2016 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அறிமுகமாகவுள்ள வோக்ஸ்வேகனின் காம்பாக்ட் சேடான்: உளவாளிகளின் கண்களில் தென்பட்டது
published on டிசம்பர் 31, 2015 03:29 pm by nabeel
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்திய சந்தையில், வோக்ஸ்வேகன் நிறுவனம் அடுத்து அறிமுகப்படுத்தவுள்ள சப் 4 மீட்டர் போலோ சேடான் கார், புனேக்கு அருகில் NH -4 –ல் சோதனை ஓட்டத்தின் போது, உளவாளிகளின் கண்களில் தென்பட்டது. 2016 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், இந்த காரை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய சப் 4 மீட்டர் சேடான் இந்திய சந்தைக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது என்று வோக்ஸ்வேகன் அறிவித்துள்ளதால், வாகன சந்தையை சார்ந்துள்ள அனைவரின் ஆர்வத்தையும் இது அதிகப்படுத்தி உள்ளது. மேலும், இந்த கார் ஒரு சிறிய வெண்டோ கார் போல இருக்குமா அல்லது போலோ காரில் பூட் பகுதி இணைக்கப்பட்டதைப் போல இருக்குமா என்று ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்கிறது. வெளிவந்துள்ள புகைபடங்களைப் பார்க்கும் போது, ‘பூட் பகுதி இணைக்கப்பட்ட போலோ’ என்ற இரண்டாவது அணியே வெல்லும் என்று தெரிகிறது. பெரும்பாலான பகுதிகள் மறைக்கப்பட்டிருந்தாலும், உளவு பார்க்கப்பட்ட இந்த காரின் டெய்ல்லைட் க்லஸ்டர் போலோ காரில் உள்ளதைப் போலவே இருக்கிறது. டிசயர், Xசென்ட் அமெஸ், ஜெஸ்ட் மற்றும் ஆஸ்பயர் போன்ற கார்களை, புதிய போலோ போட்டிக் களத்தில் சந்திக்கும். ஏற்கனவே, போலோ ஹாட்ச் கார் அதன் பிரிவிலேயே சற்றே அதிகமான விலையில் வந்தது, அதைப் போலவே, இந்த காரின் விலையும் அதன் போட்டியாளர்களின் விலைக்கு நிகராக இல்லாமல், சற்றே அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மானிய கார் தயாரிப்பாளரான வோக்ஸ்வேகன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இந்த சேடான் போலோ காரில் உள்ள இஞ்ஜின் ஆப்ஷங்களையே பின்பற்றும் என்று தெரிகிறது. அதாவது, 1.2 லிட்டர் MPI 3 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் TDi டீசல் இஞ்ஜின்கள் இதில் பொருத்தப்பட்டு வரும் என்று யூகிக்கப்படுகிறது. எனவே, இதன் பெட்ரோல் வகை கார், சுமார் 74 bhp சக்தியை 5400 rpm அளவிலும், 110 Nm டார்க்கை 3750 rpm என்ற அளவிலும் உற்பத்தி செய்கிறது. அதே நேரம், இதன் டீசல் வகை 88.8 bhp சக்தியை 4200 rpm அளவிலும், சுமார் 230 Nm டார்க்கை 1500 – 2500 rpm அளவில் உற்பத்தி செய்யும். பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின்கள், 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்னுடன் இணைக்கப்பட்டு வரும். வோக்ஸ்வேகனின் வெண்டோவில் உள்ள பிரசித்தி பெற்ற 7 ஸ்பீட் DSG ட்ரான்ஸ்மிஷனை கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இந்த காரில் 1.5 லிட்டர் TDi இஞ்ஜினுடன் இணைந்து டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் அமைப்பும் இடம்பெறும் என்று தெரிகிறது. அனேகமாக, புனேவின் அருகில் உள்ள வோக்ஸ்வேகனின் சக்கன் ஆலையில், இந்த சேடான் கார் தயாரிக்கப்படும் என்று தற்போது வெளிவந்துள்ள விவரங்கள் குறிப்பிடுகின்றன.
ஆதாரம்: team-bhp.com
மேலும் வாசிக்க