2016 ல் அறிமுகமாக உள்ள ஹோண்டா சிவிக் எந்தவித மறைப்பும் இன்றி கண்ணில் தென்பட்டது.
published on செப் 14, 2015 04:28 pm by bala subramaniam for ஹோண்டா சிவிக்
- 13 Views
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
சென்னை: ஹோண்டா நிறுவனம் தனது புதிய 2016 ஹோண்டா சிவிக் காரை எதிர்வரும் ப்ரேன்க்பர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்க தயார் ஆகி வரும் நிலையில் CivicX .com உறுப்பினர் ஒருவர் சாலையில் எந்த விதமான மறைப்புமின்றி நிற்க வைக்கப்பட்டிருந்த இந்த காரை புகைப்படம் எடுத்தார். இந்த புதிய 2016 ஹோண்டா சிவிக் செடான் வகை கார் பாஸ்ட்பேக் என்ற வடிவமைப்பு கோட்பாட்டின்படி வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த புதிய சிவிக் கார் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவந்துள்ள மிக அழகான மாடல் சிவிக் கார் இது தான் என்று நம்மை எண்ண வைக்கிறது. இந்த சாம்பல் நிற செடான் காரில் ஆங்கில எழுத்து 'C' வடிவிலான டெயில் விளக்குகள் ( லேசாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது ) பொருத்தப்பட்டுள்ளன. இது இந்நிறுவனம் கான்சப்ட் (மாதிரி) சொன்னதில் இருந்து சற்று வேறுபட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய சிவிக் உடன் இணைந்து ஹோண்டா நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பான சிவிக் டூரர் வேகன் காரின் மாதிரியையும் (கான்சப்ட்) ப்ரேன்க்பர்ட் மோட்டார் ஷோவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. என்ஜின் ஆப்ஷன்கள்( வகைகள் ) குறித்து எந்த வித தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. ஹோண்டா நிறுவனம் வெவ்வேறு என்ஜின் ஆப்ஷன்களுடன் இந்த புதிய சிவிக் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த இதுவே சரியான தருணமாக இருக்கலாம்.
0 out of 0 found this helpful