உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளர் என்ற பெயரை இந்த வருடமும் டொயோடா தக்கவைத்துக் கொண்டுள்ளது.
published on டிசம்பர் 29, 2015 12:04 pm by akshit
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
புது டெல்லி:
டொயோடா மோட்டார் கார்பரேஷன் சர்வதேச கார் விற்பனை கணக்கெடுப்பில் வோல்க்ஸ்வேகன் AG நிறுவனத்தை தொடர்ந்து ஐந்தாவது மாதமாக இரண்டாவது இடத்திற்கு தள்ளி முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. டொயோடா நிறுவனம் டீசல் ஊழல் விவகாரத்தில் சிக்கி பெரும்பாடு பட்டு வரும் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தை விட இந்த வருடம், இந்த தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 2,00,000 வாகனங்கள் கூடுதலாக விற்பனை செய்து, இந்த மாதமும் விற்பனையில் முதலிடத்தை தக்கவைத்து கொள்ளும் என்றே தெரிகிறது.
டொயோடா நிறுவனம் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில் 9.21 மில்லியன் வாகனங்களை விற்றுள்ளது. இதே கால கட்டத்தில் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் 9.10 மில்லியன் கார்களை விற்பனை செய்துள்ளது. அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஜெனெரல் மோட்டார்ஸ் நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மானிய கார் தயாரிப்பாளர்களான வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தினர் , தங்கள் நிறுவனத்தில் எமிஷன் விதிமுறைகளில் ஊழல் நடந்திருப்பதாக ஒப்புக்கொண்டு , உலகம் முழுக்க தங்களது சுமார் 11 மில்லியன் டீசல் வாகனங்களில் குறைபாடுள்ள பாகம் பொருத்தப்பட்டு விட்டதாக பகிரங்கமாக அறிவித்த பின் , 2. 2 சதவிகிதம் விற்பனை வீழ்ச்சியை நவம்பரில் ( 2014 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ) இந்நிறுவனம் பதிவு செய்தது. அக்டோபரிலும் விற்பனை குறைந்தே காணப்பட்டது.
இதன் காரணமாக வோல்க்ஸ்வேகன் குழுமம் இந்தியா , 1.2-லிட்டர், 1.5-லிட்டர் , 1.6-லிட்டர், மற்றும் 2.0-லிட்டர் EA 189 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு 2008 முதல் 2015 ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட சுமார் 3,23,700 கார்களை திரும்பப் பெற்றுக்கொள்ள முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த திரும்பப்பெறும் நடவடிக்கையினால் நேரடியாக 1,98,500 வோல்க்ஸ்வேகன் ப்ரேன்ட் கார்களும் , ஸ்கோடா மற்றும் ஆடி நிறுவன வாகனங்கள் முறையே 88,700 36,500 வாகனங்கள் என்ற எண்ணிக்கையிலும் பாதிப்புக்கு உள்ளாயின. இந்த சர்ச்சைக்குரிய EA 189 டீசல் என்ஜின் , அனுமதிக்கப்பட்ட அளவை விட 40 மடங்கு அதிகமாக நைட்ரஜன் ஆக்சைட் வாயுவை வெளியிட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்