• English
  • Login / Register

தைஹட்சு நிறுவனத்தை கையகப்படுத்துவது குறித்து டொயோடா முடிவெடுக்க உள்ளது.

modified on ஜனவரி 29, 2016 10:46 am by sumit

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

சிறிய வாகன தயாரிப்பாளரான தைஹட்சு மோட்டார் கம்பனி லிமிடெட்டின் எஞ்சி உள்ள பங்குகளையும் வாங்கி , தனது விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக அந்நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்துவது குறித்து டொயோடா நிறுவனம் விரைவில் முடிவெடுக்க உள்ளது. தற்போது  தைஹட்சு நிறுவனத்தின் 51.2% பங்குகளை  நிறுவனம் தன வசம் வைத்துள்ளது. 

இது சம்மந்தமான முடிவை இன்று (வெளிக்கிழமை) எடுக்க உள்ளதாக டொயோடா தெரிவித்துள்ளது. ப்ரேன்ட் மதிப்பை உயர்த்துவது மற்றும் நிறுவனத்திற்கு கூடுதல் வலு சேர்ப்பதுமே இந்த கையகப்படுத்துதலின் முக்கிய நோக்கமாகும். இந்த கையகப்படுத்தும் நடவடிக்கைக்காக டொயோடா நிறுவனம் செலவு செய்யப்போகும் தொகை $3 பில்லியன் ஆகும்.

டொயோடா நிறுவனம் தொடர்ந்து நான்காவது வருடமாக விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 10.151 மில்லியன்  வாகனங்களை  உலகம் முழுக்க கடந்த 2015 ஆம் ஆண்டு டொயோடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.“ டொயோடா நிறுவனத்தின் இந்த ஆதிக்கம் இன்னும் 5 வருடங்களுக்காவது தொடரும் , வோல்க்வேகன் நிறுவனம் தங்களுக்கு  ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய பின்னடைவில் இருந்து மீண்டு வந்து ,  தங்களது வியூகங்கள் மற்றும் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவது , அதிலும் குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் தங்கள் முந்தைய  நிலையை அடைவது என்பது வோல்க்ஸ்வேகன் நிறுவனத்திற்கு  மிகவும் கடினமான சவாலாக இருக்கும்" என்று பிரபல ஆய்வாளர் திரு. ஜோவ் ஜின்ஷெங் கருத்து தெரிவித்துள்ளார். 

ஜெர்மன் கார் தயாரிப்பாளர்களான வோல்க்ஸ்வேகன் AG மற்றும் அமெரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் முதல் இடத்துக்கு போட்டியிட்டு வென்றுள்ளது டொயோடா நிறுவனம்.  வோல்க்ஸ்வேகன் மற்றும்  அமெரிக்காவின் ஜெனெரல் மோட்டார்ஸ் நிறுவனம்  முறையே 9.93 மற்றும்  9.8 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன. கடந்த வருடத்தின் முதல் பாதியில் வோல்க்ஸ்வேகன் வாகனங்கள்  தான் விற்பனையில் முதலாவதாக இருந்தது. ஆனால் அதன் பின் எமிஷன்  ஊழலில் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் சிக்கியதால் அதன் விற்பனை கடுமையாக பாதித்தது. அந்த சந்தர்ப்பத்தை  சரியாக பயன்படுத்திக் கொண்டு  டொயோடா நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்தது.     

வரும்  2016 ஆட்டோ எக்ஸ்போவில் தன்னுடைய வெற்றிக் கொடியை கம்பீரமாக பறக்க செய்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளது டொயோடா நிறுவனம்.  இன்னோவா வாகனங்களின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் , பார்சூனர் மற்றும் கரோலா ஆல்டிஸ் ஹைப்ரிட் வாகனங்களை நடக்க உள்ள இந்த மாபெரும் வாகனத் திருவிழாவில் காட்சிக்கு வைக்க உள்ளது.

இதையும் படிக்கவும்  இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த தலைமுறை இன்னோவாவின் பெயர் யூகம்: டொயோடா இன்னோவா க்ரிஸ்டா

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience