2015 ஃபோர்டு ஃபிகோ நாளை அறிமுகம்
published on செப் 22, 2015 05:38 pm by raunak for போர்டு ஃபிகோ 2015-2019
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஆஸ்பியரை போலவே, இரண்டாம் தலைமுறை ஃபிகோவிற்கும் போட்டியிடும் வகையிலான விலை நிர்ணயத்தை எதிர்பார்க்கலாம்.
ஜெய்ப்பூர்: ஃபிகோவின் பழைய பதிப்பிற்கு பதிலாக, இரண்டாம் தலைமுறையை சேர்ந்த புதிய ஃபிகோ நாளை முதல் நாடெங்கிலும் விற்பனைக்கு வருகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபிகோ ஆஸ்பியர் காம்பேக்ட் சேடனை போல, இந்த ஹேட்ச்பேக் காரும் போட்டியிடுவதற்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட முதல் தலைமுறை ஃபிகோ கூட, போட்டியிடும் வகையில் தான் விலை நிர்ணயிக்கப்பட்டது. இதன் போட்டியாளர்களில் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் இடையே கடும் போட்டி தொடர்கிறது. மேலும் ஹூண்டாய் கிராண்டு i10 மற்றும் டாடா போல்ட் ஆகிய கார்களுடனும் நேருக்கு நேராக போட்டியிடுகிறது.
பின்பக்க தோற்ற விவரங்களை தவிர, ஆஸ்பியரின் ஒவ்வொரு அம்சங்களையும் ஃபிகோ பகிர்ந்துள்ளது. ஃபோர்டு SYNC இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஃபோர்டு மைகீ, மை டாக் உட்பட, பல அம்சங்களை இரு கார்களிலும் பொதுவாக காண முடிகிறது. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்த வரை, ஆஸ்பியரை போலவே ஃபிகோவிலும், இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள் அமைப்பு காணப்படலாம் என்று கருதுகிறோம். உயர்தர பதிப்பான டைட்டானியம்+-ல், இந்த பிரிவிலேயே முதல் முறையாக பக்கவாட்டு பகுதி மற்றும் திரைகளில் ஏர்பேக்குகள் உட்பட மொத்தம் ஆறு ஏர்பேக்குகள் காணப்படலாம்.
என்ஜினைப் பொறுத்த வரை, முதல் தலைமுறை ஃபிகோவில் காணப்படும் இரு வகை என்ஜின்களுக்கு பதிலாக, ஆஸ்பியரில் அறிமுகம் செய்யப்பட்டவை பொருத்தப்படலாம். பெட்ரோல் டிரிம்களுக்கு 1.2-லிட்டர் TiVCT 4-சிலிண்டர் மோட்டார் ஆற்றலை அளிக்க, டீசல் வகைகளை 1.5-லிட்டர் TDCi மோட்டார் இயக்க உள்ளன. அதே நேரத்தில், ஆஸ்பியரின் 6-ஸ்பீடு இரட்டை-கிளெச் பவர்ஷிஃப்ட் ஆட்டோமேட்டிக் உடனான 1.5-லிட்டர் TiVCT என்ஜின், ஃபிகோவில் இடம் பெற மிகவும் வாய்ப்பு குறைவு.
0 out of 0 found this helpful