வங்காளதேசம், பூட்டான், இந்தியா, நேபாள் ஆகிய நாடுகள் நடத்தும் ஃப்ரென்ட்ஷிப் மோட்டார் ரேலி 2015-க்கு டொயோட்டா ஆதரவு
published on நவ 16, 2015 01:05 pm by raunak
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
வங்காளதேசம், பூட்டான், இந்தியா மற்றும் நேபாள் (BBIN) ஆகிய நாடுகள் சேர்ந்து நடத்தும் ஃப்ரென்ட்ஷிப் மோட்டார் ரேலி 2015-க்கு, டொயோட்டா நிறுவனம் தனது ஆதரவையும், பங்கேற்பையும் அறிவித்துள்ளது. இந்த போட்டி (ரேலி) நவம்பர் 14 ஆம் தேதியான இன்று (நேற்றுமுன்தினம்) புவனேஸ்வர் நகரில் இருந்து கொடி அசைத்து துவக்கப்பட்டது. புவனேஸ்வரில் நடந்த இந்த கொடி அசைத்து துவக்கி வைக்கும் விழாவில், MoRTH செயலாளர் திரு.விஜய் சீப்பிர், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் துணை தலைவர் மற்றும் முழுநேர இயக்குநர் திரு.சேகர் விஸ்வநாதன், மற்றும் இதில் பங்கேற்கும் நாடுகளுக்கான தூதுவர்கள் / மேல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போட்டி வரும் டிசம்பர் 2 ஆம் தேதி, கொல்கத்தாவில் வைத்து நிறைவு பெறும்.
இந்த ஜப்பான் நாட்டு வாகன தயாரிப்பாளர் BBIN ஃப்ரென்ட்ஷிப் ரேலிக்காக, தனது ஃபார்ச்யூனர் மற்றும் இனோவா ஆகிய கார்களை அளிக்க உள்ளார். இந்த போட்டியின் மூலம் துணை-பகுதிகள் இடையிலான தொடர்பை ஏற்படுத்துதல், சிறந்த வாய்ப்புகள் மற்றும் இப்போட்டியில் பங்கேற்கும் 4 நாடுகளின் மக்கள் இடையிலான தொடர்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக வைத்து இப்போட்டி நடத்தப்படுகிறது. மேலும் சாலை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான டிரைவிங் ஆகியவற்றை குறித்து மக்களுக்கு கற்றுக் கொடுக்க விரும்பும் டொயோட்டா நிறுவனம், அதற்காக வரும் (நவம்பர்) 25 ஆம் தேதி கவுகாத்தியில் கருத்தரங்கம் ஒன்றை நடத்த உள்ளது.
இப்போட்டியை குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் துணை தலைவர் மற்றும் முழு நேர இயக்குநரான திரு.சேகர் விஸ்வநாதன் கூறுகையில், “இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில், டொயோட்டாவை சேர்ந்த நாங்களும் ஒரு அங்கமாக சேர்ந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். சமுதாயத்தில் ஒரு முழுமையான வளர்ச்சியை அளிக்க அரசு மற்றும் பல்வேறு மாநில துறைகள் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அதற்கு நாங்கள் ஆதரவாக செயல்படுவதில் பெருமை அடைகிறோம். அண்டை நாடுகளுடன் உள்ள இசைவான தொடர்பின் மூலம், பல புதிய மற்றும் சிறந்த வாய்ப்புகளை பெற எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த அதிக தொடர்பின் மூலம் முதன்மையாக, சாலை பாதுகாப்பிலும் அக்கறை செலுத்தப்படுகிறது. அதே நேரத்தில் நாம் எல்லைகளை மீறும் போது, பாதுகாப்பாக வாகனம் ஓட்டும் பழக்கங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஒரு விரிவான அணுகுமுறையை பின்பற்றுவதும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய MoRTH செயலாளர் திரு.விஜய் சீப்பர் கூறுகையில், “BBIN ஃப்ரென்ஷிப் ரேலியின் மூலம் இதில் பங்கேற்கும் நாடுகள் இடையிலான கூட்டுறவு மற்றும் ஒருவர் மீது மற்றொருவர் கொள்ளும் நம்பிக்கை, நட்பில் இன்னும் வலிமை ஆகியவற்றை பெற முடியும். இந்த அணுகுமுறையின் மூலம் மக்கள் இடையிலான இணைப்பு வலிமை கொண்டதாக நிறுவ உதவி செய்யும். இது போன்ற பல கலாச்சார நிகழ்ச்சிகளை எதிர்காலத்தில் இன்னும் அதிக அளவில் நடத்த முடியும் என்று நம்புகிறோம். இந்நிகழ்ச்சியில் டொயோட்டா நிறுவனத்தின் பங்கேற்பு கிடைத்ததற்கும், சாலை பாதுகாப்பிற்கான முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதற்கான அவர்களின் ஆதரவையும் எண்ணி, நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful