2015 ஃபோர்ட் பிகோ செப்டம்பர் 23 ஆம் தேதி அறிமுகம்
போர்டு ஃபிகோ 2015-2019 க்காக செப் 15, 2015 04:02 pm அன்று raunak ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 11 Views
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஃபோர்ட் இந்தியா நிறுவனம், ஆஸ்பயர் காரின் அதிரடி அறிமுகத்திற்கு பின், தனது பிகோவை புதுப்பிக்கத் தயாராகி விட்டது. பிகோவின் இரண்டாம் தலைமுறை காரை, இந்த மாதம் 23 ஆம் தேதி அறிமுகப்படுத்தும். ஃபோர்ட் நிறுவனத்தின் மற்றைய சிறிய வகை கச்சிதமான செடான் கார்களைப் போலவே, இந்த புதிய காரின் வடிவமைப்பும், தொழில்நுட்பமும் சமீபத்தில் வெளியிட்ட ஆஸ்பயர் காரில் உள்ளது போலவே இருக்கின்றன. மாருதி சுஸுகியின் ஸ்விஃப்ட், ஹுண்டாய்யின் கிராண்ட் i10 மற்றும் டாடா போல்ட் போன்ற கார்களுடன், ஃபோர்டின் புதிய பிகோ போட்டியிடும். ஃபோர்ட் நிறுவனம், ஏற்கனவே பிகோ காரை நிறுத்திவிட்டது என்பதை நாம் இங்கு நினைவு கூற வேண்டும். எனினும், அடுத்த வாரத்தில் இருந்து அந்த வெற்றிடத்தை புதிய பிகோ நிரப்பிவிடும்.
ஆஸ்பயர் மற்றும் புதிய பிகோவின் பொதுவான அம்சங்களாக, முன்புறத்தில் இரட்டை பாதுகாப்பு காற்று பைகள் மற்றும் இஞ்ஜின் செயல்திறன் ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன் நாம் இந்த புதிய பிகோவை ஒரு விநியோகிஸ்தரின் இடத்தில் உளவு பார்த்தோம். இந்த கார், டைட்டானியம் + வகையாகவும்; இதன் ரகங்களில் முதல் முறையாக 6 பாதுகாப்பு காற்று பைகள் பொருத்தப்பட்டும் இருந்தது. ஃபோர்டின் SYNC ஆடியோ அமைப்பு மற்றும் தானியங்கி குளிர் சாதன அமைப்பும், முழுமையான கருமை நிறத்தில் உள்ள இதன் முகப்பு பெட்டியில் (டாஷ் போர்டு) பொருத்தப்பட்டுள்ளன.
மெக்கானிக்கலாக பார்க்கும் பொது, இந்த காரில் புதிய 1.2 லிட்டர் Ti- VCT இயலிழுப்பு விசைபொறி (நாச்சுரலி ஆஸ்பயர்ட் மோட்டார்) பொருத்தப்பட்டுள்ளதால், 6300 rpm – இல் 88 PS குதிரை திறன் மற்றும் 4000 rpm –இல் 112 Nm உந்து சக்தியும், அதிகப்படியாக உருவாக்க முடியும். மேலும், ஆஸ்பயரில் உள்ளதைப் போலவே, இதன் இஞ்ஜினை 5 வேக ஆளியக்க உட்செலுத்தியுடன் (மனுயல் டிரான்ஸ்மிஸன்) இணைத்துள்ளனர்.
புதிய பிகோவின் மேம்படுத்தப்பட்ட 1.5 லிட்டர் TDCi டீசல் இஞ்ஜின் மூலம், 3750 rpm –இல் 100 PS குதிரை திறன் மற்றும் 1750 - 3000 rpm -இல், 215 Nm உந்து சக்தியும் உருவாக்கப்படுகிறது. இந்த செயல்திறன், 5 வேக ஆளியக்க பல்லிணைப்பு பெட்டியுடன் (மனுயல் கியர் பாக்ஸ்) இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய அருமையான செயல்திறன், ஆஸ்பயர் காரில் மணிக்கு 25.83 கிலோ மீட்டர் என்ற அளவில் மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை தருகிறது. எனினும், பிகோவில் இதே செயல்திறன், மேலும் அதிகமான மைலேஜ் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்பயரின் 6 வேக DCT (இரட்டை கிளட்ச் AT) பொருத்தப்பட்ட 1.5 லிட்டர் Ti-VCT பெட்ரோல் இஞ்ஜின், பிகோ 2015 காரிலும் பொருத்தப்பட்டு வருமா என்பதைப் பற்றிய தகவல் இன்னும் தெரியவில்லை. காத்திருங்கள், விடை விரைவில் வரும்.