வோக்ஸ்வேகன் நிறுவனம் கோல்ஃப் GTE ஸ்போர்ட் என்ற ஹைபிரிட் கான்செப்ட் காரை வெளியிட்டது

published on நவ 19, 2015 02:39 pm by nabeel

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

வோக்ஸ்வேகன் நிறுவனம், தனது கோல்ஃப் GTE ஸ்போர்ட் ஹைபிரிட் கான்செப்ட் காரை, லாஸ் ஏஞ்சல்ஸ் இன்டர்நேஷனல் ஆட்டோ ஷோவில் அறிமுகப்படுத்தும் முன்னரே, அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. எதிர்கால கோல்ஃப் ஹாட்ச்பேக் தலைமுறைகளின் தோற்றத்தை இந்த காரின் தோற்றம் வரையறுத்துக் காண்பிக்கிறது. உண்மையில், சாலைகளில் ஓடும் கார்களுக்கும் பந்தய வாகனங்களுக்கும் நடுவே உள்ள இடைவெளியை இந்த வடிவம் நிரப்புகிறது என்று கூறினால் அது மிகையாகாது. 395 குதிரைத் திறனை உற்பத்தி செய்யும் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் வரும் இதன் இஞ்ஜின், மணிக்கு 280 கிலோ மீட்டருக்கு அதிகமான வேகத்தில் செல்ல உதவுகிறது. அதே நேரத்தில், லிட்டருக்கு 50 கிலோ மீட்டர் என்ற அளவில் ஆச்சர்யமான மைலேஜ்ஜையும் தருகிறது. அனைத்து சக்கரங்களும் இஞ்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த ஹைபிரிட் மாடல் காரில், கூடுதலாக வேர்ல்டு ராலி சாம்பியன்ஷிப் டர்போ சார்ஜ்ட் இஞ்ஜின் இணைக்கப்பட்ட இரண்டு எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு, இதன் இலகுரக கார்பன் ஃபைபர் கட்டமைப்பிற்கு சக்தியூட்டப்படுகிறது என்பது இந்த கான்செப்ட் காரின் தனிசிறப்பாகும்.

இஞ்ஜின்

புதிய கான்செப்ட் காரில் பொருத்தப்பட்டுள்ள 1.6 லிட்டர் TSI இஞ்ஜின் 295 சக்தியையும், அதிகபட்சமாக 400 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. எரிபொருள் மூலம் இயங்கும் இஞ்ஜினுக்கு உதவி செய்ய இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் இந்த காரின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த கூடுதல் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் 113 குதிரைத் திறன் உற்பத்தி செய்கிறது. எனவே, ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, அபரிதமான 670 Nm டார்க்கை இந்த அமைப்பு உற்பத்தி செய்கிறது. மின்னணு மூலம் மட்டுமே இயங்க முடிந்தாலும், ‘GTE மோட்’ என்னும் இயக்கத்தில் செல்லும் போது, 3 இஞ்ஜின்களும் இணைந்து வேலை செய்து, இந்த ஹைபிரிட் கார் கிளம்பிய 4.3 வினாடிக்குள் 100 km/h என்ற வேகத்தை தொடவும், அதிகபட்சமாக 280 km/h என்ற வேகத்தில் செல்லவும் உதவுகிறது.

வெளிப்புறத் தோற்றம்

கோல்ஃப் GTE ஸ்போர்ட் காரின் தோற்றம், பின்னாளில் கோல்ஃப் GT மாடல்கள் எப்படி வடிவமைக்கப்படும் என்பதற்கு மாதிரியாக உள்ளது. புதுவிதமாக, இந்த காரின் C பில்லர் இரண்டு பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. பார்ப்பதற்கு அருமையாக இருப்பதோடு மட்டுமல்லாது, இந்த காரின் ஏரோடைனமிக் டவுன்போர்ஸ் மற்றும் பின்புற ப்ரேக்குகளை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் இத்தகைய வடிவமைப்பு உதவியாக இருக்கிறது. கோல்ஃப் GTE ஸ்போர்ட் கார், லைட்வெயிட் கார்பன்-ஃபைபர் கட்டுபொருளால் அமைக்கப்பட்டுள்ளது.  முன்புறத்தில் 235/35 டயர்களும், பின்புறத்தில் 275/30 டயர்களும் பொருத்தப்பட்ட, 20 அங்குல அலுமினிய-அலாய் சக்கரங்களின் மேல் இந்த கார் பயணம் செய்யும்.

கோல்ஃப் GTE ஸ்போர்ட் தொழில்நுட்ப விவரங்கள்

பாடி / சக்கரங்கள்

கான்செப்ட்

2 கதவுகள், 2 சீட்டர் கூபே

நீளம் x அகலம் x உயரம்

162.5 x 73.6 x 48.6 அங்குலம்

சக்கர அகலம்

98.6 அங்குலம்

டயர்கள் முன்புறம் / பின்புறம்

235/35 R20 / 275/30 R20

ட்ரைவ்

ட்ரைவ் அமைப்பு

பிளக்-இன் ஹைபிரிட்

ட்ரைவ்டிரைன்

ஆல்-வீல் ட்ரைவ் (எலக்ட்ரிக் பிராப்ஷாஃப்ட்)

பெட்ரோல் இஞ்ஜின்

1.6 TSI, 295hp / 400Nm

எலக்ட்ரிக் மோட்டார்கள்

113 hp

சிஸ்டம் பவர்

395 hp

சிஸ்டம் டார்க்

670 Nm

கியர் பாக்ஸ்

6 ஸ்பீட் DSG

பேட்டரி வகை

லிதியம்-அயான்

செயல்திறன் / எரிபொருள் சிக்கனம்

அதிகபட்ச வேகம்

280 km/h

0-100 km/h

4.3 வினாடிகள்

மைலேஜ்

50 km/l

எலக்ட்ரிக் ரேஞ்ச்

50 km

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Volkswagen Golf

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience