புதிய 'சக்திவாய்ந்த' டாடா சபாரி ஸ்டார்ம் தன்னுடைய சக்தியை மீறிய வெற்றியை பெறுமா ?
published on டிசம்பர் 07, 2015 12:38 pm by sumit for டாடா சாஃபாரி ஸ்டோர்ம்
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
டாடா நிறுவனம் அதிக சக்தியுடன் கூடிய சபாரி ஸ்டார்ம் வெர்ஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது. வாரிகோர் 400 2.2 லிட்டர் 4 - சிலிண்டர் என்ஜின் மூலம் சக்தியூட்டப்படும் இந்த ஸ்டார்ம் SUV வாகனங்கள் தன்னுடைய முந்தைய மாடலை விட 25% கூடுதல் டார்க் வெளியிடும் ஆற்றல் கொண்டது. மணிக்கு 0 – 100 கி.மீ. வேகத்தை 12.8 நொடிகளில் தொட்டுவிடுகிறது. இந்த வேகத்தை தொட இதற்கு முந்தைய மாடல் 13.8 நொடிகள் எடுத்துக்கொண்டது. நீளம் குறைந்த சிறிய சாலையில் பார்த்தாலும் கூட மணிக்கு 0 – 60 கி.மீ. வேகத்தை முந்தைய 320 வாரிகோர் மாடலை விட 0.5 நொடிகள் வேகமாக இந்த புதிய ஸ்டார்ம் தொட்டுவிடுகிறது. மேம்படுத்தப்பட்டுள்ள கியர் பாக்ஸ் உதவியுடன் இந்த புதிய SUV அதிகபட்சமாக 156 ps சக்தியை வெளியிடுகிறது. இவை அனைத்தும் கூடுதலாக வெறும் ரூ. 40,000 விலையில் ( தோராய விலை ) கிடைக்கிறது.
மிக நியாயமான விலையுடன் இந்த கூடுதல் சக்தி மற்றும் சிறந்த கியர்பாக்ஸ் அமைப்புடன் வெளியிடப்பட்டுள்ள புதிய டாடா ஸ்டார்ம் வாகனங்கள், தற்போது இந்திய சந்தையில் இந்த பிரிவில் உள்ள ஏராளமான வாகனங்களுடன் கடும் போட்டியிட நேரும் என்பதை அறிந்தே களம் இறக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவு வாகனங்களின் விற்பனையில் ஏற்கனவே பல சாதனைகளை முறியடித்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் ஹயுண்டாய் நிறுவனத்தின் க்ரேடா கார்கள் 5 - சீட்டர் வசதி கொண்டது தான் என்றாலும் அது ஒரு பெரிய பொருட்டாக வாடிக்கையாளர்களால் பார்க்கப்படவில்லை. மாருதி நிறுவனத்தின் எஸ்- க்ராஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் XUV 500 வாகனங்களும் இந்த புதிய ஸ்டார்ம் SUV வாகனத்திற்கு சவாலாக விளங்கும். மாருதி பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது எஸ் - க்ராஸ் கார்கள் மீது ரூ. 1 லட்சம் வரை விலை சலுகையை அறிவித்து நிறைய வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. இன்னொருபுறம் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக நல்ல பெயரை எடுத்துள்ளது மஹிந்திராவின் XUV வாகனங்கள். இப்போது புதிதாக டாடா நிறுவனத்தின் ஸ்டார்ம் இந்த பிரிவில் நுழைந்திருப்பதன் மூலம் இந்த பிரிவில் போட்டி மிகவும் சூடு பிடித்துள்ளது என்று சொல்லலாம் . இந்த 'சக்தி வாய்ந்த' ஸ்டார்ம் SUV வாகனங்கள் ஹயுண்டாய் க்ரேடா , மாருதி எஸ் - க்ராஸ் மற்றும் XUV 500 வாகனங்களுடன் கடுமையாக மோதுமே தவிர வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்றே தெரிகிறது.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful