சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2016 மினி கூப்பர் கன்வர்டிபல் பற்றிய தகவல்கள் டோக்யோ மோட்டார் ஷோவிற்கு முன்னரே வெளியிடப்பட்டது

published on அக்டோபர் 26, 2015 04:04 pm by nabeel for மினி கூப்பர் மாற்றக்கூடியது

ஜெய்பூர் :

மினி தன்னுடைய புதிய டிராப் - டாப் மாடலை எதிர்வரும் டோக்யோ மோட்டார் ஷோவில் வெளியிடத் தயாராக உள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரிக்கும் விதத்தில் அறிமுகத்திற்கு முன்னரே இந்த புதிய கன்வர்டிபல் கார்களின் புகைப்படங்களை மினி வெளியிட்டுள்ளது. 2016 மார்ச் மாதத்தில் இங்கிலாந்தில் விற்பனைக்கு வர உள்ள இந்த கார்கள், ஆண்டின் இறுதியில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று தெரிகிறது. முழுதும் மின்சாரத்தில் இயங்கும் கூரை பொருத்தப்பட்டுள்ளது தான் இந்த கார்களின் அதிமுக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் முந்தைய மாடலில் இருந்ததைவிட மேலும் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாகனம் உருண்டு விழும் விபத்து சூழலில் சென்சார் உடன் கூடிய சிங்கில் பீஸ் ரோல்பார் கொண்ட அதி நவீன ரோல்ஓவர் ப்ரொடெக்க்ஷன் அமைப்பு தானாக அதை கண்டுபிடித்து பாதுகாப்பை உறுதி செய்யும்.

1.5லிட்டர் டீசல் அல்லது 1.2/1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் இந்த புதிய கர்வர்டிபல் சக்தியூட்டப்படும் என்று தெரிகிறது. மேலும் 6 - வேக தானியங்கி மற்றும் கைகளால் இயக்கக்கூடிய (மேனுவல்) இரண்டு ட்ரேன்ஸ்மிஷன் ஆப்ஷன்கலுமே அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறியப்படுகிறது. கூடவே தானியங்கி (ஆட்டோமேடிக்) ஆப்ஷனில் ஸ்டீரிங் வீல் உடன் ஷிப்ட் பேடல்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மின்னணு லாக் உடன் கூடிய டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ட்ரேக்க்ஷன் கண்ட்ரோல் அம்சங்கள் அனைத்து வேரியன்ட்களிலும் இணைக்கப்பட்டுள்ளது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதையும் படியுங்கள் : மாருதி பலேனோ நெக்ஸா டீலர்ஷிப் மையங்களை அடைந்தது. அக்டோபர் 26 ஆம் ததி அறிமுகம்.

இந்த புதிய கன்வர்டிபல் பரிமாணங்களும்( அளவுகள் ) சற்று மாற்றப்பட்டுள்ளன. 98மி.மீ நீளமும், 44மி.மீ அகலமும், 7 மி.மீ உயரமும் முந்தைய ஹார்ட் டாப் மாடலுடன் ஒப்பிடுகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. . புதிய UKL ப்ளேட்பார்ம் 28மி.மீ அளவுக்கு வீல் பேஸ் அதிகரிக்க செய்துள்ளது. மேலும் ட்ரேக் விட்த் முன்புறம் 42மி.மீ அளவுக்கும் , பின்புறம் 34மி.மீ அளவுக்கும் அதிகரிக்க செய்துள்ளது. இந்த கன்வர்டிபல் கார்களின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக இணைக்கப்பட்டுள்ள கூடுதல் பொருட்கள் இந்த காரின் எடையை முந்தைய 3 கதவு மாடலைக் காட்டிலும் 115 கிலோ அளவுக்கு அதிகரிக்க செய்துள்ளது. இந்த மென்மையான கூரையை ( சாப்ட் டாப்) 30கி.மீ வேகம் வரை இயக்கி மூடிகொள்ளவோ அல்லது திறந்துக் கொள்ளவோ செய்யமுடியும். மேலும் இந்த திறந்து, மூடும் செயல்பாடு வெறும் 18 வினாடிகளே எடுத்துக் கொள்ளும் என்பதும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும். மேலும் இந்த காரில் , ப்ளுடூத் தொடர்புடன் கூடிய 6.5 அங்குல இன்போடைன்மென்ட் ஸ்க்ரீன் பொருத்தப்பட்டுள்ளது. USB ஆடியோ தொடர்பு வசதியும் உள்ளது. ரிவர்சிங் கேமெரா மற்றும் ரியர் பார்கிங் டிஸ்டன்ஸ் கண்ட்ரோல் அமைப்பும் இணைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய அறிமுகங்கள்

n
வெளியிட்டவர்

nabeel

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது மினி கூப்பர் கன்வெர்டிபிள்

Read Full News

trendingகான்வெர்டிப்ளே சார்ஸ்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை