சோதனை ஓட்டத்தில் காண கிடைத்த 2015 செவ்ரோலெட் ட்ரையல் பிளேஸர் – அக்டோபரில் அறிமுகம்
published on ஆகஸ்ட் 04, 2015 11:20 am by manish for செவ்ரோலேட் ட்ரையல்
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
2015 செவ்ரோலெட் ட்ரையல் பிளேஸரை இன்று காலையில் ஜெய்ப்பூரில் காண முடிந்தது. அப்போது இந்த கார் ரோடு-டெஸ்ட்டிற்காக சுற்றிக் கொண்டிருந்தது. நீங்கள் பார்ப்பது மறைக்கப்பட்டிருந்ததாக எண்ணப்பட்ட இந்த ட்ரையல் பிளேஸரின் முதல் உளவு படங்கள். மேலும் இந்த படங்களின் மூலம் முன்புற பிரிந்த கிரில், முனை விளக்கு கிளஸ்டர்கள், முகப்புற விளக்குகள் (ஹெட் லேம்ப்கள்), விரிவான சக்கர வளைவுகள் ஆகிய வெளிப்புற அம்சங்களை தெளிவாக காண முடிகிறது. ராஜஸ்தானில் பல வகைப்பட்ட நிலப்பகுதிகள் உள்ளதை தொடர்ந்து, இந்த காரின் சோதனை ஓட்டம் இங்கே நடத்தப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது .
ஜவஹர் சர்க்கிள் அருகே விசித்திரமான ப்ரோஜக்டர் ஹெட்லைட்கள், எல்இடி முனை விளக்குகள் மற்றும் அலாய் சக்கரங்களுடன் இந்த கார் சென்றது. தாய்லாந்து போன்ற சந்தைகளில் காணப்படும் மாடல்களில் கூட இதே அம்சங்களை காண முடிகிறது. இதிலிருந்து இவை அனைத்தும் ட்ரையல்பிளேஸருக்கே உரிய ஒரு தரமான அம்சங்களாக மாறிவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்தில் கிடைக்கும் வாகனங்களில் காணப்படுவது போல, நவீன 2.8 லிட்டர் டுராமேக்ஸ் டீசல் மூலம் 197 பிஹெச்பி சக்தியுடன் 500 என்எம் டார்க் அளிக்கும் என்ஜின், இந்தியாவில் வெளியாகும் மாடல்களிலும் காணப்படலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த எஸ்யூவி, நீளம் - 4878, அகலம் – 1902, உயரம் – 1847 என்ற அளவுகள் கொண்டு, பார்ட்யூனர், பாஜிரோ, சான்டா பி ஆகிய மற்ற கார்களுடன் ஒப்பிடும் போது அளவில் பெரியதாக இருக்கிறது. இந்த மகத்தான அளவுகள் மூலம் அதிக இடவசதியை எதிர்பார்க்கலாம் என்பதால், இது ஒரு சிறந்த முன்னேற்றம் ஆகும். உள்புற கட்டமைப்பு பொறுத்த வரை சமகால ஸ்டைலிங் மற்றும் ஸிப்ட்-ஆன்-ப்ளை டெக்குள் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் காணப்படலாம். வரும் அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த கார், இது போன்ற தீவிரமான சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படுவதால், நாமும் எங்கள் ஆவலை அடக்கி காத்திருக்க முடியாமல் களத்தில் இறங்கி விட்டோம்.