சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

புதிய உயர் நிர்வாகத்தை வோல்க்ஸ்வேகன் நியமித்தது

published on டிசம்பர் 21, 2015 12:12 pm by akshit

டெல்லி:

சமீபத்தில் அதிக சர்ச்சையை கிளப்பிய டீசல் எமிஷன் ஊழலின் விளைவாக வோல்க்ஸ்வேகனில் இருந்த முழு நிர்வாக அதிகாரிகளும் ராஜினாமா செய்வதோ அல்லது வெளியேற்றப்படுவதோ நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், இந்நிறுவனத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்ற மத்தியாஸ் முல்லர், ஒரு புதிய நிர்வாக குழுவை அறிவித்து, வரும் 2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து இக்குழு பொறுப்பை ஏற்கும் என்று அறிவித்துள்ளார்.

இந்த புதிய நியமனங்கள், பெரும்பாலும் உள்ளுக்குள்ளேயே நடைபெற்றுள்ளது. இதன்படி, புதிய RD தலைவராக உல்ரிச் ஐச்ஹாரன், புதிய வடிவமைப்பு தலைவராக மைக்கேல் மவ்யர், தயாரிப்புத் தலைமை மற்றும் முக்கிய மாடுலார் பிளாட்பாம் திறனாளியாக ரல்ஃப் கெர்ஹார்டு வில்னர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கூறிய ஊழல் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, சஸ்பென்ஸன் பிரிவின் பொறுப்பில் இருந்து கடந்த மாதம் ராஜினாமா செய்த ஹால்கேன்பேர்க்-கிற்கு பதிலாக ஐச்ஹாரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிறுவனத்தின் குழுவில் இவர் இருந்த கடைசி காலக்கட்டத்தில், வோல்க்ஸ்வேகன் ஆடம்பர கார் யூனிட்டான பென்ட்லியின் தொழிற்நுட்ப மேம்படுத்தும் பிரிவின் பொறுப்பை வகித்து வந்தார்.

இதில் மவ்யர், கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் போர்ஷின் வடிவமைப்பை வழிநடத்தியும், 2007 கெய்ன், பனாமீரா, 918 ஸ்பைடர் போன்றவற்றின் வடிவமைப்பு பொறுப்பாளராகவும் செயல்பட்டவர் ஆவார். வோல்க்ஸ்வேகனின் மூத்த பணியாளரான வால்டர் டி சில்வாவின் கடந்த மாத ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து, அவரது பொறுப்பை இவர் வகிக்க உள்ளார்.

ஒரு மெக்கானிக்கல் என்ஜினியரிங் பின்னணியை கொண்ட வில்னர் கூட, 80'க்களில் முதலில் ஆடியில் சேர்ந்து பணியாற்றியவர். முன்னதாக இவர் ஆடியின் தொழில்நுட்ப வாகனங்களின் மேற்பார்வையாளராக பொறுப்பு வகித்துள்ளார்.

இது குறித்து வோல்க்ஸ்வேகன் குழுவின் CEO கூறுகையில், “இந்த குழுவை சார்ந்த மற்றும் புதிய பொறுப்புகளை ஏற்க உள்ள குழுவில் சாராத வெளியே உள்ளவர்களை கொண்ட சிறந்த சகப் பணியாளர்களின் மூலம் CEO-வின் பொறுப்புகளை வகிக்கும் பகுதிகளை கொண்ட அணியை அமைக்கும் பணி ஏறக்குறைய முடிவடைந்துள்ளது. எதிர்கால பயணத்தில் தாக்கத்தை ஏற்படும் தொழிற்நுட்ப மாற்றங்களின் மீது குறிப்பாக எலக்ட்ரிஃபிகேஷனில் இருந்து டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் மாற்றத்தின் மீது நாங்கள் கவனம் செலுத்த உள்ளோம்” என்றார்.

கடந்த வாரம், இந்த டீசல்-கேட் பிரச்சனையை கையாளுமாறு, அதிக அனுபவமிக்க நிர்வாகிகளில் ஒருவரான கொள்முதல் பிரிவின் தலைவர் பிரான்சிஸ்கோ ஜாவியர் கார்சியா சான்ஸை, வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

a
வெளியிட்டவர்

akshit

  • 13 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை