• English
  • Login / Register

S90-ன் முதல்படங்களை (டீஸர்) வோல்வோ வெளியிட்டது

published on நவ 24, 2015 12:05 pm by sumit

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

தனது புதிய திடகாத்திரமான சேடனான வோல்வோ S90-யை அறிமுகம் செய்து, ஆடி A8, BMW 7 சீரிஸ், மெர்சிடிஸ் S-கிளாஸ் ஆகிய கார்களுக்கு எதிரான போட்டியை கடினப்படுத்த வோல்வோ நிறுவனம் தயாராக உள்ளது. S80-க்கு மாற்றாக அமையும் வகையில், இந்த சுவீடன் நாட்டு கார் தயாரிப்பாளர் நிறுவனம் இக்காரின் இரண்டு முதல் படங்களை (டீஸர்) வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. இதில் S90-க்கென சந்தையில் ஒரு உயர் ஸ்தனம் உள்ளது மட்டுமே ஒரு வேறுபாடு ஆகும்.

கான்செப்ட் கூபே வடிவமைப்பு உத்வேக படிப்பினை வைத்து பார்க்கும் போது, ஏறக்குறைய S90 தயாரிப்பில் தயாராக உள்ளது. குறுகலான ஹெட்லெம்ப்கள் உடன் கூடிய ‘தோரின் ஹேம்மர்’ LED சிக்னேச்சர் மூலம் இக்காரின் முன்பகுதியின் முகப்பு குறிப்பிட்ட கவனத்தை பெறுகிறது. இதை தவிர, கிடைமட்டமான ஸ்லாட்களின் உதவியை பெறும் முக்கோண வடிவிலான கிரிலை தொட்டு செல்லும் ஒரு கிரோம் மற்றும் ஒரு கூர்மையான பம்பர் ஆகியவை சேர்ந்து காரின் முன்பகுதியை எல்லா வகையிலும் தனித்தன்மை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியுள்ளது. பக்கவாட்டு பகுதியை பார்க்கும் போது, மிருதுவான ஷீட் மெட்டல் பரப்பு உடன் ஒரு கச்சிதமாக பொருத்தியுள்ள பாராபோலிக் ரூஃப் ஆகியவை சேர்ந்து இந்த காருக்கு ஒரு அதிநவீன தோற்றத்தை அளிக்கிறது. பக்கவாட்டு அமைப்பில் டேலைட் திறப்பி மற்றும் பின்புறத்தில் ஹூமோன்கோஸ் C-வடிவிலான LED டெயில்லைட்கள் ஆகியவை சேர்ந்து இதை அதிக ஸ்டைலான காராக உருவாக்கியுள்ளது.

இந்த கசிந்த மாடல் காரின் உள்புறத்தை குறித்த ஒரு கண்ணோட்டமும் தெரியவந்துள்ளது. இந்த வகையில் புதிய XC90 உடன் அதிகளவிலான ஒற்றுமைகளை S90 கொண்டுள்ளது. அதில் ஸ்டீயரிங் வீல், TFT இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் அல்லது சென்டர் கன்சோல் டிஸ்ப்ளே போன்றவை அனைத்தும், அதன் SUV உறவுமுறையில் சேர்ந்த வாகனத்தில் இருந்து பெறப்பட்டவை ஆகும். மேலும் இதுவும் அதே SPA (ஸ்காலபிள் பிளாட்பாம் ஆர்ச்சிடெக்சர்) அடிப்படையில் அமைந்து, புதிய XC90-யை ஆதரிக்கும் வகையிலும், 2.0-லிட்டர் 4-சிலிண்டர் என்ஜின் உடன் 8-ஸ்பீடு கியர்பாக்ஸையும் பெற்று காணப்படுகிறது. இந்த காரின் உயர்தர வகைகளில் ஒரு AWD மற்றும் ஹைபிரிடு அசிஸ்டென்ஸ் தேர்வை கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    Rs.2.30 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • வோல்வோ எக்ஸ்சி90 2025
    வோல்வோ எக்ஸ்சி90 2025
    Rs.1.05 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience