வோல்வோ XC 90 யூரோ NCAP விபத்து சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீடு பெறுகிறது
published on செப் 03, 2015 08:30 pm by raunak for வோல்வோ எக்ஸ்சி 90
- 39 Views
- ஒரு கருத்தை எழுதுக
வோல்வோவின் XC 90 கார், சிறந்த பாதுகாப்பு அம்ஸங்கள் பொருத்தப்பட்ட வகையில் (சேஃப்டி அஸ்சிஸ்ட் கேட்டகரி) முழுமையான 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளது.
2015 வருடத்தின் யூரோ NCAP விபத்து மதிப்பீட்டில், முழுமையாக 5 நட்சத்திர மதிப்பீடு தகுதியைப் பெற்று, வோல்வோ XC 90 கார் மிகச் சிறந்ததாக உயர்ந்திருக்கிறது. உலகத்திலேயே முதன் முறையாக, வாகன சந்தையில் யூரோ NCAP –இன் காரின் விபத்து தடுப்பு தரத்தை அறியும் (AEB நகரம் & AEB துணை நகரம்) சோதனையில் முழு மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்த நகரப் பாதுகாப்பு தொழில்நுட்பம் நிலையாக XC 90 காரில் எப்போதுமே பொருத்தப்பட்டிருக்கும்.
வோல்வோ கார் குழுமங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் மூத்த துணை தலைவர், டாக்டர். பீட்டர் மேர்டென்ஸ் இதைப் பற்றி கூறும்போது, “உலகில் மிகவும் பாதுகாப்பான கார்களில், வோல்வோ XC 90 காரையும் ஒன்றாக நாங்கள் உருவாக்கி இருப்பதற்கு, இது மேலும் ஒரு சான்றாகும். உண்மையில், பாதுகாப்பு அம்ஸங்களில் 100 சதவீதம் மதிப்பெண்ணை நாங்கள் பெற்றுள்ளோம். தொழில் அடிப்படையில் பார்க்கும் போது, வோல்வோ கார்கள் எப்போதுமே புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் முன்னோடியாக இருக்கிறது. ஆனால், வாகனச் சந்தையில் உள்ள போட்டியின் அடிப்படையில் பார்க்கும் போது, நிலையான பாதுகாப்பு தருவதில் மற்றைய போட்டியாளர்களை விட, இந்த கார் பல மடங்கு அதிகமாக இருக்கிறது,” என்கிறார்.
வோல்வோ கார் குழுமத்தின் முக்கியமான பொறியாளர், மார்டின் மாக்நுஸ்ஸான் கூறும் போது, “யூரோ NCAP –இன் AEB துணை நகரம் மற்றும் நகரத்தில் நடக்கும் சோதனை முறைகளில் வெற்றி பெற்று, முதன் முறையாக தேறிய கார் தயாரிப்பாளர்கள் என்ற பெருமையை நாங்கள் தட்டிச் செல்கிறோம். இந்த நவீனமான சிட்டி சேஃப்டி எனும், நகரங்களில் விபத்தை தடுக்கும், முறையை நீங்கள் ஒரு நவீன காரில் பார்க்கலாம். இதன் மூலம், வாகனங்கள், மிதிவண்டியில் பயணிப்பவர்கள் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகள் போன்றவர்களை அல்லும் பகலும் பல சந்தர்ப்பங்களில் பாதுகாக்க முடியும்,” என்று கூறினார்.
இந்த வருடத்தின் மே மாதத்தில், வோல்வோ இந்தியா நிறுவனம், XC 90 காரின் இரண்டாவது தலைமுறை காரை, ரூபாய் 64.9 லட்சம் என்ற விலையில், (சுங்க வரி தவிர்த்து, மும்பை ஷோரூம் விலை) அறிமுகப்படுத்தியது. இந்த SUV ரகம், டீசல் இஞ்ஜின் ரகத்தில் மட்டும் வருகிறது. மேலும், இது மொமெண்டம் லக்சூரி மற்றும் இன்ஸ்க்ரிப்ஷன் லக்சூரி என்ற இரு விதங்களில் வருகிறது. இதன் முன்பதிவு, அறிமுக நாளில் இருந்து ஆரம்பித்து விட்டாலும், விநியோகங்கள் இந்த மாதத்தில் இருந்து தொடங்கும்.
0 out of 0 found this helpful