வோல்க்ஸ்வேகன் அற்புதமான சலுகைகளை உள்ளடக்கிய 'வோல்க்ஸ்பெஸ்ட்' திட்டத்தின் மூலம் இந்த விழா காலத்தை வரவேற்கிறது.

published on அக்டோபர் 23, 2015 02:10 pm by nabeel

  • 12 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர் :

Volkswagen Logo

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் இந்த பண்டிகை காலத்தை அற்புதமான சலுகைகளை உள்ளடக்கிய வோல்க்ஸ்பெஸ்ட் 2015  சலுகை திட்டத்துடன் ஆரத் தழுவிக் வரவேற்றுள்ளது . நாடு முழுக்க இந்த சலுகைகளை அடுத்த 30 நாட்களுக்கு அனைத்து வோல்க்ஸ்வேகன் டீலர்ஷிப் மூலமும் பெற்று பயன்பெறலாம். இந்த பிரத்தியேக சலுகைகள் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் வோல்க்ஸ் வேகன் தயாரிப்புக்களில் மிகுந்த ஆர்வம் காட்டும் வாடிக்கையாளர்கள் என இரண்டு பிரிவினருக்கும் பயன் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை திட்டத்தின் கீழ், கார் தயாரிப்பு நிறுவன ஜாம்பவான்களில் ஒருவரான இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல உறுதியான பரிசுகள் , விடுமுறை பேக்கேஜ்கள் , சுலபக்கடன் மற்றும் இதர சலுகைகளை வழங்க உள்ளது. அனைத்து வோல்க்ஸ்வேகன் மாடல் வாகனங்களின் மீதும் ரூ. 40,000 வரையிலான லாயல்டி மற்றும் எக்ஸ்சேன்ஜ் சலுகைகளும் வழங்கப்பட உள்ளது. மேலும் சமீபத்தில் அறிமுகமான வெண்டோ ஹைலைன் ப்ளஸ் கார்களை வாங்குபவர்களுக்கு அந்த கார்கள் மீது 1 வருட இலவச காப்பீடு (இன்ஸ்யூரன்ஸ்) வசதி செய்யப்பட்டுள்ளது.

சுலபக் கடன் வசதியைப் பொறுத்தவரை ஜெட்டா கார்களுக்கு வருடத்திற்கு 9.99  சதம் வட்டியும், போலோ கார்கள் மீது 3.99  சதம் வட்டியும் , வெண்டோ கார்களுக்கு 9.75  சதம் வட்டியும் பெறப்படுகிறது.. இதைத் தவிர , அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ப்லாபன்க் மல்டி மீடியா டேப்லட் ஒன்றை பரிசாக பெறும் வாய்ப்பும் காத்திருக்கிறது. . ஆனால் இந்த குலுக்கல் முறை பரிசு திட்டம் தமிழக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட வில்லை. வோல்க்ஸ்வேகன் வாகனங்களை எக்ஸ்சேஞ் செய்து கொள்ளும் போது வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தனது பயன் படுத்தப்பட்ட கார்கள் பிரிவான (ப்ரி - ஓன்ட் கார்ஸ் ) டஸ் வெல்ட் ஆட்டோ மூலம் விடுமுறை பேக்கேஜ் ஆப்ஷன்களையும் வழங்கி மகிழ்ச்சி வெள்ளதில் ஆழ்த்தி குதூகலப்படுத்துகிறது.

Volkswagen Vento Limited Edition

முன்னதாக இந்த மாத துவக்கத்தில் லிமிடெட் எடிஷன் போலோ மற்றும் வெண்டோ கார்களை வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகப்படுத்தியது நாம் எல்லோரும் அறிந்த செய்தியே. போலோ எக்ஸ்க்விசிட் லிமிடட் எடிஷன் கார்கள் ஹைலைன் MT 1.2 லிட்டர் MPI என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் TDI என்ஜின் ஆப்ஷங்களுடன் முறையே ரூ. 5.5 லட்சம் மற்றும் 8.73 லட்சங்கள் (எக்ஸ் - ஷோரூம், மும்பை) விலையுடன் விற்பனைக்கு வந்துள்ளது. வெண்டோ ஹைலைன் ப்ளஸ் எடிஷன் பெட்ரோல் ஆப்ஷன் 9.7  லட்சங்களுக்கும் டீசல் ஆப்ஷன் 10.98  லட்சங்களுக்கும் (எக்ஸ் - ஷோரூம், மும்பை) விற்பனைக்கு வந்துள்ளன. போலோ கார்களில் கூரைப் பகுதியில் கருப்பு வண்ணமும் , கார்பன் பைபர் போர்த்திய ORVM மற்றும் காரின் பக்கவாட்டு உடல் பகுதியில் கருப்பு வண்ண மோல்டிங், ட்ரன்க் கார்னிஷ் மற்றும் ஸ்கப் பிளேட்கள் முதலிய விஷயங்கள் கண்ணில் படுகிறது. உட்புறத்தில் மத்திய கன்சோல் பகுதியில் கார்பன் பைபர் ஏக்சன்ட்கள் , தரை விரிப்புக்கள், மற்றும் புதிய சீட் கவர்கள் ஆகிய விஷயங்கள் காரின் உட்புறத்தை மேம்படுத்தி காட்டுகின்றன. வெண்டோ கார்களிலும் வெளிப்புறத்தில் காரின் கூரை பகுதிக்கு கருப்பு வண்ணம் தீட்டப்பட்டும் , கார்பன் பைபர் போர்த்திய ORVMஅமைப்பையும் காண முடிகிறது. காரின் உட்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் என்று பார்த்தால் வெண்டோவில் GPS நேவிகேஷன் வசதியுடன் கூடிய டச்ஸ்க்ரீன் ப்லாவுபங்க் இன்போடைன்மென்ட் அமைப்பும் மற்றும் விண்டோ ஷேட் போன்ற அம்சங்களை சொல்லலாம்.

இதையும் படியுங்கள் :

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience