வோல்க்ஸ்வேகன் இந்தியா 8 சதவிகித விற்பனை வளர்ச்சியை ஜனவரி 2016ல் பதிவு செய்துள்ளது
வோல்க்ஸ்வேகன் இந்தியா , கடந்த 2016 ஜனவரி மாதத்தில் 8 சதவிகித விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 2015 ஜனவரியில் 3734 வாகனங்களை வோல்க்ஸ் வேகன் விற்பனை செய்திருந்தது. இந்த ஜனவரியில் 4018 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. வோல்க்ஸ்வேகன் குழுமம் சேல்ஸ் இந்தியா ப்ரைவேட் லிமிடெட், வோல்க்ஸ்வேகன் பேசஞ்சர் கார்ஸ் பிரிவின் இயக்குனர் மைக்கேல் மேயர் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் , இந்த வருடத்தை வளர்ச்சியுடன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். போலோ ,வெண்டோ மற்றும் ஜெட்டா கார்களின் அற்புதமான செயல்திறன் தான் இந்த விற்பனை வளர்ச்சிக்கு காரணமாதலால் இந்த வெற்றியை எங்களது இந்த மூன்று தயாரிப்புக்களுக்கும் சமர்பிக்கிறோம். இதைத் தவிர நாங்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய 21 ஆம் நூற்றாண்டு பீட்டில் கார்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . இந்த வருடத்தில் எங்களது இன்னும் பல பெர்பார்மன்ஸ் வாகனங்கள் அறிமுகமாவதற்கு தயாராக உள்ள நிலையில் இந்த வருடம் மிகவும் வெற்றிகரமாக அமையும் என்று உறுதியாக நம்புகிறோம்”" கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் டான் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தினர் தங்களது போலோ மற்றும் வெண்டோ கார்களில் ஏராளமான அசத்தும் சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மழை உணரும் வைப்பர்கள் , ஆட்டோ டிம்மிங் IRVM, போன் புக்/ SMS வியூவர், மிரர் லின்க் கனக்டிவிடி மற்றும் டைனமிக் டச்ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம் போன்ற சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. போலோ கார்கள் இந்திய ரூ. 5.23 லட்சங்களுக்கும் (எக்ஸ் -ஷோரூம் , மும்பை ) , வெண்டோ கார்கள் ரூ. 7.70 லட்சங்களுக்கும் ( ex - ஷோரூம் , மும்பை ) விற்பனை செய்யபடுகின்றன.
நடைபெற்று வரும் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் , மிக சமீபத்திய அமேயோ காம்பேக்ட் செடான் உட்பட அனைத்து வாகனங்களையும் வோல்க்ஸ்வேகன் காட்சிக்கு வைத்துள்ளது. ப்ளக் -இன் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய எட்டாவது தலைமுறை பஸ்சாட் , பஸ்சாட் GTE மற்றும் டிகுவான் SUV ஆகிய வாகனங்கள் வோல்க்ஸ்வேகன் காட்சிக்கு வைக்கும் வாகனங்களில் குறிப்பிடத்தக்கவை.
மேலும் வாசிக்க 2016 ஆட்டோ எக்ஸ்போ: வோல்க்ஸ்வேகன் - டிகுவானை கொண்டு வருகிறது