சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்தியாவில் களமிறங்கியது BMW -வின் புதிய XM Label

published on செப் 17, 2024 07:56 pm by shreyash for பிஎன்டபில்யூ எக்ஸ்எம்

XM லேபிள் இதுவரை தயாரிக்கப்பட்ட மிக பவர்ஃபுல்லான BMW M கார் ஆகும். இது 748 PS மற்றும் 1,000 Nm அவுட்புட்டை கொடுக்கிறது.

  • BMW இன்டிவிஷுவல் ஃபுரோஸன் கார்பன் பிளாக் மெட்டாலிக் எக்ஸ்ட்டீரியர் பெயிண்ட் ஷேடில் கிடைக்கும்.

  • கிரில், அலாய்ஸ் மற்றும் பின்புற டிஃப்பியூசர் ஆகியவற்றில் ரெட் ஹைலைட்ஸை பெறுகிறது.

  • உள்ளே இது கேபினை சுற்றிலும் ரெட் நிறச் இன்செர்ட்களுடன் கூடிய பிளாக் நிற டாஷ்போர்டை கொண்டுள்ளது.

  • BMW -ன் கர்வ்டு காட்சி அமைப்பு மற்றும் 20-ஸ்பீக்கர் போவர்ஸ் வில்கின்ஸ் சவுண்ட் சிஸ்ட்ம ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

  • 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் பார்க் அசிஸ்ட் மூலம் பாதுகாப்புக்காக உள்ளன.

  • 4.4-லிட்டர் V8 டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் சக்தி நான்கு சக்கரங்களுக்கும் வழங்கப்படுகிறது.

  • இந்தியாவில் விற்கப்படும் வழக்கமான BMW XM காரை விட இது ரூ.55 லட்சம் அதிகம்.

லிமிடெட் ரன் BMW XM BMW -வின் போர்ட்ஃபோலியோவில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த M காரான லேபிள் இப்போது ரூ. 3.15 கோடி (எக்ஸ்-ஷோரூம், பான் இந்தியா) விலையில் இந்தியாவுக்கு வந்துள்ளது. பிஎம்டபிள்யூ XM லேபிளின் 500 யூனிட்களை மட்டுமே உலகளவில் விற்பனை செய்யவுள்ளது. இந்தியாவில் ஒரே ஒரு யூனிட் மட்டுமே விற்கப்படும் என்பதால் XM லேபிள் இங்கே மிகவும் பிரத்தியேகமாக உள்ளது. XM லேபிள் இந்தியாவில் உள்ள வழக்கமான XM ஐ விட ரூ.55 லட்சம் அதிகம்.

எப்படி இருக்கிறது?

XM -ன் இந்த பதிப்பில் BMW பெரிய வடிவமைப்பு மாற்றங்களைச் செய்யவில்லை என்றாலும் கூட வழக்கமான மாடலில் இருந்து வேறுபடுத்த சில ரெட் ஹைலைட்ஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் கிட்னி கிரில் ரெட் ஆக்ஸென்ட் உள்ளது. அதே நேரத்தில் ஹோல்டர் மற்றும் விண்டோ லைன்களில் ரெட் டிரிம் கொடுக்கப்பட்டுள்ளது.

XM லேபிள் ஸ்போக்குகளில் ரெட் ஹைலைட்ஸ் உடன் 22-இன்ச் M-குறிப்பிட்ட அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அதன் ஸ்போர்ட்டி தோற்றத்துக்காக ரெட் பிரேக் காலிப்பர்கள் உள்ளன. பின்புறத்தில் டிஃப்பியூசரும் ரெட் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காரைச் சுற்றியுள்ள பேட்ஜ்களும் ரெட் நிறச் இன்செர்ட்டை பெறுகின்றன. XM லேபிள் BMW இன்டிவிஜுவல் ஃப்ரோசன் கார்பன் பிளாக் மெட்டாலிக்கில் வரையப்பட்டுள்ளது. இது இந்த ரெட் எலமென்ட்களுடன் இணைந்து காருக்கு ஆக்ரோஷமான தோற்றத்தை அளிக்கிறது.

ரெட் தீம் கொண்ட கேபின்

BMW XM லேபிளின் கேபின் ஏசி வென்ட்கள் மற்றும் டோர்கள் உட்பட கேபினை சுற்றிலும் ரெட் நிறச் இன்செர்ட்களுடன் கூடிய பிளாக் நிற டாஷ்போர்டுடன் உங்களை வரவேற்கிறது. டூயல்-டோன் பிளாக் மற்றும் ரெட் நிற லெதரெட்டில் இருக்கைகள் அமைக்கப்பட்டு, கேபினின் ஸ்போர்ட்டியர் உணர்வை உயர்த்துகிறது. இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டிற்கு கீழே உள்ள சென்ட்ரல் ஏசி வென்ட்களில் '1/500' மோனிக்கருடன் பிரத்யேக 'எக்ஸ்எம்' பேட்ஜ் உள்ளது. டேஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோலில் சில கார்பன் ஃபைபர் இன்செர்ட்களும் உள்ளன

இந்த காரில் கர்வ்டு டிஸ்பிளே செட்டப் (14.9-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே), 1475W 20-ஸ்பீக்கர் போவர்ஸ் வில்கின்ஸ் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, பார்க் அசிஸ்ட், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டைனமிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (டிஎஸ்சி) மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ஈஎஸ்சி) ஆகியவை பாதுகாப்புக்காக உள்ளன.

மேலும் பார்க்க: ரூ 1.41 கோடி விலையில் மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ்யூவி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்றுவரை தயாரிக்கப்பட்டதிலேயே மிகவும் சக்திவாய்ந்த எம் கார்

பிஎம்டபிள்யூ எக்ஸ்எம் லேபிளை 4.4 லிட்டர் வி8 டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் பிளக்-இன் ஹைப்ரிட் செட்டப்புடன் இணைக்கிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு:

இன்ஜின்

4.4-லிட்டர் V8 டர்போ-பெட்ரோல்

பவர்/டார்க் (இன்டெகிரேட்டட்)

748 PS/1,000 Nm

பவர் டார்க் (இன்ஜின்)

585 PS/720 Nm

எலக்ட்ரிக் மோட்டார் அவுட்புட்

197 PS/280 Nm

பிளக்-இன் ஹைப்ரிட் பேட்டரி பேக்

25.7 kWh

டிரைவ் டைப்

AWD (ஆல்-வீல் டிரைவ்)

டிரான்ஸ்மிஷன்

8-ஸ்பீடு ஏடி

ஆக்ஸிலரேஷன் 0-100 கிமீ/மணி

3.8 வினாடிகள்

XM லேபிளை பியூர் EV மோடிலும் டிரைவ் செய்யலாம். இது 76 முதல் 82 கி.மீ வரை WLTP கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது. BMW XM லேபிளின் டாப்-ஸ்பீடு எலக்ட்ரானிக் மோடில் 250 கிமீ/மணி ஆக லிமிட் செய்யப்பட்டுள்ளது.ஆனால் ஆப்ஷனலான BMW M டிரைவர் பேக்கேஜ் மூலம் 290 கிமீ/மணி வரை அதிகரிக்கலாம்.

இம்ப்ரூவ்டு டைனமிக்ஸ்

XM லேபிள் ஆனது BMW -ன் அடாப்டிவ் M சஸ்பென்ஷன் சிஸ்டத்துடன் வருகிறது. இது சாலை நிலைமைகளின் அடிப்படையில் ஸ்போர்ட்டி மற்றும் கம்ஃபோர்ட் இரண்டையும் மேம்படுத்த ஆக்டிவ் ரோல் நிலைப்படுத்தலுடன் ஒத்திசைந்து செயல்படுகிறது. நான்கு சக்கரங்களின் ஸ்டெபிலைசேஷனை தனித்தனியாக ஆப்டிமைஸ் மூலமாக இது வேலை செய்கிறது.

போட்டியாளர்கள்

இந்தியாவில் வழக்கமான BMW XMஆனது லம்போர்கினி உருஸ், ஆடி RS Q8 மற்றும் ஆஸ்டன் மார்ட்டின் DBX போன்ற கார்களுடன் போட்டியிடுகிறது.

கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: XM ஆட்டோமெட்டிக்

s
வெளியிட்டவர்

shreyash

  • 61 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment on BMW எக்ஸ்எம்

Read Full News

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை