சோதனை செய்யப்ப டும் போது மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ள VinFast VF e34, இப்போது 360 டிகிரி கேமரா இருப்பது உறுதியாகியுள்ளது
vinfast vf e34 க்காக ஜூலை 01, 2024 06:35 pm அன்று samarth ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 38 Views
- ஒரு கருத்தை எழுதுக
360 டிகிரி கேமராவை தவிர பாதுகாப்புத் தொகுப்பில் ADAS மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவையும் இருக்கலாம்.
-
வியட்நாமிய கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் வரும் 2025 ஆண்டில் இந்தியாவிற்குள் நுழைய உள்ளது.
-
அதன் முதல் கார் வின்ஃபாஸ்ட் VF e34 எஸ்யூவி -யாக ஆக இருக்கலாம். இது மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறை 360 டிகிரி கேமரா செட்டப் இருப்பதை பார்க்க முடிகிறது.
-
மற்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் 6 ஏர்பேக்ஸ், TPMS மற்றும் ADAS ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
-
சர்வதேச அளவில் VF e34 ஆனது 41.9 kWh பேட்டரி பேக் மற்றும் ஒரே ஒரு மோட்டார் அமைப்புடன் 150 PS அவுட்புட்டை கொடுக்கிறது.
-
குளோபல்-ஸ்பெக் VF e34 EV ஆனது NEDC கிளைம்டு 318 கி.மீ ரேஞ்சை கொண்டுள்ளது.
-
இந்தியாவில் 2025 ஆண்டில் VF e34 கார் அறிமுகப்படுத்தப்படலாம்; இதன் விலை ரூ.25 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வியட்நாம் நாட்டை சேர்ந்த வாகன உற்பத்தியாளரான வின்ஃபாஸ்ட் 2025 ஆண்டில் இந்திய சந்தையில் நுழைய உள்ளது. VF e34 எலெக்ட்ரிக் எஸ்யூவி அடுத்த ஆண்டு முதலில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கார் இப்போது இந்திய சாலைகளில் சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இப்போதும் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் இந்த ஸ்பை ஷாட்களில் இருந்து தெரிய வரும் விவரங்களை இங்கே விரிவாகப் பார்ப்போம்.
என்ன விவரங்கள் தெரிய வருகின்றன?
முன்பு பார்த்தது போல் சோதனை கார் முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை, வெளிப்புறத்தின் கூடுதல் விவரங்கள் தெரிய வருகின்றன. முன்பக்கத்தில் படங்கள் நேர்த்தியான LED DRLகள் மற்றும் LED லைட்டிங் செட்டப்பை காட்டுகின்றன.
![VinFast VF e34 360-degree camera VinFast VF e34 360-degree camera](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
![VinFast VF e34 Side VinFast VF e34 Side](https://stimg.cardekho.com/pwa/img/spacer3x2.png)
சோதனை கார் ஆனது 360-டிகிரி கேமரா செட்டப் உடன் (ORVM- பொருத்தப்பட்ட பக்க கேமராக்களால் சுட்டிக்காட்டப்பட்டது) மற்றும் சர்வதேச-ஸ்பெக் மாடலில் காணப்படும் அதே அலாய் வீல்களுடன் காணப்பட்டது. கூடுதலாக இது தடிமனான பாடி சைடு கிளாடிங், ஸ்பிலிட் டெயில் லைட்டுகள் மற்றும் பிளாக்-அவுட் ரியர் பம்பர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் வசதிகள்
எலெக்ட்ரிக் எஸ்யூவி -யின் உட்புறம் இதுவரை கேமராவில் படம் பிடிக்கப்படவில்லை என்றாலும் கூட இது குளோபல்-ஸ்பெக் மாடலை போலவே கேபின் செட்டப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் ஆல்-கிரே தீம் உள்ளது.
வசதிகளை பொறுத்தவரை இது செங்குத்தாக உள்ள 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, கீலெஸ் என்ட்ரி, 6-ஸ்பீக்கர் செட்டப், ஆட்டோமேட்டிக் ஏசி, 6-வே மேனுவல் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட் மற்றும் 7-இன்ச் பின்புறம் ஸ்கிரீன் ஆகியவற்றைப் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்..
பாதுகாப்பு
பாதுகாப்பைப் பொறுத்தவரை 6 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ரியர் கிராஸ்-டிராஃபிக் வார்னிங் உள்ளிட்ட வசதிகள் உள்ளிட்ட மேம்பட்ட இயக்கி உதவி அமைப்புகள் (முன்பக்க பம்பரில் உள்ளபடி முன்பு காணப்பட்ட சோதனைக் காரில் பொருத்தப்பட்ட ரேடார்) போன்ற குளோபல்-ஸ்பெக் மாடலை போன்ற பாதுகாப்பு வசதிகளை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது படம்பிடிக்கப்பட்டுள்ள VinFast VF e34 கார், Hyundai Creta EV -க்கு போட்டியாக இருக்குமா ?
பவர்டிரெய்ன்
VF e34 பின்வரும் பவர்டிரெய்ன் ஆப்ஷனுடன் உலககளவில் கிடைக்கிறது:
பேட்டரி பேக் |
41.9 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை |
1 |
பவர் |
150 PS |
டார்க் |
242 Nm |
கிளைம்டு ரேஞ்ச்(WLTP) |
318 கி.மீ (NEDC) |
இந்த எஸ்யூவி மூன்று டிரைவ் மோடுகளையும் பெறுகிறது: இகோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட். DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி, வின்ஃபாஸ்ட் VF e34 காரை 27 நிமிடங்களில் 10 முதல் 70 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.
விலை, போட்டியாளர்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் வெளியீடு
வியட்நாமிய வாகன உற்பத்தியாளர் VF e34 காரை 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 25 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்). இது நேரடியாக, வரவிருக்கும் மாருதி eVX மற்றும் இந்த ஹூண்டாய் கிரெட்டா EV ஆகிய கார்களுடன் போட்டியுடன்
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு கார்தேக்கோ -வின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்