நெருக்கடியில் வோக்ஸ்வேகன்: பல விதமான வதந்திகளுக்கு நடுவில் தலைமை நிர்வாக அதிகாரி மார்டின் விண்டர்காம் ராஜினாமா செய்தார்
published on செப் 28, 2015 01:20 pm by cardekho
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
வோக்ஸ்வேகனின் தலைமை நிர்வாக அதிகாரி மார்டின் வின்டர்காம் ராஜினாமா செய்துவிட்டதால், இந்நிறுவனத்திற்கு நெருக்கடி மிகவும் தீவிரமடைந்து வருகிறது. வோக்ஸ்வேகன் கார்கள் நைட்ரஜன் ஆக்ஸைடை வெளிப்படுத்தி சுற்றுசூழலை மாசுபடுத்திய வீடியோ வெளிவந்ததால் ஏற்பட்ட சர்ச்சைக்கு தான் முழு பொறுப்பேற்பதாக விண்டர்காம் கூறியபோதும், தனிப்பட்ட முறையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர் மறுத்தார். பங்குச் சந்தையில், இந்த நிறுவனத்தின் பங்கு மூன்றாவது நாளாக தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்த வேளையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
“வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு புதிய துவக்கம் தேவையாக இருக்கிறது. இந்த புதிய மாற்றம் பணியாளர்கள் அடிப்படையிலும் நடக்கவேண்டும். எனவே, நான் எனது பதவியை ராஜினாமா செய்து, புதிய தொடக்கத்திற்கு வழி விடுகிறேன்,” என்று தனது உரையில் குறிப்பிட்டார். அமெரிக்காவில் செய்யப்பட்ட NOx சோதனையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக காரின் இஞ்ஜினில் தில்லு முல்லுகள் நடந்ததாக, இந்த நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்புக் கொண்டது.
ராஜினாமாவை வெளியிடுவதற்கு முந்தைய நாள், வோக்ஸ்வேகனின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, இந்த மோசடிக்கு மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டார். இந்த வழக்கு, ஜெர்மன் அதிகரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, குற்ற வழக்கு தொடர்வதற்கான வாய்ப்பிருப்பதாக வோக்ஸ்வேகனின் கண்காணிப்பு பிரெதிநிதிகள் குறிப்பிடுகின்றனர். எனினும், அவர்கள் வின்டர்காம் குற்றமற்றவர் என்றே குறிப்பிடுகின்றனர்.
போர்ஷ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மத்தியஸ் முல்லர், வின்டர்காம் வகித்த தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ஏற்பார் என்ற வதந்தி தீ போல் பரவிய நேரத்தில், வின்டர்காம் ராஜினாமா செய்துவிட்டார். இந்த துர்ப்பிரயோகம் ஏற்கனவே வோக்ஸ்வேகனின் புகழுக்கு மிகப் பெரிய பங்கம் ஏற்படுத்திவிட்டது. இது மேலும் பெரிதாகி, ஜெர்மனியின் பொருளாதாரத்திற்கே மோசமான விளைவை கொண்டு வந்து விடுமோ, என்று அஞ்சப்படுகிறது, ஏனெனில், ஜெர்மனியின் பொருளாதாரம் வாகன தொழில் துறையையே பெரிதும் சார்ந்துள்ளது. இந்த நாட்டில், சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த தொழில் துறையிலேயே பணிபுரிகின்றனர். மேலும், இந்த நாட்டின் ஒரு வருடத்திய ஏற்றுமதியில், வாகன தொழில்துறை கிட்டத்தட்ட 20 சதவிகிதம் பங்கு வகிக்கிறது.