• English
    • Login / Register

    வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தனது வெண்டோ கார்களை அர்ஜென்டினா நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கி உள்ளது.

    nabeel ஆல் நவ 19, 2015 01:08 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 13 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    ஜெய்பூர் :

    வோல்க்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தயாரித்து வரும் தனது நடுத்தர அளவு கொண்ட செடான் பிரிவு கார்களான வெண்டோ கார்களை அர்ஜென்டினா நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளது. இந்த கார்கள் அர்ஜென்டினாவில் போலோ என்ற பெயரில் அறிமுகமாகிறது. இயந்திர ரீதியிலான சிறு சிறு மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் பூனே தொழிற்சாலையில் தயாராகும் இந்த கார்கள் ஆசியா , ஆப்ரிக்கா வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள 35 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 2011ஆம் ஆண்டு முதல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    அர்ஜென்டினாவிற்கு ஏற்றுமதியாகும் போலோ அல்லது வெண்டோ கார்களில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் ஆப்ஷன் கார்களில் 5 - வேக , கைகளால் இயக்கக்கூடிய ( மேனுவல் ) கியர் அமைப்பு அல்லது 6 – வேக தானியங்கி கியர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அர்ஜென்டினா வாகன சந்தையில் தன்னிகரில்லா தலைவனாக தொடர்ந்து 12 ஆண்டுகளாக வோல்க்ஸ்வேகன் நிறுவனம் இருந்து வருகிறது. 22% சந்தை பங்கு ( மார்கெட் ஷேர் ) வோல்க்ஸ்வேகன் கைவசம் உள்ளது என்று இந்த ஏற்றுமதி பற்றி இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் வோல்க்ஸ்வேகன் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆன்ட்ரியாஸ் லார்மான் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், “ ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் வட அமெரிக்க கண்டங்களில் உள்ள பல நாடுகளின் சந்தைகளுக்கு நாங்கள் எங்கள் தயாரிப்புக்களை ஏற்றுமதி செய்து வருகிறோம். அர்ஜென்டினாவில் மட்டுமில்லாமல் , ஒரு புதிய பிராந்தியத்தில் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் காலூன்ற வழிவகை செய்துள்ளது ' என்று கூறியுள்ளார்.

    வோல்க்ஸ்வேகன் பற்றி மேலும் :

    was this article helpful ?

    Write your கருத்தை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience