2020 ஹூண்டாய் கிரெட்டாவின் அறிமுகத்திற்கு முந்தைய முன்பதிவு தொடங்கியுள்ளது
published on மார்ச் 04, 2020 02:40 pm by dinesh for ஹூண்டாய் கிரெட்டா 2020-2024
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
<முன் பணமாக ரூபாய் 25,000 கொடுத்து ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் முன்பதிவு செய்யலாம்
-
நடுத்தர அளவான எஸ்யூவியில் நாம் தேர்வு செய்வதற்காக மூன்று இயந்திர விருப்பங்களுடன் வழங்கப்படுகிறது.
-
இது வெளிபுறக் காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளித் திறப்பு மேற்கூரை, திசைத் திருப்பி மற்றும் இணைய அணுகல் கார் தொழில்நுட்பம் போன்ற சிறப்பம்சங்களைப் பெறும்.
- புதிய கிரெட்டாவானது க்யா செல்டோஸ், நிசான் கிக்ஸ், டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டருக்கு போட்டியாக இருக்கும்.
ஹூண்டாய் நிறுவனம் 2020 கிரெட்டாவிற்கான அறிமுகத்திற்கு முந்தைய முன்பதிவுகளை ரூபாய் 25,000 முன்பணத்துடன் (திரும்பப்பெறக்கூடியது) தொடங்கியிருக்கின்றது. இது மார்ச் 17 அன்று விற்பனைக்கு வரும்போது, இ, இஎக்ஸ், எஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) என ஐந்து வகைகளில் வழங்கப்படும். புதிய கிரெட்டாவின் விலை ரூபாய் 10 லட்சத்திலிருந்து ரூபாய் 16 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது க்யா செல்டோஸ், ரெனால்ட் கேப்டூர், நிஸான் கிக்ஸ் மற்றும் டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டரின் சில வகைகளுக்கு போட்டியாக இருக்கும். ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ஹூண்டாய் ஏற்கனவே இரண்டாவது தலைமுறை கிரெட்டாவை காட்சிப்படுத்தியது, எனவே இதுவரை எஸ்யூவி பற்றி எங்களுக்குத் தெரிந்ததைப் பார்ப்போம்.
-
இது அதன் இயந்திரங்கள் மற்றும் செலுத்துதல் முறையை க்யா செல்டோஸுடன் பகிர்ந்து கொள்ளும்.
-
பெட்ரோல் இயந்திரங்கள்: 1.4-லிட்டர் டர்போ (140பிஎஸ் / 242என்எம்) மற்றும் 1.5-லிட்டர் (115பிஎஸ் / 144என்எம்).
-
115பிஎஸ் / 250என்எம் ஐ உருவாக்கக் கூடிய ஒரு 1.5 லிட்டர் டீசல் இயந்திரத்தைக் கொண்டுள்ளது.
6-வேக 1.5 லிட்டர் கைமுறை இயந்திரங்களுடன் நிலையாக வழங்கப்படுகிறது, அதே சமயத்தில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இயந்திரம் ஒரு தானியங்கி முறை செலுத்துதல் விருப்பத்துடன் மட்டுமே வரும். தானியங்கி முறை செலுத்துதல் விருப்பங்களில் சிவிடி (1.5-லிட்டர் பெட்ரோல்), 6-வேக முறுக்குதிறன் மாற்றி (1.5-லிட்டர் டீசல்) மற்றும் 7-வேக டிசிடி (1.4-லிட்டர்) ஆகியவை அடங்கும்.
-
ஆறு காற்றுப்பைகள், இபிடி உடன் ஏபிஎஸ், பின்புறமாக மற்றும் முன்புறம் வாகனத்தை நிறுத்த உதவக்கூடிய உணர்விகள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்றவை பாதுகாப்பு சிறப்பம்சங்களில் அடங்கும்.
-
இது எல்இடி முகப்புவிளக்குகள் மற்றும் பின்புற விளக்குகள், வெளிபுறக் காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளித் திறப்பு மேற்கூரை மற்றும் ஆற்றல் மிக்க சரிசெய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் காற்றோட்ட அமைப்புகள் உடைய முன் இருக்கைகள் போன்ற சிறப்பம்சங்களையும் பெறும்.
-
ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் வென்யூவில் இருப்பது போன்ற இணைய அணுகல் கார் தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் 7 அங்குல ஓட்டுனர் திரை மற்றும் 10.25 அங்குல தொடுதிரை ஒளிப்பரப்பு அமைப்பு போன்றவை இருக்கிறது.
இரண்டாவது தலைமுறை கிரெட்டாவை அறிமுகப்படுத்திய உடனேயே, ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னாவையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரஷ்யா-சிறப்பம்சம் பொருந்திய மாதிரியை ஒத்ததாக இருக்கும். கிரெட்டாவைப் போலவே, புதுப்பிக்கப்பட்ட வெர்னாவும் சில கூடுதலான சிறப்பம்சங்களுடன் பல பிஎஸ்6 இயந்திர விருப்பங்களுடன் வழங்கப்படும்.
மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா டீசல்
0 out of 0 found this helpful