டொயோடா நிறுவனம் தொடர்ந்து நான்காவது முறையாக விற்பனையில் முதலிடத்தைப் பிடித்தது.
டொயோடா நிறுவனம் தொடர்ந்து நான்காவது வருடமாக விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 10.151 மில்லியன் வாகனங்களை உலகம் முழுக்க கடந்த 2015 ஆம் ஆண்டு டொயோடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 2015 ஆம் ஆண்டு 10.098 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்திருந்த டொயோடா நிறுவனம் அந்த இலக்கை விட அதிகமாக 50,000 வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஜெர்மன் கார் தயாரிப்பாளர்களான வோல்க்ஸ்வேகன் AG மற்றும் அமெரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் முதல் இடத்துக்கு போட்டியிட்டு வென்றுள்ளது டொயோடா நிறுவனம். வோல்க்ஸ்வேகன் மற்றும் அமெரிக்காவின் ஜெனெரல் மோட்டார்ஸ் நிறுவனம் முறையே 9.93 மற்றும் 9.8 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன. கடந்த வருடத்தின் முதல் பாதியில் வோல்க்ஸ்வேகன் வாகனங்கள் தான் விற்பனையில் முதலாவதாக இருந்தது. ஆனால் அதன் பின் எமிஷன் ஊழலில் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் சிக்கியதால் அதன் விற்பனை கடுமையாக பாதித்தது. அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு டொயோடா நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்தது. “ டொயோடா நிறுவனத்தின் இந்த ஆதிக்கம் இன்னும் 5 வருடங்களுக்காவது தொடரும் , வோல்க்வேகன் நிறுவனம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய பின்னடைவில் இருந்து மீண்டு வந்து , தங்களது வியூகங்கள் மற்றும் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவது , அதிலும் குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் தங்கள் முந்தைய நிலையை அடைவது என்பது வோல்க்ஸ்வேகன் நிறுவனத்திற்கு மிகவும் கடினமான சவாலாக இருக்கும்" என்று பிரபல ஆய்வாளர் திரு. ஜோவ் ஜின்ஷெங் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த மாத துவக்கத்தில் 2% விற்பனை வீழ்ச்சியை டொயோடா பதிவு செய்திருந்தது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 0.2% வளர்ச்சியை பதிவு செய்து 9.8 மில்லியனாக இருந்தது. கடந்த ஆண்டு டொயோடா நிறுவனத்தின் உலக மொத்த விற்பனையை பொறுத்தவரை 0.8% சதவிகிதம் குறைந்து 10.15 மில்லியன் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு வாகன உலகில் தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு, 51% பங்குகளை வைத்துள்ள டைஹாட்சு யூனிடின் மீதி பங்கினை கையகப்படுத்தி கொள்ள டொயோடா முடிவு செய்துள்ளது.
மேலும் வாசிக்க அடுத்த தலைமுறை டொயோட்டா இனோவா: ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் காட்சிக்கு வைக்கப்படுகிறது