ஹூண்டாய் டுக்ஸன் இன் முக்கிய அம்சங்கள்
engine | 1997 cc - 1999 cc |
பவர் | 153.81 - 183.72 பிஹச்பி |
torque | 192 Nm - 416 Nm |
சீட்டிங் கெபாசிட்டி | 5 |
drive type | fwd / 4டபில்யூடி |
mileage | 18 கேஎம்பிஎல் |
- powered முன்புறம் இருக்கைகள்
- ambient lighting
- ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் டிரைவர் சீட்
- டிரைவ் மோட்ஸ்
- க்ரூஸ் கன்ட்ரோல்
- ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
- 360 degree camera
- சன்ரூப்
- வென்டிலேட்டட் சீட்ஸ்
- adas
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
டுக்ஸன் சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: ஹூண்டாய் டுஸான் பாரத் என்சிஏபியால் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது. இது 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. ஹூண்டாய் இந்த நவம்பரில் டுஸானின் MY23 மற்றும் MY24 ஆகிய இரண்டு மாடல்களிலும் ரூ.85,000 மொத்த பலன்கள் வழங்குகிறது
விலை: ஹூண்டாய் டுஸானின் வில ரூ. 29.02 லட்சம் முதல் ரூ. 35.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை இருக்கும்.
வேரியன்ட்கள்: இது இரண்டு பரந்த வேரியன்ட்களில் கிடைக்கிறது: பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர்.
கலர் ஆப்ஷன்கள்: வாடிக்கையாளர்கள் இதை 5 மோனோடோன்கள் மற்றும் இரண்டு டூயல்-டோன் ஷேடுகளில் வாங்கலாம்: அட்லஸ் ஒயிட், அபிஸ் பிளாக், அமேசான் கிரே, ஸ்டாரி நைட், ஃபியரி ரெட், அபிஸ் பிளாக் ரூஃப் உடன் கூடிய அட்லஸ் ஒயிட் மற்றும் அபிஸ் பிளாக் ரூஃப் உடன் ஃபியரி ரெட்.
சீட்டிங் கெபாசிட்டி: இது 5 இருக்கைகள் கொண்ட அமைப்பில் வருகிறது.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: டுஸான் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை பெறுகிறது: 2-லிட்டர் டீசல் (186 PS/416 Nm) மற்றும் 2-லிட்டர் பெட்ரோல் யூனிட் (156 PS/192 Nm). இரண்டு யூனிட்களும் டார்க்-கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், டீசலுடன் 8-ஸ்பீடு யூனிட் மற்றும் பெட்ரோலுடன் 6-ஸ்பீடு ஆகியவற்றைப் பெறுகின்றன. டாப்-எண்ட் டீசல் இன்ஜின்கள் ஆல்-வீல்-டிரைவ் ட்ரெய்னுடன் (AWD) மட்டுமே கிடைக்கும்.
வசதிகள்: 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 10.25-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டூயல்-சோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவை டுஸானில் உள்ள வசதிகளாகும். இது பின்புற வென்ட்கள், சூடான மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் கொண்ட ஆட்டோமெட்டிக் ஏசியுடன் வருகிறது.
பாதுகாப்பு: 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு (TPMS), 360 டிகிரி கேமரா மற்றும் மேம்பட்ட டிரைவர்-உதவி அமைப்புகள் (ADAS) ஆகியவை உள்ளன. ADAS தொழில்நுட்பத்தில் பிளைண்ட்-ஸ்பாட் டிடெக்ஷன் மற்றும் கொலிஷன் அவாய்டன்ஸ், அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஹை-பீம் அசிஸ்ட் மற்றும் லேன்-கீப் அசிஸ்ட் ஆகியவை அடங்கும்.
போட்டியாளர்கள்: ஹூண்டாய் டுஸான் ஆனது ஜீப் காம்பஸ், சிட்ரோன் சி5 ஏர்கிராஸ், மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
டுக்ஸன் பிளாட்டினம் ஏடி(பேஸ் மாடல்) மேல் விற்பனை 1999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.29.27 லட்சம்* | view ஜனவரி offer | |
டுக்ஸன் பிளாட்டினம் டீசல் ஏடி1997 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.31.65 லட்சம்* | view ஜனவரி offer | |
டுக்ஸன் சிக்னேச்சர்1999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.31.77 லட்சம்* | view ஜனவரி offer | |
டுக்ஸன் சிக்னேச்சர் ஏடி dt1999 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 13 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.31.92 லட்சம்* | view ஜனவரி offer | |
டுக்ஸன் சிக்னேச்சர் டீசல்1997 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 18 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.34.35 லட்சம்* | view ஜனவரி offer |
டுக்ஸன் சிக்னேச்சர் டீசல் ஏடி dt1997 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.34.50 லட்சம்* | view ஜனவரி offer | |
டுக்ஸன் சிக்னேச்சர் டீசல் 4டபில்யூடி ஏடி1997 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.35.89 லட்சம்* | view ஜனவரி offer | |
டுக்ஸன் சிக்னேச்சர் டீசல் 4டபில்யூடி ஏடி dt(top model)1997 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 14 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு | Rs.36.04 லட்சம்* | view ஜனவரி offer |
ஹூண்டாய் டுக்ஸன் comparison with similar cars
ஹூண்டாய் டுக்ஸன் Rs.29.27 - 36.04 லட்சம்* | மஹிந்திரா எக்ஸ்யூவி700 Rs.13.99 - 26.04 லட்சம்* | வோல்க்ஸ்வேகன் டைகான் Rs.38.17 லட்சம்* | டொயோட்டா ஃபார்ச்சூனர் Rs.33.78 - 51.94 லட்சம்* | ஜீப் காம்பஸ் Rs.18.99 - 32.41 லட்சம்* | பிஒய்டி அட்டோ 3 Rs.24.99 - 33.99 லட்சம்* | ஸ்கோடா கொடிக் Rs.39.99 லட்சம்* | எம்ஜி ஹெக்டர் Rs.14 - 22.89 லட்சம்* |
Rating 78 மதிப்பீடுகள் | Rating 980 மதிப்பீடுகள் | Rating 91 மதிப்பீடுகள் | Rating 592 மதிப்பீடுகள் | Rating 257 மதிப்பீடுகள் | Rating 100 மதிப்பீடுகள் | Rating 107 மதிப்பீடுகள் | Rating 309 மதிப்பீடுகள் |
Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் / மேனுவல் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionஆட்டோமெட்டிக் | Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக் |
Engine1997 cc - 1999 cc | Engine1999 cc - 2198 cc | Engine1984 cc | Engine2694 cc - 2755 cc | Engine1956 cc | EngineNot Applicable | Engine1984 cc | Engine1451 cc - 1956 cc |
Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் | Fuel Typeடீசல் | Fuel Typeஎலக்ட்ரிக் | Fuel Typeபெட்ரோல் | Fuel Typeடீசல் / பெட்ரோல் |
Power153.81 - 183.72 பிஹச்பி | Power152 - 197 பிஹச்பி | Power187.74 பிஹச்பி | Power163.6 - 201.15 பிஹச்பி | Power168 பிஹச்பி | Power201 பிஹச்பி | Power187.74 பிஹச்பி | Power141.04 - 167.67 பிஹச்பி |
Mileage18 கேஎம்பிஎல் | Mileage17 கேஎம்பிஎல் | Mileage12.65 கேஎம்பிஎல் | Mileage11 கேஎம்பிஎல் | Mileage14.9 க்கு 17.1 கேஎம்பிஎல் | Mileage- | Mileage13.32 கேஎம்பிஎல் | Mileage15.58 கேஎம்பிஎல் |
Boot Space540 Litres | Boot Space400 Litres | Boot Space- | Boot Space- | Boot Space- | Boot Space- | Boot Space- | Boot Space587 Litres |
Airbags6 | Airbags2-7 | Airbags6 | Airbags7 | Airbags2-6 | Airbags7 | Airbags9 | Airbags2-6 |
Currently Viewing | டுக்ஸன் vs எக்ஸ்யூவி700 | டுக்ஸன் vs டைகான் | டுக்ஸன் vs ஃபார்ச்சூனர் | டுக்ஸன் vs காம்பஸ் | டுக்ஸன் vs அட்டோ 3 | டுக்ஸன் vs கொடிக் | டுக்ஸன் vs ஹெக்டர் |
ஹூண்டாய் டுக்ஸன் விமர்சனம்
overview
ஹூண்டாய் டுக்ஸான் ஒவ்வொரு கோணத்திலிருந்தும் ஈர்க்கும் வகையில் இருக்கிறது - வெளியேயும் உள்ளேயும் இது பேப்பரில் பார்க்கும் போது மிகவும் நன்றாக இருக்கிறது, ஆனால் சாலைக்கு வரும் போது அது அப்படியே இருக்கிறதா ? அதன் கவசத்தில் ஏதேனும் குறைகள் உள்ளதா என்று பார்க்க நமது பூதக்கண்ணாடியை வெளியே எடுக்க வேண்டிய நேரம் இது.
ஹூண்டாய் டுக்ஸான் 20 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ளது மற்றும் சந்தையில் எப்போதும் ஒரு முக்கிய இடத்தை அனுபவித்து வருகிறது. இருப்பினும், 2022 ஆம் ஆண்டில், ஹூண்டாய் புதிய டுக்ஸன் மூலம் விஷயங்களை மாற்றவும், தலைப்புச் செய்திகளை உருவாக்கவும் பார்க்கிறது.
எஸ்யூவியை மேலோட்டமாகப் பார்த்தால், எந்த வகையிலும் குறை செய்வது கடினம் என்று நமக்குத் தெரிகிறது. இது ஸ்டைலாகத் தெரிகிறது, உட்புறத்தில் பிரீமியமாக உணர வைக்கிறது, விசாலமானது மற்றும் அம்சங்கள் நிறைந்ததாக இருக்கிறது. ஆனால் மின்னுவது எல்லாம் பொண்ணா என்பதை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய நேரம் இது.
வெளி அமைப்பு
ஆன்லைனில், படங்கள் டுக்ஸானை மிகையாக காட்டுகின்றன. இருப்பினும், நேரில் பார்க்கும் போது, கூர்மையான கோடுகள் மற்றும் விளக்குகள் நன்றாக ஒன்றிணைகின்றன. மேலும், எஸ்யூவி -யின் பெரிய அளவு காரணமாக, விகிதாச்சாரங்கள் சிறப்பாக இருக்கும். முன்பக்கத்தில், ஹைலைட் நிச்சயமாக மறைக்கப்பட்ட DRL -கள் கொண்ட கிரில் ஆகும். அவற்றை மறைக்க ஹூண்டாய் முயற்சி எடுத்ததுள்ளது.
பக்கவாட்டிலும், 2022 டுக்ஸானின் ஸ்போர்ட்டி நிலைப்பாடு கவனத்தை ஈர்க்கிறது. முன்னோக்கி இருக்கும் நிலைப்பாடு, சாய்வான கூரை மற்றும் ஆங்குலர் சக்கர வளைவுகள் ஒரு ஸ்போர்ட்டி எஸ்யூவி போல தோற்றமளிக்கின்றன. இது 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் சாடின் குரோம் டச்களால் ஃபில் செய்யப்பட்டுள்ளது.
டுக்ஸான் ஏழு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது, இது நிச்சயமாக அமேசான் கிரே மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது. அளவைப் பொறுத்தவரை, இது பழைய டுக்ஸானை விட பெரியது மட்டுமல்ல, ஜீப் காம்பஸை விடவும் பெரியது.
பின்புறத்தில், ஷார்ப்பான டெயில் விளக்குகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன. இணைக்கப்பட்ட அலகுகளில் ஃபேங்க்ஸ் வெளியில் தெரிகின்றன மற்றும் பளபளப்பான அமைப்பு அவை தனித்து நிற்க உதவுகிறது. பின்னர் பம்பர்களில் உள்ள அமைப்பு மற்றும் ஸ்பாய்லரின் கீழ் மறைக்கப்பட்ட வைப்பர் ஆகியவை தோற்றத்தை நிறைவு செய்கின்றன.
மொத்தத்தில், டுக்ஸான் ஒரு எஸ்யூவி மட்டுமல்ல, ஒரு ஸ்டைல் ஸ்டேட்மென்ட் ஆகும். இது சாலையில் ஒரு தெளிவான தோற்றத்தை கொண்டுள்ளது மற்றும் இதை கவனிக்காமல் இருப்பவர்கள் குறைவாகவே இருப்பார்கள்.
உள்ளமைப்பு
உட்புறம் எக்ஸ்டீரியருக்கு அப்படியே எதிராக இருக்கிறது, ஏனெனில் இடவசதி நன்றாகவும் மினிமலிஸ்ட்டிக்காவும் இருக்கிறது. கேபினின் தரம் மற்றும் தளவமைப்பு உங்களை மிகவும் கவர்ந்திழுக்கும். டாஷ்போர்டு மற்றும் கதவுகள் முழுவதும் மென்மையான டச் மெட்டீரியல்கள் உள்ளன மற்றும் வெளிப்புறத்தின் மிகத் தெளிவான பார்வைக்காக அனைத்து திரைகளும் டாஷ்போர்டின் கீழே வைக்கப்பட்டுள்ளன.
ரேப்-அரவுண்ட் கேபின் உங்களை காக்பிட்டில் உட்காருவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது மற்றும் ஸ்டாக்குகளின் பூச்சு மற்றும் இருக்கையில் உள்ள மெட்டாலிக் டிரிம் போன்ற நுட்பமான டச்கள் உண்மையில் கேபினை விலை உயர்ந்ததாக உணர உதவுகிறது. சாவி கூட மிகவும் பிரீமியமாக உணர்வை தருகிறது. நிச்சயமாக, இது இந்தியாவில் ஹூண்டாய்க்கு புதிய உச்சம்.
அம்சங்களுக்கும் இந்த காரில் குறைவில்லை. முன் இருக்கைகள் பவர்-அட்ஜஸ்ட்டபிள் மற்றும் ஹீட்டட் அம்சத்தை பெறுகின்றன, மேலும் வென்டிலேட்டட் மற்றும் டிரைவர் இருக்கை இடுப்பு மற்றும் மெமரி செயல்பாடுகளையும் பெறுகிறது. சென்டர் கன்சோல் முழு டச் பேனலை கொண்டுள்ளது, இது மென்மையானதாகத் தெரிகிறது, ஆனால் பயணத்தின்போது அவற்றைப் பயன்படுத்துவது எளிதாக இருப்பதால், பிஸிக்கல் டச்களை நாங்கள் அதிகம் விரும்புகிறோம். நீங்கள் 64 கலர் ஆம்பியன்ட் லைட்ஸ்களையும் பெறுவீர்கள்.
திரைகள் இரண்டும் 10.25 இன்ச் மற்றும் சிறந்த தெளிவை கொடுக்கின்றன. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பல்வேறு தீம்களை பெறுகிறது மற்றும் அல்காஸரை போலவே, பிளைண்ட் ஸ்பாட் டிஸ்ப்ளேக்களை பெறுகிறது. இன்ஃபோடெயின்மென்ட் மிகவும் பிரீமியம் மற்றும் HD டிஸ்ப்ளே மற்றும் மென்மையான இன்டர்ஃபேஸ். மற்ற சிறப்பம்சங்களில் 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், குரல் கட்டளைகள் மற்றும் பல மொழிகளுக்கான ஆதரவு ஆகியவை அடங்கும்.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் நீண்ட வீல்பேஸ் டுக்ஸான் ஆகும். இதன் பொருள் பின் இருக்கை அனுபவத்தில் சரியான கவனம் உள்ளது. இடத்தைப் பொறுத்தவரை, ஏராளமான கால், முழங்கால் மற்றும் ஹெட்ரூம் சலுகையில் உள்ளது - ஒருவேளை இந்த பிரிவில் சிறந்தது. மேலும், நீங்கள் 'பாஸ்' பயன்முறையில் முன் பயணிகள் இருக்கை கன்ட்ரோல்களை பெறுவீர்கள், இதன் மூலம் நீங்கள் அதிக இடத்தை திறக்கலாம். பின் இருக்கையை சாய்த்துக்கொண்டு இதில் அமர்ந்து பாருங்கள், இது ஸ்கோடா சூப்பர்ப் மற்றும் டொயோட்டா கேம்ரி போன்ற செடான் கார்களுக்கு போட்டியாக உள்ள சரியான இருக்கையாக இருக்கிறது.
ஏசி வென்ட்கள், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள் மற்றும் கப் ஹோல்டர்களுடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட் ஆகியவை இங்குள்ள அம்சங்களாகும். இருப்பினும், இங்கே சில சிறிய குறைபாடுகள் உள்ளன. பழைய USB போர்ட்களை விட, ஃபோன் ஹோல்டர், டைப்-சி போர்ட்கள், ஏசி வென்ட்களுக்கான ஏர் ஃப்ளோ கன்ட்ரோல்கள் மற்றும் ஜன்னல் ஷேட்களை ஹூண்டாய் சேர்த்திருந்தால் அனுபவம் முழுமையானதாக இருந்திருக்கும்.
பாதுகாப்பு
5-நட்சத்திர யூரோ NCAP பாதுகாப்பு மதிப்பீட்டில், டுக்ஸான் இந்தியாவில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கலாம். இது 6 ஏர்பேக்குகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் லெவல்-2 ADAS போன்ற ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், பிளைண்ட் ஸ்பாட் கொலிஷன் அவாய்டன்ஸ் அசிஸ்ட், ரியர் கிராஸ்-டிராபிக் கொலிஷன் அசிஸ்ட், லேன்-கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங் போன்றவற்றை பெறுகிறது. , டிரைவர் அட்டென்ஷன் வார்னிங் மற்றும் ஹை பீம் அசிஸ்ட். எங்கள் அனுபவத்தில், இந்த அம்சங்கள் இந்தியாவின் சாலை நிலைமைகளின் அடிப்படையில் நன்றாக வேலை செய்கின்றன.
பூட் ஸ்பேஸ்
500 லிட்டர்களுக்கு மேல் பூட் ஸ்பேஸ் வழங்கப்படுவதால், டுக்ஸான் வார இறுதி நாட்களில் ஒரு குடும்பத்திற்கு தேவையான சாமான்களை எளிதில் இடம் கொடுக்கிறது. லோடிங் லிப் மிகவும் உயரமாக இல்லை மற்றும் ஒரு தட்டையான தளத்தைத் திறக்க ஒரு லீவரை இழுப்பதன் மூலம் இருக்கைகள் தானாக மடிகின்றன, எனவே பெரிய பொருட்களையும் இதில் வசதியாக வைக்க முடிகிறது.
செயல்பாடு
டுக்ஸான் 2-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களால் இயக்கப்படுகிறது மற்றும் இரண்டும் அவற்றின் சொந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களை ஸ்டாண்டர்டாக பெறுகின்றன. ஆஃபரில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் இல்லை. 156PS பெட்ரோல் மோட்டார் மிகவும் ரீஃபைன்மென்ட் மற்றும் செயலற்ற நிலையில், நீங்கள் அதை டிக் கேட்க முடியாது. ஆக்ஸலரேஷன் சீராகவும் நேராகவும் உள்ளது மற்றும் நகரத்தில் வாகனம் ஓட்டுவது எளிதாக இருக்கும். இது 6-ஸ்பீடு AT உடன் வருகிறது, இது மென்மையான கியர் ஷிப்ட்களை வழங்குகிறது, இருப்பினும் சில சமயங்களில் டவுன்ஷிப்டின் போது தாமதத்தை உணர முடிகிறது. மேலும், இன்ஜினில் விரைவான ஓவர் டேக்குகளுக்கான வெளிப்படையான பஞ்ச் இல்லை மற்றும் பயணத்தின் போது மிகவும் எளிதாக உணர்கிறது.
இரண்டில் எங்களின் தேர்வு 186PS டீசல். இது பன்ச் -ஐ கொடுக்கிறது மற்றும் முந்துவதற்கு நல்ல ஆக்சலரேஷனை வழங்குகிறது. வலுவான இடைப்பட்ட செயல்திறன், ஒரு நகரத்தின் எல்லைக்குள் மற்றும் நெடுஞ்சாலைகளில் அதை வீட்டில் இருப்பதை போல உணர வைக்கின்றன மற்றும் 8-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் அதை நன்றாக நிறைவு செய்கிறது. இது விரைவாக டவுன் ஷிப்ட் ஆவதுடன், அனைத்து வேரியன்ட்களுக்கும் வாகனம் ஓட்டுவதற்கும் சரியான கியரில் உங்களை வைத்திருக்கும். இருப்பினும், அதிக ஸ்போர்ட்டி ஃபீல் உங்களுக்கு தேவைப்பட்டால் இரண்டு இன்ஜின்களுடனும் பேடில் ஷிஃப்டர்கள் உங்களுக்கு தேவைப்படாது.
ரிடே அண்ட் ஹண்ட்லிங்
டுக்ஸான் வாகனம் ஓட்டும் போது உறுதியாக உணர்கிறது மற்றும் ஸ்டீயரிங் கூட நல்ல ஃபீட்பேக்கை வழங்குகிறது. இது ஸ்போர்ட்டியாக இல்லாவிட்டாலும், அது நிச்சயமாக நல்ல நம்பிக்கையை அளிக்கிறது. இருந்தாலும் இந்த காரில் சவாரி வசதிதான் சிறப்பம்சமாகும். எஸ்யூவி சாலையில் உள்ள பெரும்பாலான மேடுகளை சமன் செய்கிறது மற்றும் பெரிய மேடுகள் இருந்தாலும் கார் சமநிலையை இழக்காது, கடினத்தன்மையிலிருந்து உங்களை விலக்கி வைக்கிறது. சில சமயங்களில் குழிகளுக்கு மேல் அது செல்லும் போது, தாக்கம் உள்ளே கேட்பதில்லை.
நீங்கள் நகரத்தில் ஓட்டுவதற்கு ஒரு டுக்ஸானை வாங்க விரும்பினால், பெட்ரோலை தேர்தெடுப்பது அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும், குறிப்பாக AWD டீசலுடன் ஒப்பிடும்போது அது இலகுவாகவும், அதிக சுறுசுறுப்பாகவும் இருக்கும். AWD ஆனது ஸ்னோ, மட் மற்றும் சேன்ட் ஆகிய மூன்று நிலப்பரப்பு மோட்களை வழங்குகிறது மற்றும் FWD வேரியன்ட்களை விட சாலையில் அதிக திறன் கொண்டதாக இருக்கும்.
வகைகள்
ஹூண்டாய் டுக்ஸான் 2 வேரியன்ட்களில் கிடைக்கிறது. இது ஒரு CKD இறக்குமதி -யாக உள்ளது மற்றும் முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்படாததால், விலைகள் சற்று கூடுதலாகவே இருக்கின்றன. பெட்ரோல் பிளாட்டினம் வேரியன்ட் விலை ரூ.27.69 லட்சமாகவும், சிக்னேச்சர் வேரியன்ட்யின் விலை ரூ.30.17 லட்சமாகவும் உள்ளது. டீசல் பிளாட்டினம் வேரியன்ட் விலை ரூ.30.19 லட்சம் மற்றும் சிக்னேச்சர் வேரியன்ட் விலை ரூ.32.87 லட்சம். டீசல் சிக்னேச்சர் AWD வேரியன்ட் விலை ரூ. 34.39 லட்சம் (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம்) ஆகவும் இருக்கிறது.
வெர்டிக்ட்
ஆம், டுக்ஸான் சிறப்பாகச் செய்திருக்கக்கூடிய சில பகுதிகள் உள்ளன, ஆனால் அவை எதுவும் அனுபவத்தைக் கெடுக்கவில்லை. மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், அதன் CKD தன்மையின் காரணமாக, விலை உயர்ந்த ஒன்றாக இருக்கிறது. அதன் நேரடி போட்டியாளரான ஜீப் காம்பஸை விட இது ரூ. 4.5 லட்சம் கூடுதல் விலை கொண்டதாக உள்ளது - நாம் டாப் AWD வேரியன்ட்டை எடுத்துக் கொண்டால், அது மிகப் பெரிய எம்ஜி குளோஸ்டர் -ன் இடைப்பட்ட வேரியன்ட்டுக்கு இணையாக உள்ளது. ஆனால், நீங்கள் அதை கவனிக்காமல் இருந்தால், டுக்ஸான் பிரீமியம் SUV இடத்தில் மிகவும் வலுவான போட்டியாளராக உள்ளது.
ஹூண்டாய் டுக்ஸன் இன் சாதகம் & பாதகங்கள்
- நாம் விரும்பும் விஷயங்கள்
- நாம் விரும்பாத விஷயங்கள்
- ஒவ்வொரு கோணத்திலும் ஸ்டைலாக தெரிகிறது. சாலையில் ஈர்க்கக்கூடிய தோற்றம்.
- ஈர்க்கக்கூடிய தரம் மற்றும் சுத்தமான லேஅவுட் உடன் கேபின் பிரீமியமாக உணர வைக்கிறது
- பவர்டு இருக்கைகள், ஹீட்டட் மற்றும் வென்டிலேஷன், 360 டிகிரி கேமரா மற்றும் பல போன்ற பிரீமியம் அம்சங்களுடன் ஏற்றப்பட்டது.
- AWD உடன் டீசல் இன்ஜினை ஓட்டுவது ஃபன்னாக இருக்கிறது
- பின் இருக்கையில் இருப்பவர்களுக்கு நிறைய இடம் கிடைகிறது
- விலை உயர்ந்தது! ஜீப் காம்பஸை விட ரூ. 4.5 லட்சம் கூடுதல் பிரீமியம்
- இது ஸ்போர்ட்டியாகத் தோன்றினாலும், வாகனம் ஓட்டும் போது வசதியாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஹூண்டாய் டுக்ஸன் கார் செய்திகள்
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்
ஹூண்டாய் கிரெட்டா EV -க்கான சில அளவுகளின் விவரங்களையும் அறிவித்துள்ளது. மேலும் இது 22 லிட்டர் ஃபிராங்க் உடன் வருகிறது.
By Anonymous | Jan 10, 2025
ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் கார் ஹூண்டாய் டுஸான் பாரத் என்சிஏபியால் சோதனை செய்யப்பட்டுள்ளது.
By dipan | Nov 28, 2024
இங்கே நெடுஞ்சாலையில் காரை ஓட்ட முயற்சிக்கும் போது கிரெட்டா சிவிடி எவ்வாறு செயல்படுகிறது என்பதை முன்டாசர் மிர்கர்...
By Anonymous | Oct 07, 2024
கூடுதலாக இரண்டு இருக்கைளை மட்டும் கொடுத்ததால் அல்கஸார் இறுதியாக கிரெட்டாவின் நிழலில் இருந்து வெளியேறியுள்ளதா ?
By nabeel | Oct 17, 2024
கிட்டத்தட்ட 5 மாதங்கள், புனேவின் அடர்த்தியான போக்குவரத்து நெரிசலில் கிரெட்டா CVT ஒரு சிட்டி காராக எப்படி இருக்கி...
By alan richard | Aug 21, 2024
இந்த அப்டேட்டால் சிறந்த குடும்ப எஸ்யூவி -க்கு தேவையான அனைத்து விஷயங்களும் கிரெட்டா -வுக்கு கிடைத்துள்...
By ujjawall | Sep 13, 2024
ஹூண்டாய் இளம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சீரான - ஆனால் கொஞ்சம் சாதுவான - கிரெட்டாவில் கொஞ்சம் மசாலாவைச் ...
By nabeel | Jun 17, 2024
ஹூண்டாய் டுக்ஸன் பயனர் மதிப்புரைகள்
- Daily சிட்டி Comute க்கு Excellent SUV
Great vehicle.... matches all features of highend german brands. I do miss the window blinds in rear seat and wireless Android auto. 369° camera is great, so is the infotainment system.மேலும் படிக்க
- Comfortable Spacious Car With Poor மைலேஜ்
Spacious car : luxurious space for both frnt and second row. Seats are ver comfortable with features of personalised adjustment. Ride is comfortable on good roads , but excessive body roll in rough roads. Mileage in City roads are very poor only 5-6 km/ litre. As for safety ADAS 2 is useless to dangerous in Indian City roads. The forward collision avoidance active assistance is dangerous for bumper to bumper drives in city roads like Kolkata. Though other ADAS features can be diabled , this feature ( active forward collision avoidance assistance) gets reactivated every time one restarts the car. One is likely to be slammed by the car behind when you have to suddenly stop the car eg when the car in front stops. The car manufacturers in India should look into it and take appropriate remedies.மேலும் படிக்க
- ஹூண்டாய் டுக்ஸன்
Its overall a good car with high specs but a little expensive to afford in my budget but having good features can make it best in this segmentமேலும் படிக்க
- Superb Drivin ஜி Experienced
Superb driving experienced I had with Mercedes-Benz G-Class.I feel class of top gear in this car. Engine is too powerful.Excellent driving experience.The red color looked elegant.This is really my favorite car.மேலும் படிக்க
- Awesome SUV
I was waiting for the new Tuscon to be launched in India and had to wait long to get one. I have been using Tuscon diesel platinum from last 1 year. It's awesome, u won't feel tired after driving even 600kms. Mileage on highway is unbelievable, it gave me 17.3kmpl from Bangalore to Hyderabad and still my first service is not done. Normal long distance road mileage is around 15.5 and in city around 11. Awesome styling and performance.மேலும் படிக்க
ஹூண்டாய் டுக்ஸன் நிறங்கள்
ஹூண்டாய் டுக்ஸன் படங்கள்
ஹூண்டாய் டுக்ஸன் உள்ளமைப்பு
ஹூண்டாய் டுக்ஸன் வெளி அமைப்பு
ஹூண்டாய் டுக்ஸன் road test
இங்கே நெடுஞ்சாலையில் காரை ஓட்ட முயற்சிக்கும் போது கிரெட்டா சிவிடி எவ்வாறு செயல்படுகிறது என்பதை முன்டாசர் மிர்கர்...
கூடுதலாக இரண்டு இருக்கைளை மட்டும் கொடுத்ததால் அல்கஸார் இறுதியாக கிரெட்டாவின் நிழலில் இருந்து வெளியேறியுள்ளதா ?
கிட்டத்தட்ட 5 மாதங்கள், புனேவின் அடர்த்தியான போக்குவரத்து நெரிசலில் கிரெட்டா CVT ஒரு சிட்டி காராக எப்படி இருக்கி...
இந்த அப்டேட்டால் சிறந்த குடும்ப எஸ்யூவி -க்கு தேவையான அனைத்து விஷயங்களும் கிரெட்டா -வுக்கு கிடைத்துள்...
ஹூண்டாய் இளம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சீரான - ஆனால் கொஞ்சம் சாதுவான - கிரெட்டாவில் கொஞ்சம் மசாலாவைச் ...
சிட்டி | ஆன்-ரோடு விலை |
---|---|
பெங்களூர் | Rs.36.84 - 45.29 லட்சம் |
மும்பை | Rs.34.79 - 43.50 லட்சம் |
புனே | Rs.35.12 - 43.91 லட்சம் |
ஐதராபாத் | Rs.36.38 - 44.73 லட்சம் |
சென்னை | Rs.36.84 - 45.29 லட்சம் |
அகமதாபாத் | Rs.32.74 - 40.25 லட்சம் |
லக்னோ | Rs.33.88 - 41.65 லட்சம் |
ஜெய்ப்பூர் | Rs.34.28 - 42.95 லட்சம் |
பாட்னா | Rs.34.75 - 42.73 லட்சம் |
சண்டிகர் | Rs.34.46 - 42.37 லட்சம் |
கேள்விகளும் பதில்களும்
A ) For the availability and waiting period, we would suggest you to please connect ...மேலும் படிக்க
A ) The Hyundai Tucson is available in 7 different colours - Fiery Red Dual Tone, Fi...மேலும் படிக்க
A ) If you are planning to buy a new car on finance, then generally, a 20 to 25 perc...மேலும் படிக்க
A ) The Hyundai Tucson competes with the Jeep Compass, Citroen C5 Aircross and the V...மேலும் படிக்க
A ) As of now, there is no official update available from the brand's end. We would ...மேலும் படிக்க