎக்ஸ் டர்போ ஐஎம்டீ998 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹11.83 லட்சம்* | ||
மேல் விற்பனை சோனெட் ஹெச்டிகே பிளஸ் (o) டீசல்1493 சிசி, மேனுவல், டீசல், 24.1 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹12 லட்சம்* | ||
சோனெட் ஹெச்டிஎக்ஸ் டீசல்1493 சிசி, மேனுவல், டீசல், 24.1 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹12.52 லட்சம்* | ||
சோனெட் ஹெச்டிஎக்ஸ் டர்போ டிசிடி998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹12.70 லட்சம்* | ||
சோனெட் ஹெச்டிஎக்ஸ் டீசல் ஏடி1493 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 19 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹13.39 லட்சம்* | ||
சோனெட் ஜிடீஎக்ஸ் பிளஸ் டர்போ டிசிடீ998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹14.80 லட்சம்* | ||
சோனெட் எக்ஸ்டிரைவ்40டி டிசைன் பியூர் எக்ஸலென்ஸ ்998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 18.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹15 லட்சம்* | ||
சோனெட் கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி(டாப் மாடல்)1493 சிசி, ஆட்டோமெட்டிக், டீசல், 19 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | ₹15.60 லட்சம்* |
க்யா சோனெட் விமர்சனம்
Overview
கியா சோனெட் காரானது ஹூண்டாய் வென்யூ, மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மற்றும் மஹிந்திரா XUV300 போன்ற கார்களுக்கு போட்டியாக விற்பனைக்கு வந்துள்ள கியாவின் என்ட்ரில் லெவல் எஸ்யூவி ஆகும். 2020 ஆண்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் இப்போது வெளியாகியுள்ளது. இந்த ஃபேஸ்லிஃப்ட்டில், இது பிரிவில் சிறந்த வசதிகள் மற்றும் அதிக பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
க்யா சோனெட் வெளி அமைப்பு
கியா சோனெட்டின் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஒட்டுமொத்த வடிவத்தில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், கியா எந்த ஷார்ட் கட்டையும் பயன்படுத்தவில்லை. நீங்கள் முன்பக்கத்தில் பார்த்தால், கன்மெட்டல் கிரே எலமென்ட்களை பார்க்க முடியும். ஹெட்லேம்ப்கள் அனைத்தும் LED யூனிட்கள் மற்றும் DRL -கள் ஆகியவை மிகவும் சிறப்பானவை மற்றும் இவை இரவில் அழகாக இருக்கும்.
ஃபாக் லைட்ஸ் ஒவ்வொரு வேரியன்ட்களுக்கும் ஏற்ப வேறுபடுகின்றன மற்றும் இரண்டு அலாய் வீல் வடிவமைப்புகளுடன் நான்கு வெவ்வேறு வீல் ஆப்ஷன்களும் உள்ளன. பின்புறத்தில் ஒரு புதிய ஸ்பாய்லர் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் LED கனெக்டட் டெயில் லேம்ப்கள் அழகாக இருக்கும். எனவே, ஒட்டுமொத்தமாக, இந்த சோனெட் முந்தையதை விட சிறப்பாக உள்ளது. எனவே ஃபேஸ்லிப்ட்டுக்கான இலக்கு அடையப்பட்டு விட்டது என்றே சொல்ல வேண்டும்.
சோனெட் உள்ளமைப்பு
சோனெட்டின் கீ மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த கீ -யை EV6 -ல் பார்க்க முடிந்தது. அதன் பின்னர் செல்டோஸிலும், இப்போது சோனெட்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் லாக், அன்லாக், ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் மற்றும் பூட் -டை திறப்பதற்கான ஆப்ஷன்களை பெறுவீர்கள். இந்த கீ நிச்சயமாக பழையதை விட அதிக பிரீமியமாக இருக்கின்றது.
