புகாட்டி, லம்போர்கினி, டுகாட்டி அல்லது பென்ட்லே ஆகியவற்றை வோல்க்ஸ்வேகன் விற்கக் கூடும்
published on டிசம்பர் 09, 2015 05:41 pm by manish
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
வோல்க்ஸ்வேகன் நிறுவனம், தானாக சென்று கடனில் மூழ்கியது போலாகி உள்ளது. ஏனெனில் ‘டீசல்கேட்’ மோசடி மூலம் ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்தி செய்ய வோல்க்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய அளவிலான கடனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்த ஜெர்மன் வாகன தயாரிப்பாளரின் அதிக விற்பனையாகும் மற்றும் உலகளாவிய அளவில் மதிப்பிற்குரிய சில பிராண்டுகளை இழக்க நேரிடலாம் என்று தெரிகிறது. மேற்கூறிய மோசடியினால் ஏற்பட்ட எல்லா வகையான பாதிப்புகளையும் நிவர்த்தி செய்யும் வகையில், ரூ.1.4 லட்சம் கோடி மதிப்பிலான ஒரு கடன் வரியில் (கிரிடிட் லைன்), வோல்க்ஸ்வேகன் கையெழுத்திட வேண்டும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. வோல்க்ஸ்வேகனின் கடனை, ஐரோப்பாவில் பரந்து விரிந்து காணப்படும் 13 நிதி நிறுவனங்கள் கையாளுகின்றன. இந்த கடன்களை கட்டித் தீர்க்கும் வகையில் எதிர்கால பத்திரங்கள் அளிக்கப்பட வேண்டியுள்ளது என்று வோக்ஸ்வேகன் நிறுவனம் சூச்சமாக தெரிவித்துள்ளது.
இப்படி செய்ய வேண்டுமானால், லாம்போர்கினி, பென்ட்லே, புகாட்டி, மேன், டுகாட்டி உள்ளிட்ட வோல்க்ஸ்வேகனுக்கு சொந்தமான சில பிராண்டுகளை விற்பனை செய்ய வேண்டியுள்ளது. இதில் மேன் என்பது இந்நிறுவனத்தின் ஒரு துணை-பிராண்டு ஆகும். இது ஜெனரேட்டர்கள், கனரக தொழில்சாலை இயந்திரங்கள், கப்பல் என்ஜின்கள் மற்றும் பலவற்றின் தயாரிப்பில் ஈடுகிறது. இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.3,700 கோடிகள் இருக்கலாம் என்று தெரிகிறது. இதெல்லாம் இன்னும் ஒரு ஊகத்தின் அடிப்படையிலான காரியங்கள் என்றாலும், மேற்கூறிய இந்த உயர் மதிப்பு கொண்ட பிராண்டுகளின் விற்பனை தான், வோல்க்ஸ்வேகன் நிறுவனத்திடம் கடைசியாக உள்ள நம்பத்தக்க சொத்துகளாக உள்ளன. “டீசல்கேட்”டினால் உண்டான பாதிப்பை கட்டுப்படுத்தும் பொறுப்புகள் மற்றும் வோல்க்ஸ்வேகனின் மற்ற பொறுப்புகள் ஆகியவற்றை ஏற்கும் வகையில் டாக்டர்.ஸ்டீபேன் கினீர்ஸ்ச், ஆடி AG-யின் ஒரு புதிய குழு உறுப்பினாராக சேர உள்ளார்.
மேலும் வாசிக்க
வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தனது வெண்டோ கார்களை அர்ஜென்டினா நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கி உள்ளது.