• English
  • Login / Register

ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் அறிமுகப்படுத்தப்பட்டது இந்தியாவின் முதல் சோலார் கார் Vayve Eva

வாய்வே மொபிலிட்டி eva க்காக ஜனவரி 19, 2025 06:26 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 28 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கூரையில் உள்ள சோலார் பேனல்கள் மூலமாக ஒரு நாள் சார்ஜ் செய்தால் கார் 10 கி.மீ தூரம் செல்லும்.

  • ஸ்லிம் LED ஹெட்லைட்கள், டெயில் லைட்டுகள் மற்றும் 13-இன்ச் வீல்களுடன் வெளியில் ஒரு மினிமலிஸ்டிக் வடிவமைப்பை கொண்டுள்ளது.

  • டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் மற்றும் இரண்டு இருக்கைகளுடன் இது வருகிறது

  • மேனுவல் ஏசி மற்றும் 6-வே எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட் ஆகியவை உள்ளன.

  • பாதுகாப்புக்காக ஓட்டுநரின் ஏர்பேக் மற்றும் இரு பயணிகளுக்கும் 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள் உள்ளன.

  • 250 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சில் பல பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது.

  • இது ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.2 செலுத்தும் வேரியன்ட்யிலான பேட்டரி சந்தா திட்டத்துடன் வருகிறது.

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் வாய்வே இவா எலக்ட்ரிக் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் முதல் சோலார் கார் ஆன இதன் விலை ரூ 3.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஆட்டோ எக்ஸ்போ 2023 -ல் அதன் கான்செப்ட் அவதாரத்தில் இது முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்டது. உள்நாட்டு கார் தயாரிப்பாளரான வாய்வே இப்பொது இந்த காரை உற்பத்திக்கு தயாராகவுள்ள வடிவத்தில் காட்சிப்படுத்தியுள்ளது. இது நோவா, ஸ்டெலா மற்றும் வேகா என 3 வேரியன்ட்களில் வருகிறது. வாய்வே இவா -ன் வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் இங்கே:

வேரியன்ட்

பேட்டரி வாடகை திட்டத்துடன்*

பேட்டரி வாடகை திட்டம் இல்லாமல்

நோவா

ரூ.3.25 லட்சம்

ரூ.3.99 லட்சம்

ஸ்டெல்லா

ரூ.3.99 லட்சம்

ரூ.4.99 லட்சம்

வேகா

ரூ.4.49 லட்சம்

ரூ.5.99 லட்சம்

*ஒரு கிலோமீட்டருக்கு பேட்டரி பேக்கிற்கான சந்தா கட்டணம் ரூ.2. ஆன நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் பேட்டரி பேக்கை வாங்காததால் EV -யின் ஆரம்ப விலை குறைகிறது. இருப்பினும் நீங்கள் இவா -வை ஓட்டாவிட்டாலும் நீங்கள் ஓட்ட வேண்டிய கிலோமீட்டருக்கு வாய்வே குறைந்தபட்ச தொகையை நிர்ணயம் செய்துள்ளது. என்ட்ரி லெவல் நோவா வேரியன்ட் 600 கி.மீ., ஸ்டெல்லாவுக்கு 800 கி.மீ., வேகா டிரிம்முக்கு 1200 கி.மீ செல்லக்கூடியது. 

வாய்வே இவா EV பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே:

வெளிப்புறம்

வாய்வே இவா மஹிந்திரா e2O மற்றும் ரேவா ஆகிய கார்களின் வடிவமைப்பைக் நினைவுபடுத்துகிறது. இருப்பினும் நவீன ஸ்டைலிங் எலமென்ட்கள் உள்ளன. எல்இடி ஹெட்லைட்கள் ஆனது மையத்தில் எல்இடி பார் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. கிரில் ஆஃப் மூடப்பட்டுள்ளது மற்றும் பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக்கல் பாகங்களை குளிர்விக்க முன்பக்கத்தில் ஒரு சிறிய ஏர் இன்டேக் கொடுக்கப்பட்டுள்ளது.

13 இன்ச் ஏரோடைனமிக் சக்கரங்கள் மற்றும் இருபுறமும் கதவுகளுடன் வருகிறது. EV -யின் கீழ் பகுதியில் ஒரு கட் உள்ளது, இது காரை இரண்டு பிரிவுகளாக பிரிப்பது போல் தெரிகிறது. கூரையில் ஒரு சோலார் பேனல் உள்ளது. இது EV யை சூரிய ஒளி மூலம் சார்ஜ் செய்ய உதவுகிறது.

பின்புற வடிவமைப்பு எளிமையானது மற்றும் பின்புறத்தில் இரண்டு வண்ணங்களுடன் LED டெயில் லைட் ஸ்ட்ரிப் உடன் டூயல்-டோன் வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

இன்ட்டீரியர்

உள்ளே இரண்டு இருக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளன. இது டாஷ்போர்டில் இரண்டு டிஸ்பிளேக்களுடன் வருகிறது. ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட்க்கானது மற்றும் மற்றொன்று டச் ஸ்கிரீன். ஸ்டீயரிங் 2-ஸ்போக் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. டச் ஸ்கிரீன் -க்கு கீழே மேனுவல் ஏசிக்கான கன்ட்ரோல்கள் உள்ளன. இது தவிர, டோர் கைப்பிடிகள் மற்றும் ஸ்டோரேஜ் இடங்கள் உட்பட மற்ற அனைத்தும் கேபினில் அடிப்படை விஷயங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

இது ஒரு அடிப்படை EV என்றாலும் கூட டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் (மேலே குறிப்பிட்டுள்ளபடி), 6-வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட் மற்றும் ஃபிக்ஸ்டு கிளாஸ் ரூஃப் ஆகிய வசதிகள் உள்ளன. பாதுகாப்புக்காக டிரைவருக்கு ஏர்பேக் மற்றும் இரு பயணிகளுக்கும் 3-பாயின்ட் சீட் பெல்ட்கள் உள்ளன.

எலக்ட்ரிக் பவர்டிரெய்ன்

வாய்வே Eva தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டின் அடிப்படையில் பல பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது. விரிவான விவரங்கள் பின்வருமாறு:

வேரியன்ட்

நோவா

ஸ்டெல்லா

வேகா

பேட்டரி பேக்

9 kWh

14 kWh

18 kWh

எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை

1

1

1

பவர்

16 PS

16 PS

20 PS

டிரைவ்டிரெய்ன்

RWD

RWD

RWD

கிளைம்டு வரம்பு

125 கி.மீ

175 கி.மீ

250 கி.மீ

வாய்வே இவா காரை சோலார் மூலமாக சார்ஜ் செய்து கொள்ளலாம். இது ஒரு நாள் சார்ஜ் செய்தால் 10 கி.மீ வரை கூடுதல் ரேஞ்சை கொடுக்கும். 15W ஏசி சாக்கெட் 4 மணி நேரத்தில் பூஜ்யத்திலிருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். ஒரு DC ஃபாஸ்ட் சார்ஜர் 45 நிமிடங்களில் 0-80 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். மற்றும் 5 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 50 கி.மீ தூரம் வரை செல்ல முடியும்.

போட்டியாளர்கள்

இந்தியாவில் போட்டியாளர்களே இல்லாத தனித்துவமான காராக இது உள்ளது. இருப்பினும் இது ஒரு எம்ஜி காமெட் இவி -க்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்.

was this article helpful ?

Write your Comment on Vayve Mobility eva

18 கருத்துகள்
1
A
arjun singh
Feb 7, 2025, 2:30:08 PM

Purchase kha se hogi

Read More...
    பதில்
    Write a Reply
    1
    A
    ashish yadav
    Jan 24, 2025, 4:12:19 PM

    Delar ship lene k liye kisse contact krna hoga.plz cnfrm

    Read More...
      பதில்
      Write a Reply
      1
      R
      roopkumar
      Jan 24, 2025, 3:56:59 PM

      Delar ship lene k liye kisse contact krna hoga.plz cnfrm

      Read More...
        பதில்
        Write a Reply

        explore மேலும் on வாய்வே மொபிலிட்டி eva

        ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

        புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

        கார் செய்திகள்

        • டிரெண்டிங்கில் செய்திகள்
        • சமீபத்தில் செய்திகள்

        டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

        • பிரபலமானவை
        • உபகமிங்
        ×
        We need your சிட்டி to customize your experience