அடுத்துவரும் டொயோட்டா கார்களை குறித்த ஒரு கண்ணோட்டம்!
published on நவ 05, 2015 11:57 am by manish
- 21 Views
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
உலகின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டொயோட்டா நிறுவனம் இனி வெளியிட உள்ள தனது நவீன மற்றும் சிறந்த தயாரிப்புகளை வரிசைப்படுத்தி உள்ளது. இவை அனைத்தும் இந்திய ஆட்டோமோட்டிவ் களத்திற்கு வர தயாராக உள்ளன. கொரோலா, இனோவா மற்றும் அதன் ஆடம்பர சேடனான காம்ரி ஆகிய தயாரிப்புகளின் மூலம் இந்த வாகன தயாரிப்பாளர், சந்தையில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளார். மேலும் அதன் அடுத்து வரவிருக்கும் கார்களின் அறிமுகம் மீது எல்லா ஆட்டோமோட்டிவ் ஆர்வலர்களுக்கும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளதால், அவையும் பெரும் வெற்றியை அளிக்கலாம் என தெரிகிறது. எனவே டொயோட்டாவின் அடுத்து வரவிருக்கும் கார்களின் பட்டியலை இங்கே தொகுத்து வெளியிட்டுள்ளோம்.
டொயோட்டா இனோவா
நமது பட்டியலின் துவக்கத்திலேயே நம்மை பின்பற்றுபவர்களில் எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தாத புதிய டொயோட்டா இனோவா குறித்து பார்ப்போம். சமீபகால கசிந்த செய்திகளின் அடிப்படையில், இந்த காரில் ஒரு புதிய 2.4 லிட்டர் டீசல் என்ஜினை பெற்று, இப்பிரிவிலேயே சிறந்ததாக 149PS @3400rpm மற்றும் 343 Nm @1200-2800 rpm முடுக்குவிசையை அளிக்க வல்லது. இந்த ஆற்றலகம், ஒரு 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் இணைந்து செயல்படும். வரும் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக இனோவாவின் விலை ரூ.12.5 லட்சம் முதல் ரூ.18 லட்சத்திற்கு உட்பட்டு நிர்ணயிக்கப்படலாம்.
டொயோட்டா வயோஸ்
அடுத்தபடியாக டொயோட்டாவின் C-பிரிவு சேடனாக வரும் வயோஸ் குறித்து பார்ப்போம். வரும் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலம், இந்திய கார் சந்தைக்குள் இந்த கார் நுழைய வாய்ப்புள்ளது. சியஸ், சிட்டி மற்றும் வெர்னா ஆகிய கார்களுடன் வயோஸ் போட்டியிட உள்ளது. இதில் எதியோஸின் 1.5 பெட்ரோல் என்ஜின் அல்லது கொரோலா ஆல்டிஸிடம் இருந்து 1.4 லிட்டர் D-4D டீசல் என ஏதாவது ஒன்றை பெற்றுக் கொள்ளக் கூடும். இந்த காருக்கான விலை நிர்ணயம் ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சத்திற்குள் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா ரஷ்
டொயோட்டாவின் C-பிரிவின் நுழைவை தொடர்ந்து, அடுத்தபடியாக அதன் கச்சிதமான SUV-யான புதிய டொயோட்டா ரஷ் வருகிறது. இந்திய சந்தைக்கு கொரோலா ஆல்டிஸ் மற்றும் எதியோஸ் சேடன் ஆகியவற்றின் அதே ஆற்றலகத்தை, இந்த காரும் பயன்படுத்த உள்ளது. எடுத்துக்காட்டு 1.4-லிட்டர் D4-D டீசல் என்ஜின் மற்றும் 1.4-லிட்டர் பெட்ரோல் என்ஜின். இந்த காருக்கான ஊக விலையாக, ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சத்திற்கு உட்பட்டு அமையலாம் என்று தெரிகிறது.
டொயோட்டா ஹாயஸ்
இந்த ஜப்பான் வாகன தயாரிப்பாளரின் மற்றொரு முதல் தயாரிப்பு, அதன் புதிய ஆடம்பர பயணிகள் வாகனமான ஹாயஸ். இந்த பஸ்ஸில் 4 வரிசைகளின் கட்டமைப்பில் 10 பயணிகள் அமரத்தக்க சீட்களை (ஓட்டுநரின் சீட் உட்பட) பெற்றுள்ளது. இந்த எல்லா சீட்களிலும் சாய்ந்திருக்கும் தேர்வைக் கொண்டு, பின்புற A/C திறப்பிகள் (வென்ட்ஸ்), USB இணைப்புடன் கூடிய 6 ஸ்பீக்கர் கொண்ட ஆடியோ சிஸ்டம் ஆகியவற்றை இந்த பஸ்ஸில் காண முடிகிறது. பாதுகாப்பை பொறுத்த வரை, இந்த பஸ்ஸில் இரட்டை முன்புற SRS ஏர்பேக்குகள், ABS, பின்புற பார்க்கிங் கேமரா, பின்புற விண்டோ டிஃபாக்கர் மற்றும் இலுமினேடேட் என்ட்ரி சிஸ்டம் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. ஆற்றலகத்தின் தேர்வுகளை பொறுத்த வரை, ஹாயஸில் அநேகமாக 3.0-லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜினை அமையப் பெற்று, 134.1bhp ஆற்றலையும், 300Nm முடுக்குவிசையையும் அளிக்கலாம். வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தோன்றுகிற ஹாயஸின் விலை ரூ.40 லட்சம் முதல் ரூ.45 லட்சத்திற்குள் நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா ஃபார்ச்யூனர்
கடைசியாக, ஆனால் நிச்சயமாக மோசமானது அல்ல என்பதாக, அடுத்தபடியாக தவணை முறையில் பிரிவையே ஆதிக்கம் செலுத்த வருவது டொயோட்டா ஃபார்ச்யூனர் பிரிமியமான SUV ஆகும். இந்த காரில் 4 சிலிண்டர் டையரெக்ட்-இன்ஞ்செக்ட்டு டர்போ-டீசல் என்ஜின் அமையப் பெற்று, அதன்மூலம் 174.3bhp ஆற்றலையும், 450Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையையும் அளிக்க வல்லது. இந்த என்ஜின் தேர்வுகள், ஒரு 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் மற்றொரு தேர்வான ஒரு 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும். வரும் 2016 ஆம் ஆண்டு இந்த கார் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், இதன் விலை அநேகமாக ரூ.24 லட்சம் முதல் ரூ.29 லட்சத்திற்கு உட்பட்டு அமையலாம்.
சில பிரபலமான டொயோட்டா கார்களின் பட்டியல்: