• English
    • Login / Register

    Hyundai Creta Electric ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: இது ஒரு மிகச் சரியான இவி !

    Published On பிப்ரவரி 06, 2025 By ansh for ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்

    • 1 View
    • Write a comment

    எலக்ட்ரிக் கிரெட்டா எஸ்யூவி -யானது டிசைன் மற்றும் பிரீமியத்தில் ஒரு உச்சகட்டத்துக்கு சென்று அதன் பெட்ரோல் (அ) டீசலை விட சிறந்த டிரைவ் அனுபவத்தை வழங்குகிறது.

    இந்த புதிய ஆண்டில் இந்தியாவின் மிகவும் பிரபலமான எஸ்யூவி -யான ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் -வின் எலக்ட்ரிக் பதிப்பு வெளியானது. கிரெட்டாவின் நன்மைகள் (விசாலமான வசதிகள் நிறைந்த நவீன மற்றும் பிரீமியம் தன்மை) சில கூடுதல் வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடன் எலக்ட்ரிக் கிரெட்டா ஒரு EV ஆக மட்டுமல்லாமல் அதன் ICE வெர்ஷனை விட ஒரு சிறப்பான அப்டேட் ஆகவும் வந்துள்ளது.

    இது காம்பாக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி செக்மென்ட்டில் உள்ளது. இது டாடா கர்வ் EV மாருதி e-விட்டாரா மற்றும் மஹிந்திரா BE 6 போன்றவற்றுக்கு போட்டியாக உள்ளது. இதை ஓட்டி பார்த்து போது ஹூண்டாய் என்ன செய்திருக்கிறது என்பதைப் பார்த்த பிறகு நாம் நம்பிக்கையுடன் கூறலாம். நிச்சமயமாக இதுதான் ‘சிறந்த கிரெட்டா’ . அதற்கான காரணங்கள் இங்கே.

    வடிவமைப்பு

    Hyundai Creta Electric

    ICE கிரெட்டாவின் வடிவமைப்பு ஏற்கெனவே பிரபலமான ஒன்று. இது பிரீமியம் எஸ்யூவி -யை தேடும் பெரும்பாலான மக்களுக்கு பிடித்துள்ளது. ஆகவே கிரெட்டா எலெக்ட்ரிக் -வில் அந்த வடிவமைப்பை எடுத்துக் கொண்டு சிறப்பாக தோற்றமளிக்கும் வகையில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.

    Hyundai Creta Electric Front
    Hyundai Creta Electric Rear

    ஒரு குளோஸ்டு கிரில் உடன் வெளிநாட்டில் விற்பனை செய்யப்படும் புதிய ஹூண்டாய் கார்களில் காணப்படும் முன் மற்றும் பின்புறத்தில் பிக்சலேட்டட் எலமென்ட்கள் உள்ளன.  17-இன்ச் ஏரோடைனமிகலாக-ஆப்டிமைஸ் செய்யப்பட்ட அலாய் வீல்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வடிவமைப்பு எலமென்ட்கள் அனைத்தும் அசல் வடிவமைப்புடன் ஒன்றிணைக்கும் வகையில் நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. கிரெட்டா எலக்ட்ரிக் அதன் ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) பதிப்பிலிருந்து பெரிதாக வித்தியாசமாகத் தெரியவில்லை. இது ஒரு நல்ல விஷயம்தான் ஏனெனில் மக்கள் இந்த வடிவமைப்பை விரைவாக ஏற்றுக்கொள்வார்கள்.

    Hyundai Creta Electric Active Air Flaps

    ஆக்டிவ் ஏர் ஃபிளாப்ஸ் இருப்பதால் அவை பேட்டரிக்கு அதிக குளிர்ச்சி தேவைப்படும் போது திறக்கும். அவை பேட்டரியை குளிர்விக்கவும் வெளியில் இருந்து பார்க்க அழகாகவும் இருக்கின்றன மேலும் காற்றை உள்ளே கொடுக்கவும் உதவுகின்றன.

    பூட் ஸ்பேஸ்

    Hyundai Creta Electric Boot

    பூட் -ல் எந்த மாற்றமும் இல்லை. ஸ்டாண்டர்டான கிரெட்டாவை போலவே 433-லிட்டர் பூட் உள்ளது. இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஏனெனில் பேட்டரி பேக் காரணமாக EV -கள் அவற்றின் ICE வெர்ஷனை விட குறைந்த பூட் இடத்தையே கொண்டுள்ளன. இந்த பூட் அகலமானது ஆனால் ஆழமானது அல்ல. சிறிய சூட்கேஸ்களை இங்கே எளிதாக வைக்க முடிகிறது. ஆனால் பெரிய சூட்கேஸை வைக்க இடம் இல்லாமல் போகலாம். இந்த பூட் பகுதியின் உபயோகத்தை அதிகரிக்க கேபின் அளவிலான சூட்கேஸ்களை பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். மேலும் எந்த சிறிய பை அல்லது சார்ஜரையும் பானட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ள 22-லிட்டர் ஃப்ரங்க் (முன் ட்ரங்க்) க்குள் வைக்கலாம்.

    கேபின்

    Hyundai Creta Electric Cabin

    உள்ளே உள்ள மாற்றங்கள் மிகவும் கவனிக்கத்தக்கவையாக உள்ளன. டேஷ்போர்டு அமைப்பு மற்றும் இருக்கைகள் உட்பட கேபினின் ஒட்டுமொத்த வடிவமைப்பையும் கிரெட்டாவை போலவே ஹூண்டாய் வைத்திருக்கிறது. இருப்பினும் எலமென்ட்கள் ஒரு தெளிவான வேறுபாட்டை உருவாக்க மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

    Hyundai Creta Electric Steering Wheel

    பிரஷ்டு அலுமினியம் இன்செர்ட்களுடன் புதிய ஸ்டீயரிங் வீல் பிளாக் உள்ளது. AC கன்ட்ரோல்கள் இப்போது டச் ஸ்கிரீன் கொண்டவையாக உள்ளன அவை நேர்த்தியான தோற்றத்தை கொடுக்கின்றன. ஆனால் முதலில் வாகனம் ஓட்டும் போது பயன்படுத்த எளிமையானதாக இருக்கும் மேலும் டிரைவ் செலக்டர் என்பது ஸ்டீயரிங் வீலுக்கு பின்னால் கொடுக்கப்பட்டுள்ளது. இது அயோனிக் 5 -ல் உள்ளது. ஸ்கிரீன்களுக்கு கீழே உள்ள மெட்டல் ஸ்ட்ரிப் புளூ கலரில் உள்ளது.

    Hyundai Creta Electric Centre Console

    இங்கு மிகப்பெரிய மாற்றம் சென்டர் கன்சோல் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆர்ம்ரெஸ்ட் பெரியது இருக்கை வென்டிலேஷன் கன்ட்ரோல்களின்  நிலை வேறுபட்டது. மேலும் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் சிறிய தோற்றத்துடன் ஃபுளோட்டிங் கன்சோல் வடிவமைப்பு உள்ளது. 

    இந்த கேபினில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால் அது எந்த சத்தத்தையும் எழுப்புவதில்லை - EV. இது EV மற்றும் ICE இடையே ஒரு எளிய வேறுபாட்டை உருவாக்குகிறது. மேலும் சிறப்பாக இருக்கும் ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்யலாம்.

    Hyundai Creta Electric Dashboard

    பொருட்களின் தரம் கிரெட்டாவை போலவே உள்ளது. அதில் எந்த சமரசமும் இல்லை. அனைத்து டச் பாயிண்டுகளிலும் சாஃப்ட் டச் பேடிங் உள்ளது. குரோம் மற்றும் கிளாஸி பிளாக் எலமென்ட்கள் டச் ஸ்கிரீன்கள் தொடுவதற்கு நன்றாக இருக்கும். மேலும் ஃபிட் மற்றும் ஃபினிஷ் நீங்கள் ஒரு ஹூண்டாய் காரில் இருந்து எதிர்பார்க்கும் வகையிலேயே உள்ளது.

    Hyundai Creta Electric AC Controls

    கிளாஸி பிளாக் இன்செர்ட்களில் கவனமாக இருக்க வேண்டும். இதில் தூசி படியலாம், கைரேகைகள் மற்றும் கீறல்கள் எளிதாக பதியலாம். வெள்ளை நிற சீட் அப்ஹோல்ஸ்டரியை அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால் விரைவாக அது அழுக்காகி விடும்.

    Hyundai Creta Electric Front Seats

    மேலும் ஓட்டுநரின் இருக்கை அதன் மிகக் குறைந்த நிலையில் கூட உயர்ந்ததாக உள்ளது. இது ஒரு சிறந்த ஓட்டுநர் நிலையைக் கண்டறிவதை கடினமாக்கும். இது வழக்கமான கிரெட்டாவிலும் அப்படியே உள்ளது.

    வசதிகள்

    "இன்னும் என்ன வேண்டும்?" இது கிரெட்டாவை பற்றி நாங்கள் கேட்கும் கேள்வி அதற்கு ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் மூலம் பதிலளித்தது. இது ஸ்டாண்டர்டான கிரெட்டாவின் அனைத்து வசதிகளுடன் வருகிறது. மேலும் இது இன்னும் சில நல்ல வசதிகளை புதிதாக சேர்த்து கொண்டு வருகிறது.

    Hyundai Creta Electric Dual 10.25-inch Screens

    இரண்டு 10.25-இன்ச் ஸ்கிரீன்களும் ஒரே மாதிரியானவை. ஆனால் அவை சற்று மாறுபட்ட EV-என்பதை காட்டும் கிராபிக்ஸ் கொண்டவை. யூஸர் இன்டஃபேஸ் எளிதானது. மேலும் நிலையான கிரெட்டாவை போலவே ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வயர்லெஸ் ஆக கிடைக்காது.

    Hyundai Creta Electric Panoramic Sunroof
    Hyundai Creta Electric V2L

    பனோரமிக் சன்ரூஃப் டூயல்-சோன் ஏசி 8-வே பவர் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவை உள்ளன. ஆனால் இது ஒரு EV ஆக இருப்பதால் உங்கள் லேப்டாப்பை சார்ஜ் செய்ய அல்லது எலக்ட்ரிக் கெட்டிலை பயன்படுத்த வெஹிகிள்-2-லோட் (V2L) வசதியையும் வழங்குகிறது. மேலும் இது மல்டி-லெவல் ரீஜெனரேஷன் கொண்ட பிரேக்கிங்குடன் வருகிறது.

    Hyundai Creta Electric Driver Seat Memory Function

    கேபின் அனுபவத்தை இன்னும் அதிக பிரீமியமாக்க கிரெட்டா எலக்ட்ரிக் டிரைவர் இருக்கைக்கான மெமரி ஃபங்ஷன் மற்றும் முன் பயணிகள் இருக்கையை கன்ட்ரோல் செய்ய எலக்ட்ரிக் பாஸ் மோட் ஃபங்ஷன் ஆகியவற்றுடன் வருகிறது.

    கிரெட்டா எலக்ட்ரிக் உங்கள் தினசரி ஓட்டங்கள் மற்றும் நீண்ட டிரைவிங்குக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குகிறது. மேலும் ஆண்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார்ப்ளேக்கான வயர்லெஸ் ஆதரவைத் இல்லாததை தவிர வேறு எந்த சமரசமும் இல்லை.

    நடைமுறை மற்றும் சார்ஜிங் ஆப்ஷன்கள்

    Hyundai Creta Electric Glovebox

    கிரெட்டா எலக்ட்ரிக் -ன் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் அதன் ICE காரை விட சிறந்தவை. நான்கு கதவுகளிலும் ஒரே பாட்டில் ஹோல்டர்கள் முன்பக்கத்தில் இரண்டு கப் ஹோல்டர்கள் பின்புறம் இரண்டு க்ளோவ் பாக்ஸ், சன்கிளாஸ் ஹோல்டர், இருக்கை பின் பாக்கெட்டுகள் மற்றும் உங்கள் ஃபோனை வைக்க பின்புற ஏசி வென்ட்களுக்குக் கீழே ஒரு ஸ்லாட் ஆகியவை கிடைக்கும்.

    Hyundai Creta Electric Front Tray

    ஆனால் முன் சென்டர் ஆர்ம்ரெஸ்டில் அதிக ஸ்டோரேஜ் உள்ளது. மேலும் கப்ஹோல்டர்களுக்கும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜருக்கும் இடையில் ஒரு டிரே கொடுக்கப்பட்டுள்ளது. இது உங்கள் பொருட்களை வைக்க அதிக இடத்தை வழங்குகிறது.

    Hyundai Creta Electric Charging Options

    இருப்பினும் சார்ஜிங் ஆப்ஷன்கள் ஒன்றாகவே உள்ளன. நீங்கள் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் டைப்-சி போர்ட், USB போர்ட் மற்றும் முன்பக்கத்தில் 12V சாக்கெட் மற்றும் பின்புறத்தில் இரண்டு டைப்-சி போர்ட் -களும் உள்ளன.

    பின் இருக்கை அனுபவம்

    Hyundai Creta Electric Rear Seats

    EV -களில் உள்ள சிக்கல் என்னவென்றால் பேட்டரி பேக் இருப்பதால் தளம் உயர்த்தப்பட்டதாக இருக்கும். இதன் விளைவாக பின்புறம் மற்றும் கீழ் தொடையின் ஆதரவு ஆகியவை பெரும்பாலான EV -களில் சமரசம் செய்யப்பட்டிருக்கும். ஆனால் கிரெட்டா EV விஷயத்தில் அப்படி இல்லை.

    Hyundai Creta Electric Rear Seats

    நிலையான கிரெட்டாவுடன் ஒப்பிடும்போது தரையானது நிச்சயமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இது கிட்டத்தட்ட தட்டையானது. பின் இருக்கையின் அடிப்பகுதி மேல் நோக்கி சாய்ந்துள்ளது. இது தொடைக்கு அடியில் உள்ள ஆதரவை சரியாக கொடுக்கிறது. ஹெட்ரூம் சராசரி வயது வந்தவர்களுக்கு போதுமானதாக உள்ளது. மேலும் முழங்கால் அறை மற்றும் லெக் ரூம் போதுமானதாக உள்ளது. பின்புற இருக்கைகளில் 2-ஸ்டெப் ரிக்ளைனிங் உள்ளது. மேலும் சன்பிளைண்ட்டுகளும் உள்ளன. இவை ICE கிரெட்டாவுடனும் கிடைக்கின்றன.

    Hyundai Creta Electric Rear Seat Tray
    Hyundai Creta Electric Electric Boss Mode

    ஆனால் ICE கிரெட்டாவை விட எலக்ட்ரிக் கிரெட்டாவின் பின் இருக்கைகள் முன் இருக்கைகளில் ஒரு டிரே பொருத்தப்பட்டுள்ளது. நீங்கள் சாப்பிட இந்த ட்ரேவை பயன்படுத்தலாம். நீங்கள் எதையாவது பார்க்க விரும்பினால் உங்கள் ஃபோன் அல்லது டேப்லெட்டை வைத்திருக்க ஒரு ஸ்லாட் உள்ளது. மேலும் இந்த டிரேவில் கப் ஹோல்டர்களும் உள்ளன. இது எலெக்ட்ரிக் பாஸ் மோடு உட்ன இணைந்து சிறந்த ஓட்டுநர் டிரைவிங் அனுபவத்தை அளிக்கிறது.

    பாதுகாப்பு

    Hyundai Creta Electric Airbag

    6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள் ஆகியவை ஸ்டாண்டர்டாக கிடைக்கும். அனைத்து வசதிகளும் ICE கிரெட்டாவை போலவே உள்ளன.

    Hyundai Creta Electric ORVM Mounted Camera

    ஒரு ஒரு பிளைண்ட் ஸ்பாட் மானிட்டருடன், தெளிவான காட்சியை கொடுக்கும் 360 டிகிரி கேமரா உள்ளது. 

    Hyundai Creta Electric ADAS Camera

    லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் மற்றும் டிரைவர் அட்டென்ஷன் வார்னிங் போன்ற வசதிகளுடன் லெவல் 2 ADAS இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ADAS இந்திய சாலைகளுக்கு நன்றாக மாற்றப்பட்டுள்ளது. இது லேன் மார்க்கிங்கை எளிதாக பின்பற்றுகிறது. காருடன் சரியான தூரத்தை வைத்திருக்கும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் நன்றாக வேலை செய்கிறது. இருப்பினும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோலில் ஈடுபடும்போது ​​அதிக ட்ராஃபிக்கில் ஆட்டோமெட்டிக் பிரேக்கிங் இன்புட்கள் ஷார்ப்பாக உள்ளன. 

    Hyundai Creta Electric Regenerative Braking

    ரீஜெனரேஷன் பிரேக்கிங் ADAS உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அட்டானமஸ் செயல்பாட்டை வழங்குகிறது. நீங்கள் இந்த வசதிகளை பயன்படுத்தும்போது ​​உங்கள் டிரைவிங் மற்றும் சாலை நிலைமைகளின் அடிப்படையில் ரீஜெனரேஷன் செய்யும் பிரேக்கிங் நன்றாகவே வேலை செய்கிறது. எனவே நீங்கள் அவ்வப்போது நிலைகளை மாற்ற வேண்டியதில்லை.

    பேட்டரி பேக் & டிரைவ் அனுபவம்

    Hyundai Creta Electric Driver's Display

    இது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கிடைக்கும்: 42 kWh மற்றும் 51.4 kWh. 473 கி.மீ ரேஞ்சை கொடுக்கும் என கியா கிளைம் செய்யும் வேரியன்ட் எங்களிடம் இருந்தது. ஆனால் நாங்கள் ஓட்டிய போது இது கொடுக்கக்கூடிய ரேஞ்ச் 380 கி.மீக்கு அருகில் இருந்தது. இன்னும் கொஞ்சம் நிறைய.

    இந்த பேட்டரிகள் சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது இங்கே.

    பேட்டரி பேக்

    51.4 kWh

    42 kWh

    50 kW DC சார்ஜிங் (10-80%)

    58 நிமிடங்கள்

    58 நிமிடங்கள்

    11 kWh ஏசி சார்ஜிங்

    (10-80%)

    4 மணி 50 நிமிடங்கள்

    4 மணி நேரம்

    EV -யை ஓட்டுவதற்கு சில சமயங்களில் பழகிக் கொள்ள வேண்டும். ஆனால் அந்த சிக்கல் எலக்ட்ரிக் கிரெட்டாவுடன் இல்லை. நீங்கள் பெட்ரோல் அல்லது டீசல் வாகனத்தில் இருந்து மாறினாலும் கூட இதன் உடன் ஒத்துப்போவது எளிதானது. உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாத வகையில் இதன் ஆக்ஸிலரேஷன் டியூனிங் செய்யப்பட்டுள்ளது.

    Hyundai Creta Electric

    த்ரோட்டில் ரெஸ்பான்ஸிவ் ஆனது. மற்றும் ஆக்ஸிலரேஷன் சீரானது. திடீர்பவர் டெலிவரியை நீங்கள் உணர மாட்டீர்கள். ஆனால் அதே நேரத்தில் ஃபன் டிரைவிங் அனுபவத்தைப் பெற உங்களுக்கு இது போதுமானது. 0-100 கிமீ வேகத்தை வெறும் 7.9 வினாடிகளில் எட்ட முடியும் என்பதால் அதிக வேகத்தை அடைவதற்கு அதிக நேரம் எடுக்காது. மேலும் முந்திச் செல்வது சிரமமின்றி இருக்கும். எடுத்துக்காட்டுக்கு 7-ஸ்டெப் DCT உடன் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட ICE கிரெட்டா 8.9 வினாடிகளில் 0-100 கிமீ/மணி வேகத்தை எட்டும்.

    நீங்கள் ஸ்போர்ட் மோடில் வைத்தால் அதிகமாக பவர் டெலிவரியில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது.. இருப்பினும் மின்சார கிரெட்டாவிலிருந்து நீங்கள் ஒரு அற்புதமான டிரைவிங்கை பெறலாம்.

    Hyundai Creta Electric Drive Mode Selector

    நீங்கள் ரேஞ்சை அதிகரிக்க விரும்பினால் இகோ மோடும் உள்ளது. இதன் மூலமாக மல்டி-லெவல் ரீஜெனரேஷன் கிடைக்கும். கிரெட்டா எலக்ட்ரிக் சிங்கிள்-பெடல் மோடு உடன் வருகிறது. இது பழக்கப்படுத்திக் கொள்ள சற்று நேரம் எடுக்கலாம். ஆனால் நீங்கள் அதைப் பழகிக் கொண்டால் வாகனம் ஓட்டுவது இன்னும் வசதியாகிவிடும்.

    சவாரி தரம்

    Hyundai Creta Electric

    கிரெட்டாவை போலவே சவாரி தரம் சிறப்பானது. சில சமயங்களில் பயணிகள் சிறிய இயக்கத்தை உணரலாம். வெளியே உள்ள ஒலி உள்ளே கேட்காத வகையில் இன்சுலேஷன் நல்ல நிலையில் உள்ளது. கிரெட்டா EV -யை ஓட்டும் போது ​​சாலைகளின் விரிசல் மற்றும் இடைவெளிகளை நீங்கள் உணர்வீர்கள். ஆனால் கேபினுக்குள் அதன் இயக்கம் தெரியாது.

    Hyundai Creta Electric

    இது உங்கள் தினசரி டிரைவிங்கை இது எளிதாக சமாளிக்கும். உங்களுக்கு எந்த அசௌகரியத்தையும் தராது. கார் நெடுஞ்சாலைகளில் நிலையானதாக உள்ளது. மேலும் ஓட்டும் போது நீங்கள் நம்பிக்கையுடன் உணர்வீர்கள். ஃபர்ஸ்ட் டிரைவ் -க்கான எங்கள் பாதை பெரும்பாலும் நெடுஞ்சாலைகளில் இருந்தது. எனவே விரிவான மதிப்பாய்விற்கு காரை பெற்றவுடன் இன்னும் கூடுதல் விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்.

    தீர்ப்பு

    Hyundai Creta Electric

    ICE  கிரெட்டா -வின் வடிவமைப்பு மற்றும் விஷயங்களை எடுத்துக்கொண்டு சில அம்சங்களை மேம்படுத்துவதன் மூலம் ஹூண்டாய் ஒரு EV -யை வழங்கியுள்ளது. இது நீங்கள் பிரகாசமாக தனித்து தெரிய வேறு எந்த விஷயங்களும் தேவையில்லை என்பதை நிரூபிக்கிறது. எலெக்ட்ரிக் கிரெட்டாவானது கிரெட்டாவின் அனைத்து நல்ல குணங்களையும் கொண்டுள்ளது. இது ஒரு நல்ல குடும்ப எஸ்யூவி -யாக ஆக்குகிறது. மேலும் EV -க்கான விஷயங்கள் இதை வேறுபடுத்தி காட்டுகின்றன. 

    கிரெட்டா எலக்ட்ரிக் காரின் விலை ரூ. 16 லட்சம் முதல் ரூ. 23 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் இந்த விலையில் அதன் ICE வேரியன்ட்டை விட ரூ.3 லட்சம் கூடுதலாக இருக்கலாம். அதிக பிரீமியம் வடிவமைப்பு கூடுதல் விஷயங்கள் மற்றும் அற்புதமான செயல்திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் அந்த விலை நியாயமாக இருக்கும்.

    Hyundai Creta Electric

    சார்ஜிங் உங்களுக்கு ஒரு பிரச்சினையாக இல்லை என்றால் கிரெட்டா எலக்ட்ரிக் நிச்சயமாக உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். மேலும் ICE கிரெட்டாவை விடவும் இதைப் பரிந்துரைக்கிறோம். இது ஒரு நேர்த்தியான, சிறப்பான வடிவமைப்பு, சிறந்த வசதிகள், போதுமான பவர் மற்றும் உங்கள் வழக்கமான டிரைவிங் -க்கு போதுமான ரேஞ்சை இது கொடுக்கிறது. இது ஒரு நல்ல கிரெட்டா மட்டுமல்ல இப்போது சந்தையில் உள்ள சிறந்த கிரெட்டாவாகும்.

    Published by
    ansh

    ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்

    வகைகள்*Ex-Showroom Price New Delhi
    எக்ஸிக்யூட்டீவ் (எலக்ட்ரிக்)Rs.17.99 லட்சம்*
    ஸ்மார்ட் (எலக்ட்ரிக்)Rs.19 லட்சம்*
    smart (o) (எலக்ட்ரிக்)Rs.19.50 லட்சம்*
    ஸ்மார்ட் (o) dt (எலக்ட்ரிக்)Rs.19.65 லட்சம்*
    பிரீமியம் (எலக்ட்ரிக்)Rs.20 லட்சம்*
    பிரீமியம் dt (எலக்ட்ரிக்)Rs.20.15 லட்சம்*
    ஸ்மார்ட் (o) hc (எலக்ட்ரிக்)Rs.20.23 லட்சம்*
    ஸ்மார்ட் (o) hc dt (எலக்ட்ரிக்)Rs.20.38 லட்சம்*
    பிரீமியம் hc (எலக்ட்ரிக்)Rs.20.73 லட்சம்*
    பிரீமியம் hc dt (எலக்ட்ரிக்)Rs.20.88 லட்சம்*
    ஸ்மார்ட் (o) lr (எலக்ட்ரிக்)Rs.21.50 லட்சம்*
    ஸ்மார்ட் (o) lr dt (எலக்ட்ரிக்)Rs.21.65 லட்சம்*
    ஸ்மார்ட் (o) lr hc (எலக்ட்ரிக்)Rs.22.23 லட்சம்*
    ஸ்மார்ட் (o) lr hc dt (எலக்ட்ரிக்)Rs.22.38 லட்சம்*
    excellence lr (எலக்ட்ரிக்)Rs.23.50 லட்சம்*
    excellence lr dt (எலக்ட்ரிக்)Rs.23.65 லட்சம்*
    excellence lr hc (எலக்ட்ரிக்)Rs.24.23 லட்சம்*
    excellence lr hc dt (எலக்ட்ரிக்)Rs.24.38 லட்சம்*

    சமீபத்திய எஸ்யூவி கார்கள்

    வரவிருக்கும் கார்கள்

    சமீபத்திய எஸ்யூவி கார்கள்

    ×
    We need your சிட்டி to customize your experience