இந்தியாவில் வோக்ஸ்வேகனின் விற்பனை: நான்கு வருடமாக தொடர் வீழ்ச்சி
published on ஜனவரி 12, 2016 05:27 pm by akshit
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
கடந்த வருடத்தின் ஆரம்பம், வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்திற்கு நிலையான தொடக்கமாக இருந்தாலும், செப்டெம்பர் மாதம் புயல் போல வந்த சர்வதேச எமிஷன் மோசடி காரணமாக, இந்நிறுவனம் தடுமாற்றம் அடைந்தது. முதல் 8 மாதத்தில், இந்த ஜெர்மானிய கார் தயாரிப்பாளரின் விற்பனை, 17 சதவிகிதம் என்ற அளவில் உயர்ந்தது. ஆனால், எதிர்பாராத டீசல்கேட் மோசடி காரணமாக இதன் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பின்னே சென்றது. எனவே, சென்ற வருடத்தை இனிதே ஆரம்பித்திருந்தாலும், இந்த கார் தயாரிப்பாளரின் உள்நாட்டு விற்பனை தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், பயணிகள் வாகன சந்தையில், இந்த நிறுவனத்தின் மொத்த பங்கு, 1.5 சதவிகிதம் மட்டுமே இருந்தது.
கடந்த மாதம், இந்த கார் தயாரிப்பாளரின் செல்லப் பிள்ளையான போலோ காரின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. போலோவின் விற்பனை மாதத்திற்கு மாதம் 42 சதவிகிதம் குறைந்து வந்ததை, நாம் நமது வலைதளத்தில் கடந்த மாதம் விவரித்திருந்தோம். அக்டோபர் மாதம் 2000 போலோ கார்களை விற்ற இந்த நிறுவனத்தால், நவம்பர் மாதத்தில் 1169 போலோ கார்களுக்கு மேல் இந்தியாவில் டெலிவரி செய்ய முடியவில்லை.
2015 –ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், எமிஷன் விதிகளை தான் மீறியதாக வோக்ஸ்வேகன் நிறுவனம் ஒப்புக் கொண்டது. மேலும், கிட்டத்தட்ட 11 மில்லியன் கார்களில் அவர்களது போலியான கருவி பொருத்தப்பட்டிருந்ததாக கூறியது. இதன் காரணமாக, 2008 –ஆம் ஆண்டு முதல் 2015 –ஆம் ஆண்டு வரை, 1.2 லிட்டர், 1.5 லிட்டர், 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் EA 189 டீசல் இஞ்ஜின்கள் பொருத்தப்பட்ட, சுமார் 3,23,700 கார்களை வோக்ஸ்வேகன் குரூப் இந்தியா நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்டது. இதில், EA 189 டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்ட 1,98,500 வோக்ஸ்வேகன் கார்கள், 88,700 ஸ்கோடா கார்கள் மற்றும் 36,500 ஆடி கார்கள் போன்றவை அடங்கும்.
வோக்ஸ்வேகன் நிறுவனம், இந்திய வாகன சந்தையின் 2018 –ஆம் ஆண்டு விற்பனையில், தனது நிறுவனத்தின் விற்பனை பங்கு 20 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், தற்போது நிலவும் சாதகமற்ற சூழ்நிலையில் அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, 2014 –ஆம் ஆண்டில் தான் நிர்ணயித்திருந்த இலக்கில் இருந்து 7-8 சதவிகிதத்தைக் குறைத்துக் கொண்டது.
மேலும் வாசிக்க