இதன் ஃபிட், ஃபினிஷ் மற்றும் தரம் உட்புறத்தின் சிறப்பம்சமாக தோன்றுகின்றது. நீங்கள் இங்கு பார்க்கும் அனைத்து எலமென்ட்களும் மிகவும் நன்றாக ஃபிட் செய்யப்பட்டுள்ளன மற்றும் அவை அசைவதில்லை மேலும் தளர்வான உணர்வையும் கொடுக்கவில்லை. இதனால் கார் சில வருடங்களுக்கு பிறகும் எந்த சத்தத்தையும் எழுப்பாது என நம்பலாம். பிளாஸ்டிக்குகளை பொறுத்தவரையில் அதன் ஃபினிஷ் மற்றும் ஸ்டீயரிங் லெதர் ரேப், சீட் அப்ஹோல்ஸ்டெரி மற்றும் ஆர்ம்ரெஸ்ட் லெதர் ரேப் ஆகியவற்றின் தரம் நன்றாகவே இருக்கிறது. உண்மையில், இந்த கேபினில் அமர்ந்து பார்க்கும் போது நீங்கள் பிரீமியம் மற்றும் விலையுயர்ந்த காரில் அமர்ந்திருக்கும் உணர்வை பெறுவீர்கள். இருப்பினும், முன்பக்கத்தில் உள்ள இந்த பெரிய கிளாடிங் மற்றும் இந்த சென்டர் கன்சோல் காரணமாக கேபின் அமைப்பு சற்று வித்தியாசமாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த அப்டேட் மூலமாக கியா சென்டர் கன்சோலின் பட்டன்களை மேம்படுத்தியுள்ளது; இருந்தாலும் கூட, புதிய செல்டோஸில் உள்ளதைப் போலவே டேஷ் போர்டின் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அம்சங்கள்
வசதிகளின் அடிப்படையில் கியா சோனெட் எப்போதும் முதலிடத்திலேயே இருந்து வந்ததுள்ளது. ஆனால் சமீபத்தில் இந்த பிரிவில் போட்டி அதிகரித்ததால் இந்த கிரீடம் அதனிடம் இருந்து பறிக்கப்பட்டது. இருப்பினும், கூடுதல் அம்சங்களுடன், இது மீண்டும் இந்த பிரிவில் கூடுதலான வசதிகளைக் கொண்ட ஃபுல்லி லோடட் எஸ்யூவி ஆகும்.
கூடுதல் அம்சங்களை பற்றி பார்க்கும் போது, இப்போது இது ஒரு அற்புதமான டிஸ்பிளேவுடன் ஆல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை பெறுகிறது. இதை செல்டோஸிலும் பார்க்க முடிந்தது, இங்கே அதன் அமைப்பு, டிஸ்பிளே மற்றும் கிராபிக்ஸ் நன்றாக உள்ளது. கூடுதலாக, இப்போது இது 360 டிகிரி கேமராவையும் கொண்டுள்ளது. உங்களுக்கு பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர்களின் வசதியும் கிடைக்கும். எனவே வாகனம் ஓட்டும் போது, பாதுகாப்பு மற்றும் வசதி இன்னும் கொஞ்சம் அதிகரிக்கிறது.
மேலும், 360-டிகிரி கேமராவின் தரம் மற்றும் காட்சி அமைப்பும் மிகவும் தெளிவாக இருப்பதால், பயன்படுத்த எளிதாக உள்ளது. கூடுதலாக, இந்த கேமராவின் காட்சி உங்கள் மொபைலில் பார்க்க முடியும். எனவே, கார் எங்கோ தொலைவில் நிறுத்தப்பட்டு, அது பாதுகாப்பாக இல்லை என்று உங்களுக்கு தோன்றுகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த வசதியால் நீங்கள் தொலைவில் இருந்தாலும் கூட ஸ்மார்ட்போனில் இருந்தபடியே காரின் சுற்றுப்புறங்களை சரிபார்க்கலாம், இது மிகவும் நேர்த்தியான அம்சமாகும்.
டிரைவருக்கான வசதியை அதிகரிக்க, கியா டிரைவருக்காக 4-வே அட்ஜெஸ்ட்டபிள் பவர் சீட்களையும் சேர்த்துள்ளது, அதாவது ஸ்லைடிங் மற்றும் சாய்வதை எலக்ட்ரிக்காக அட்ஜஸ்ட் முடியும். இருப்பினும் உயரத்தை சரி செய்வது இன்னும் மேனுவலாகவே உள்ளது. மற்ற அம்சங்களில் 7-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்ஸ், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், டிரைவ் மோடுகள், டிராக்ஷன் மோட்கள், முன்பக்க வென்டிலேட்டட் சீட்கள், ஆட்டோ டே-நைட் IRVM, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், சன்ரூஃப் மற்றும் ஏர் பியூரிஃபையர் ஆகியவை உள்ளன.
இன்ஃபோடெயின்மென்ட் பற்றி பார்க்கும் போது, சோனெட் இன்னும் இந்த 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வருகிறது, இது செக்மென்ட்டில் சிறந்தது. இதே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வென்யூவில் வேறு ஒரு தீமில் கிடைக்கிறது.டிஸ்பிளே ஸ்மூத் ஆக உள்ளது மற்றும் மிகவும் துல்லியமானது. மேலும் குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால், எந்த பிழையும் இல்லை. அது எப்போதும் சீராக இயங்குகின்றது. அதைப் பயன்படுத்திய அனுபவம் மிகவும் நன்றாகவே உள்ளது. இது போஸ் 7-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இது மிகவும் சிறப்பாக உள்ளது. ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இதில் இல்லை. அதற்கு, நீங்கள் இன்னும் ஒரு வயர் மூலமாகவே கனெக்ட் செய்ய வேண்டியிருக்கும், அதுவும் USB கேபிளை இணைக்க வேண்டும், ஏனெனில் Type C கேபிளை பயன்படுத்த முடியாது.
கேபின் நடைமுறை தன்மை
சோனெட்டின் கேபின் பயணிகளுக்கும் மிகவும் ஏற்ற வேரியன்ட்யிலேயே உள்ளது. இங்கே நீங்கள் நிறைய ஸ்டோரேஜ் மற்றும் சார்ஜிங் ஆப்ஷன்களை பெறுவீர்கள். 1 லிட்டர் பாட்டில் மட்டுமின்றி கூடுதலாக சில பொருட்களை எளிதாக வைத்திருக்க உதவும் டோர் பாக்கெட்டுகளுடன் ஆரம்பிக்கலாம். அதுமட்டுமின்றி, உங்கள் ஃபோன் அதிக வெப்பமடையாமல் இருக்க ஏர் வென்ட்டுடன் கூடிய வயர்லெஸ் சார்ஜரை கொண்ட ஒரு பெரிய ஓபன் ஸ்டோரேஜ் மையத்தில் உள்ளது. அதன் பின்னால் இரண்டு கப் ஹோல்டர்கள் மற்றும் ஒரு ஃபோன் ஸ்லாட் உள்ளது. ஆர்ம்ரெஸ்டின் உள்ளேயும் உங்களுக்கு இடம் கிடைக்கும், ஆனால் ஏர் ஃபியூரிபையர் காரணமாக இடம் சிறிது சமரசம் செய்யப்பட்டுள்ளது. க்ளோவ் பாக்ஸ் தேவையான அளவில் உள்ளது ஆனால் கூல்டு வசதி கிடையாது. சார்ஜிங் ஆப்ஷன்கள் பற்றி பார்க்கும் போது Type C, வயர்லெஸ் சார்ஜர், USB சார்ஜர் மற்றும் 12V சாக்கெட் உள்ளது.
பின் இருக்கை அனுபவம்
பின் இருக்கையில் இருப்பவர்களுக்கு சோனெட்டில் நல்ல இடவசதி உள்ளது. முன் இருக்கைகளுக்கு அடியில் இடம் இருப்பதால் கால்களையும் நீட்டலாம். முழங்கால் அறை போதுமானது மற்றும் ஹெட் ரூம் நன்றாக உள்ளது. எனவே 6 அடிக்கு மேல் இருப்பவர்களும் எந்த புகாரும் செய்ய மாட்டார்கள். ஆனால் இருக்கையின் வசதி இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். பேக்ரெஸ்ட் கோணம் தளர்வாக இருக்கின்றது ஆனால் கான்டூரிங் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால் ஒருவேரியன்ட்யில் இந்த தட்டையான இருக்கைகள் ஒரு வசதியை தருகின்றன: இதில் 3 பெரியவர்கள் அமருவது மிகவும் வசதியானதாக உள்ளது. மூன்றாவது பயணிக்கு ஹெட்ரெஸ்ட் கொடுக்கப்படவில்லை என்றாலும், 3-பாயின்ட் சீட் பெல்ட் உள்ளது.
நல்ல விஷயம் என்னவென்றால், இந்த இருக்கையில் நீங்கள் நிறைய அம்சங்களைப் பெறுகிறீர்கள். இந்த ஆர்ம்ரெஸ்டில் 2 கப் ஹோல்டர்கள் மற்றும் சரியான உயரத்தில் உள்ளது, மேலும் கதவு ஆர்ம்ரெஸ்ட் ஒரே மாதிரியாக இருப்பதால் பயன்படுத்த வசதியாக இருக்கும். கூடுதலாக, கதவு ஆர்ம்ரெஸ்ட் லெதரால் மூடப்பட்டுள்ளது, எனவே நீங்கள் இங்கேயும் பிரீமியம் உணர்வை பெறுவீர்கள். ஜன்னல் சன் ஷேட்கள் கோடைக்காலத்தில் உதவுவதோடு, சார்ஜ் செய்வதற்கும் இரண்டு Type-C போர்ட்களை பெறுவீர்கள். உங்கள் போன் அல்லது பர்ஸை நீங்கள் வைப்பதற்காக ஒரு ஸ்டோரேஜ் பகுதியும் உள்ளது மற்றும் பின்புற ஏசி எர் சர்க்குலேஷனுக்கு உதவுகிறது. இருப்பினும், ஃபுளோவர் கன்ட்ரோல் இதில் இல்லை. மொபைல் மற்றும் வாலட்டுகளுக்கு புதிய இருக்கை பின் பாக்கெட் உள்ளது. ஒட்டுமொத்தமாக, அனுபவத்தின் பார்வையில் இருக்கையை பார்த்தால், அம்சங்கள் வசதியை உருவாக்குகின்றன மற்றும் இந்த அனுபவம் முழுமையான உணர்வை கொடுக்கின்றது.
சோனெட் பாதுகாப்பு
பாதுகாப்பிலும் சில அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. அடிப்படை வேரியன்ட் உடன் 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்டாக பெறுவீர்கள். கூடுதலாக, இந்த காரின் சிறந்த வேரியன்ட்களில் ADAS ஆப்ஷன்களை பெறுவீர்கள். ஆனால் இது ரேடார் அடிப்படையிலானது அல்ல, கேமரா அடிப்படையிலானது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எனவே, ஃபிரன்ட் கொலிஷன் அவாய்டன்ஸ் அசிஸ்ட், ஃபிரன்ட் கொலிஷன் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் லேன் டிபார்ச்சர் வார்னிங் போன்ற அம்சங்களை பெறுவீர்கள், ஆனால் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற ரேடார் அடிப்படையிலான செயல்பாடுகள் இந்த காரில் கிடையாது.
சோனெட் காரானது விரைவில் பாரத் NCAP ஆல் சோதிக்கப்படும் என்று நம்புகிறோம். நாம் செல்டோஸில் பார்த்தது போல் ஃபேஸ்லிஃப்ட்டில் சில பாடி மற்றும் கட்டமைப்பில் வலுவூட்டல்கள் இருந்திருந்தால், கூடுதலாக மதிப்பெண் கிடைப்பதற்காக உதவும்.
க்யா சோனெட் பூட் ஸ்பேஸ்
கியா சோனெட்டில் இந்த செக்மென்ட்டிலேயே சிறந்த பூட் ஸ்பேஸ் கிடைக்கும். இதற்குக் காரணம், ஃபுளோர் அகலமாகவும், நீளமாகவும், தட்டையாகவும் இருக்கும். மேலும் இது பெரிதாகவும் இருப்பதால் பெரிய சூட்கேஸ்களை எளிதாக இங்கு வைக்கலாம். நீங்கள் சாமான்களை மற்றொன்றுக்கு மேலே அடுக்கி வைக்கலாம் மற்றும் நிறைய சிறிய பைகளை வைக்கலாம். நீங்கள் ஒரு பெரிய பொருளை நகர்த்த விரும்பினால், இந்த இருக்கைகளை 60-40 ஸ்பிளிட் செய்யலாம் , ஆனால் தட்டையான ஃபுளோர் கிடைக்காது.
க்யா சோனெட் செயல்பாடு
கியா சோனெட் மூலம் நீங்கள் நிறைய இன்ஜி மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பெறுவீர்கள். உண்மையில் இது இந்த பிரிவில் உள்ள மிகவும் சிறப்பான கார் ஆகும். நீங்கள் நகரத்தில் சௌகரியமாக ஓட்ட விரும்பினால், உங்களிடம் 1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது ஒரு ரீஃபைன்மென்ட் ஆன 4-சிலிண்டர் இன்ஜின் மற்றும் நகரத்தில் ஓட்டுவதற்கு மென்மையாகவும் நிதானமாகவும் இருக்கும். நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஆனால் நீங்கள் சில விரைவான முந்திச் செல்வதைத் விரும்புவீர்கள் என்றாலோ டிரைவிங்கில் கூடுதலான ஆற்றலையும் உற்சாகத்தையும் தேடுகிறீர்கள் என்றாலோ அது இந்த இன்ஜினில் கிடைக்காது. ஆம், இது மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே கிடைக்கும்.
உங்கள் டிரைவிங்கில் கூடுதலான உற்சாகத்தை நீங்கள் விரும்பினாலோ மற்றும் வேகமான காரை விரும்பினாலோ, நீங்கள் 1.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோலை இன்ஜினை தேர்வு செய்ய வேண்டும். இந்த இன்ஜினும் மிகவும் ரீஃபைன்மென்ட் ஆக உள்ளது, மேலும் நெடுஞ்சாலையிலும் நகரத்திலும் விரைவாக முந்திச் செல்லும் திறனும் கிடைக்கும். செயல்திறனுக்காக, குறிப்பாக நீங்கள் அதை ஆர்வத்துடன் ஓட்டினால், அது அதிக மைலேஜில் பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் செயல்திறன் நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு ஏற்றபடி இருக்கும். 6-ஸ்பீடு இன்டெலிஜென்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன், கிளட்ச்லெஸ் மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DCT போன்ற அதிக டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் உங்களுக்கு கிடைக்கும். இது 3 டிரைவ் மோடுகளையும் பெறுகிறது, இருப்பினும் ஸ்போர்ட் மோட் ட்ராஃபிக்கில் சற்று அதிகமாக இருக்கும். நார்மல் மோடில் டிரைவிங் மற்றும் ஃபெர்பாமன்ஸ் ஆகியவற்றுக்கு இடையே நல்ல சமநிலையை வழங்கும். இகோ மோடில், டிரைவிங் சற்று மெதுவாக செல்வதை போன்ற உணர்வை கொடுக்கின்றது.
ஆனால் நீங்கள் ஒரு ஆல்-ரவுண்டரை விரும்பினால் -- நெடுஞ்சாலையில் பயணம் செய்ய விரும்பினால், நகரத்தில் முந்துவதற்கான சக்தி மற்றும் ஓரளவு மைலேஜ் தரும் இன்ஜின் ஆகியவற்றை நீங்கள் விரும்பினால், ஒரே ஒரு வழி உள்ளது: 1.5 லிட்டர் டீசல் இன்ஜின். இது ஒரு மென்மையான டிரைவிங் அனுபவம் மற்றும் ஆள்கள் இல்லாத சாலைகளில் சிரமமின்றி பயண அனுபவத்தை வழங்குகிறது. மேலும் இந்த இன்ஜின் மேனுவல், iMT க்ளட்ச்லெஸ் மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகியவற்றுடன் மிகவும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது. மொத்தம் உள்ள மூன்றில் இதுவே நாங்கள் பரிந்துரைக்கும் ஒன்றாக உள்ளது.
நீங்கள் டீசல் இன்ஜினை வாங்கப் போகிறீர்கள் என்றால் ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். இந்த ஃபேஸ்லிஃப்ட்டில், ஒரு AdBlue டேங்க் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. AdBlue என்பது யூரியா அடிப்படையிலான ஒரு லிக்விட் ஆகும், இது வாகனத்தின் மாசு உமிழ்வைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் இதை ஒரு முறை நிரப்பினால் சுமார் 10,000 கி.மீ வரை நீடிக்கும். அதை டாப் ஆஃப் செய்ய உங்களுக்கு சுமார் ரூ. 900-1000 செலவாகலாம். ஆனால் இது ஒரு பெரிய செலவு அல்ல, ஆனால் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் காட்டப்படும் AdBlue -வின் அளவை கட்டாயமாக கவனத்தில் வைக்க வேண்டும்.
க்யா சோனெட் ரிடே அண்ட் ஹண்ட்லிங்
கம்ஃபோர்ட் என்பது எப்போதும் சோனெட்டின் வலுவான விஷயங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆம், இந்த பிரிவில் இது மிகவும் வசதியான கார் இல்லை, ஆனால் நீங்கள் இதில் உட்கார்ந்தால் புகார் எதுவும் செய்ய மாட்டீர்கள். மேலும் இந்த ஃபேஸ்லிஃப்ட்டில், மோசமான சாலைகளை சிறப்பாகச் சமாளிக்க சஸ்பென்ஷன் சிறப்பாக உள்ளது, இந்த வசதி கொஞ்சம் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது. இது மோசமான சாலைகளில் அமைதியை பராமரிக்கிறது மற்றும் உங்களை நன்கு கம்ஃபோர்ட் ஆக வைத்திருக்கும். ஆழமான பள்ளங்களில் கொஞ்சம் இது தடுமாறுகின்றது. நீங்கள் ஸ்பீட் பிரேக்கரில் அல்லது கரடுமுரடான சாலைப் பாதையில் வாகனம் ஓட்டினாலும் அல்லது மென்மையான நெடுஞ்சாலையில் பயணித்தாலும், சஸ்பென்ஷன் சீரானதாக இருக்கும்.
சோனெட் மூலம் பாதுகாப்பான மற்றும் உறுதியளிக்கும் கையாளுதல் பேக்கேஜும் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் இந்த காரை ஒரு மலை வாசஸ்தலத்திற்கு எடுத்துச் செல்லப் போகிறீர்கள் என்றால், இதை ஓட்டுவது ஃபன் -ஆக இருக்கும். இருப்பினும், எனக்கு ஒரு சிறிய புகார் உள்ளது, இது இந்த எஸ்யூவி -யின் சவுண்ட் இன்சுலேஷன். இது இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். இது சிறப்பாக இருந்திருந்தால், இந்த கார் தரும் பிரீமியம் உணர்வை மேம்படுத்தியிருக்கும்.
க்யா சோனெட் வெர்டிக்ட்
இறுதியாக, சோனெட்டில் நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுகிறீர்களா? ஆம்! கிராஷ் டெஸ்ட் முடிந்தவுடன், இறுதியான சந்தேகமும் தெளிவாகும். ஆனால் இவை அனைத்தையும் பெற, நீங்கள் ஒரு கொஞ்சம் அதிகம் விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதாவது, டெல்லியில் டாப்-எண்ட் சோனெட்டை வாங்கினால், ரூ.17 லட்சத்துக்கும் மேல் ஆன்-ரோடு விலையாக செலுத்த வேண்டும். இப்போது, இந்த விலையில், நீங்கள் ஃபுல்லி லோடட் சோனெட்டை வாங்கலாம் அல்லது நன்கு சிறப்பான வசதி கொண்ட செல்டோஸை பெறலாம். இது அதிக இட வசதி, சாலை தோற்றம் மற்றும் நல்ல மதிப்பை வழங்கும். ஆனால் எதை தேர்வு செய்வது என்பது மிகவும் கடினமாக விஷயமாகவே இருக்கும்.
க்யா சோனெட் இன் சாதகம் & பாதகங்கள்
நாம் விரும்பும் விஷயங்கள்
- சிறந்த லைட்டிங் அமைப்புடன் முன்பை விட தோற்றம் நன்றாக இருக்கிறது.
- மேலே உள்ள ஒரு பிரிவில் இருந்து பெறப்பட்டு இதில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் அம்சங்கள், அதன் பிரிவில் கூடுதலான வசதிகள் கொண்ட எஸ்யூவி -யாக உள்ளது.
- 3 இன்ஜின்கள் மற்றும் 4 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன், செக்மென்ட்டில் அதிக எண்ணிக்கையிலான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.
நாம் விரும்பாத விஷயங்கள்
- மேலே உள்ள ஒரு பிரிவில் இருந்து பவர்டிரெய்ன்கள் மற்றும் அம்சங்களை கடன் வாங்குவது அதை மிகவும் விலை உயர்ந்ததாக ஆக்கியுள்ளது.
- கேபின் இன்சுலேஷன் சிறப்பாக இருந்திருக்கலாம்.
- போக்குவரத்தில் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொண்ட காரில் ஸ்போர்ட் மோடை பயன்படுத்தினால் ஓட்டுவதற்கு ஜெர்க்கியாக உள்ளது கொடுக்கின்றது.
க்யா சோனெட் comparison with similar cars
![]() Rs.8 - 15.60 லட்சம்* | ![]() Rs.7.94 - 13.62 லட்சம்* | ![]() Rs.11.19 - 20.51 லட்சம்* | ![]() Rs.8 - 15.60 லட்சம்* |