வோக்ஸ்வாகன் டி-ராக் அறிமுகம் செய்யப்பட்டது; ஜீப் காம்பஸ் மற்றும் ஸ்கோடா கரோகிற்கு போட்டியாக இருக்கும்
published on மார்ச் 24, 2020 05:24 pm by dhruv attri for வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
இது அதிக அளவிலான சிறப்பம்சங்களுடன் பெட்ரோலில்-இயங்கக்கூடிய வகையில் வருகிறது
-
இதன் விலை ரூபாய் 19.99 லட்சம் ஆகும்.
-
முழுவதும் எல்இடி அமைப்பிலான முகப்புவிளக்குகள் மற்றும் பின்புற விளக்குகள், வெளிப்புறக் காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளித்திறப்பு மேற்கூரை மற்றும் இரு பகுதி காலநிலை கட்டுப்பாடு போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
-
1.5-லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 150 பிஎஸ்ஸை வழங்குகிறது, இது 7 வேக டிஎஸ்ஜி உடன் இணைக்கப்பட்டுள்ளது.
விடபிள்யூ ஆனது இந்தியாவின் ஒவ்வொரு முக்கிய பிரிவிலும் எஸ்யூவி இருப்பதை உறுதி செய்வதற்கான திட்டங்கள் இந்த ஆண்டு தொடங்கி நடந்து வருகின்றன. டைகுன் ஆல்ஸ்பேஸை அறிமுகப்படுத்திய பின்னர், இப்போது டி-ராக் அதிக அளவிலான சிறப்பம்சங்கள் பொருந்திய இந்த வகையின் அறிமுக விலையாக ரூபாய் 19.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிபியு மூலமாக (முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட பாதை) கொண்டு வரப்பட்டது, இது இந்திய பிராண்ட்டின் தர வரிசையில் டிகுவானுக்கு அடுத்து அமைந்துள்ளது.
டி-ராக்கில் இரட்டை அறை எல்இடி முகப்பு விளக்குகளுடன் எல்இடி பகல் நேரத்தில் எரியக்கூடிய விளக்குகள் மற்றும் மோதுகைத் தாங்கியில் செவ்வக வடிவிலான மூடுபனியில் பிரகாசமாக எரியக்கூடிய விளக்குகள் இருக்கிறது. பக்கவாட்டு அமைப்புகளில், இரண்டு கதவுகளுடைய அமைப்பு போன்ற தோற்றத்தைப் பெற்று 17 அங்குல உலோக சக்கரங்களைக் கொண்டிருக்கும். இது வெளிப்புறக் காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளித் திறப்பு மேற்கூரை பொருத்தப்பட்டிருக்கும். பின்புற முனையில் பக்கவாட்டில் எல்இடி பின்புற விளக்குகள் மற்றும் சின்னம் பொதிக்கப்பட்ட மற்றும் பொருட்களை வைக்கக் கூடிய இடத்தின் கதவின் மையத்தில் டி-ராக் சின்னம் பேங் ஆகியவை உள்ளன.
டி-ராக்கின் உட்புற அமைவில் தோலினால் செய்யப்பட்ட இருக்கைகள், பின்புற ஏசி காற்றோட்ட அமைவு கொண்ட இரு பகுதி காலநிலை கட்டுப்பாடு, சாவியில்லா நுழைவு, வேகக் கட்டுபாடு, சரிசெய்யக்கூடிய ஆற்றல்மிக்க ஓட்டுனர் இருக்கை, 12.3 அங்குல மெய்நிகர் காக்பிட் கருவித் தொகுப்பு, அழுத்த-பொத்தான் வாகன இயக்கம் /நிறுத்தம், மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் 8 அங்குல தொடுதிரை ஒளிப்பரப்பு அமைப்பு. ஆறு காற்றுப்பைகள், இபிடிஉடன் ஏபிஎஸ், பின்புறமாக வாகனத்தை நிறுத்த உதவும் கேமரா, முன் மற்றும் பின்புறமாக வாகனத்தை நிறுத்த உதவும் உணர்விகள், டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு மற்றும் மின்னணு நிலைத்தன்மை கட்டுப்பாடு ஆகியவை பாதுகாப்பு சிறப்பம்சங்களில் அடங்கும்.
இந்தியாவில் பெட்ரோல் இயந்திரம் மூலம் இயங்கும் கார்களை மட்டுமே விற்பனை செய்வதற்கான விடபிள்யூ இன் முடிவுக்கு தகுந்த படி, டி-ராக் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இயந்திரத்தைப் பெறுகிறது, இது 150 பிஎஸ் / 250 என்எம் வெளியிடுகிறது. இது 7-வேக டிஎஸ்ஜி (இரு உரசிணைப்பி தானியங்கி முறை) உடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் ஆக்டிவ் சிலிண்டர் தொழில்நுட்பத்தை (ஏசிடி) கொண்டுள்ளது, இது செயல்திறனை அதிகரிக்க இரண்டு சிலிண்டர்களை கொண்டிருக்கிறது.
வோக்ஸ்வாகன் 4 ஆண்டு உத்தரவாதத்தையும் வழங்கும், இதில் ஆர்எஸ்ஏ (சாலையோர உதவி) மற்றும் டி-ராக் வாங்குபவர்களுக்கு மூன்று இலவச சேவைகளும் இதில் அடங்கும்.
வோக்ஸ்வாகன் டி-ராக் ஜீப் காம்பஸ், வரவிருக்கும் ஸ்கோடா கரோக் மற்றும் ஹூண்டாய் டியூசன் ஃபேஸ்லிஃப்ட் போன்ற கார்களுடன் போட்டியிடுகிறது. புதிய நடுத்தர அளவிலான விடபில்யு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துகளை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
மேலும் படிக்க: வோக்ஸ்வாகன் டி-ராக் தானியங்கி
0 out of 0 found this helpful