• English
  • Login / Register

வோல்க்ஸ்வேகன் அநேகமகாக இந்தியாவில் இருந்தும் தனது கார்களை திரும்பப் பெறும்.

modified on நவ 02, 2015 11:48 am by sumit

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர்:

வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தில் வீசி கொண்டிருக்கும் எமிஷன் ஊழல் என்ற கோர புயலின் தாக்கம் இப்போது இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது. நம்பர் 1 கார் தயாரிப்பாளர் என்ற நற்பெயர் பறிபோனது மட்டுமின்றி இந்தியாவில் இருந்தும் இப்போது 1 லட்சம் கார்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளது வோல்க்ஸ்வேகன். போலோ ஹேட்ச்பேக், போலோ க்ராஸ், வெண்டோ , ஜெட்டா மற்றும் பஸ்சாட் செடான் கார்கள் திரும்பப் பெற்றுக்கொள்ள பட போகும் கார்களாக இருக்கும். இந்தியாவின் தலைமை வாகன ஆராய்ச்சி அமைப்பு (ARAI) இந்த ஊழல் விவகாரத்தின் விவரங்களை கேட்டுள்ள நிலையில் வோல்க்ஸ் வேகன் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. “ பலவகையான ப்ரேன்ட்கள் , பல்வேறு மாடல்கள், பல வித என்ஜின் வேரியன்ட்கள் மற்றும் கியர்பாக்ஸ் அமைப்புகள், என்பதோடு மற்றும் இன்றி பல வேறுபட்ட மாடல் வருடங்கள் என்று பல விதமான கலவைகளை உள்ளடக்கியுள்ள வாகனங்களை சரியாக தேர்வு செய்து சரியான தகவல்களை வெளியிட கூடுதல் நேரம் பிடிக்கிறது " என்று வோல்க்ஸ்வேகன் கூறுகிறது.

இந்த ஜெர்மன் கார் தயாரிப்பாளர்கள் மிகப்பெரிய எமிஷன் ஊழலில் சிக்கி யதும், அந்த விவகாரத்தை ஒரு அமெரிக்க பல்கலைக்கழகம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததும், அதன் காரணமாக தனது 11 மில்லியன் கார்களை உலகம் முழுக்க இருந்து வோல்க்ஸ்வேகன் திரும்பப்பெற்றுக் கொண்டதும் நாம் ஏற்கனவே அறிந்த விஷயமாகும். வோல்க்ஸ்வேகன் நிறுவனம் விற்பனைக்கு முந்தைய எமிஷன் சோதனையின் போது ஏமாற்ற முயன்றது என்பது தான் அந்நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு. இந்தியாவில் எமிஷன் சம்மந்தமான சட்டங்கள் அந்த அளவுக்கு கடுமையானதாக இல்லை என்றாலும் ஐரோப்பாவில் வோல்க்ஸ்வேகன் தற்போது செய்துக் கொண்டிருப்பதைப் போல, இங்கேயும் அந்த நிறுவனம் என்ஜினை பழுது பார்த்து தரவோ அல்லது புதியதாய் மாற்றி தரவோ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எமிஷன் சோதனையைப் பொறுத்தவரை ஏறக்குறைய ஒரே மாதிரியான செயல்பாடுகள் தான் இந்தியாவிலும் காணப்படுகிறது.

இதையும் படியுங்கள் :

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience